புதிய வகையான இலக்கிய ஆக்கங்கள், சிந்தனைகள் மரபிலக்கியங்களைப் பதிப்பிக்கும் / ஆராயும் முயற்சிகள் , தமிழ் தேசிய இலக்கியங்கள் கட்டமைக்கும் போக்கு / தனித்தமிழ் இயக்கங்கள் என இயங்கி வந்த மறுமலர்ச்சி காலகட்டத்தில் கல்வியாளராக அறிமுகமாகும் மு.வ அவர்கள், பல்வேறு இலக்கிய வகைசார் இயங்கியலில், புலவர் மரபில் ஊடாடிக் கிடந்த திருக்குறளை வணிக / பொதுஜன தளத்திற்கு நகர்த்தும் பணி குறிப்படத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் இடை காலங்களில் திருமண விழாக்களில் பரிசளிக்க கூடிய நூலாக அவருடைய திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலும், சைவச்சித்தாந்தம் வெளியிட்ட கையடக்க திருக்குறள் தெளிவுரையும் இடம்பெற்றதோடு, திருக்குறள் தெளிவுரை பல இலட்சம் படிகள் விற்று தீர்ந்து மீள பல பதிப்புகள் கண்டது / காண்கிறது. இவருக்கு முன் திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியுள்ள நிலையில் மு.வ உரை விதந்து பேசப்பட்டு விற்கப்பட்டத்திற்கான காரணங்கள், திருக்குறள் உரைமரபில் இவருரை பெறும் இடம் ஆகியன குறித்த உரையாடலாக இக்கட்டுரை அமைகின்றது . சுதந்திரத்திற்கு முன் எழுத தொடங்கும் மு.வ 1939 இல் குழந்தைகள் பாட்டு எ...