இலக்கணமும் சமூக உறவுகளும்
சமூக இயங்கியலுக்கும் மொழிக்குமான உறவு காலத்தால் ஏற்பட்டும் மாற்றத்தை பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் இலக்கணங்களை அணுகுகிறது இந்நூல் .உற்பத்தி முறைகளுக்கு ஏற்ப ஒரு சமூக குழுவின் அரசியல்/ சட்டம், பண்பாட்டு நிலை, கருத்து நிலை மேற்கட்டுமானம் ஆகியவற்றில் இயல்பாக மாற்றங்கள் நிகழும் என்பதை விஞ்ஞான முறையில் விளக்க முற்படுகிறது. கி.பி 4 தோன்றியதாக கூறக்கூடிய தொல்காப்பியத்தையும் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலையும் அடிப்படையாக கொண்டு திணை பகுப்பு, பால்,எண், வேற்றுமை வினையமைப்பு ஆகியவற்றில் சமூக மாறுதலுக்கு ஏற்ப மொழி சமூகத்தோடு கொண்டிருந்த உறவினை ஆராய்கின்றது இந்நூல்.