அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை - தலைவர் புதிதாகப் பதவியேற்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழியல்துறை மரபில் ஒருபெண், துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பது, இதுவே முதல்முறையாகும். 31.01.2013 அன்று முதல் 24 -வது துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அவர்கள் 1979 இல் பேராசிரியர் க. வெள்ளைவாரணம் அவர்கள் துறைத் தலைவராக இருந்தபொழுது விரிவுரையாளராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியேற்றார்கள். தொய்வின்றி 34 நான்கு வருடங்கள் தமிழுக்குத் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள். இவர்களுடைய முனைவர் பட்ட ஆய்வு தமிழ் இலக்கியங்களில் முருகக் கடவுள் என்பதாகும். இவ்வாய்வின் சிறப்பைப் பாராட்டி தமிழ்வாகை பரிசில் என்னும் விருதை சேலம் தமிழ்ச்சங்கம் வழங்கிச்சிறப்பித்தது. 2002- இல் மலேசியாவில் நடந்த பன்னாட்டு முருகன் கடவுள் தொடபான மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள். காசியில் நடைபெற்ற பத்தி இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்கள். இவர்களின் சிறந்த நெறிகாட்டுதலின் கீழ் 10 மாணவர்கள் முனைவர்ப் பட்டமும், 35 மாணவர்கள் இளம் முனைவர் பட் டமும் ...