19-ஆம் நூற்றாண்டு ஆளுமை ரெவரெண்ட் ஜார்ஜ் உக்லோவ் போப்(1820 – 1908)
ஐரோப்பிய மதபோதக மரபில் உருவாகி, சமயப் பரப்பலுக்காகத் தமிழகத்துக்கு வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜி. யு. போப். இவர் மதபோதகப் பரப்பலின் ஊடாக தமிழ்மொழிக்குத் தம்முடைய இறுதி காலம் வரை பங்களிப்பை நிகழ்த்தியுள்ளார். வாழ்க்கைச் சுருக்கம் 1820 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நோவா ஸ்கோஷியோவிலுள்ள பிரின்ஸ் எட்வட் தீவில் ஜான் போப், கேதரின் யுக்ளோ என்னும் இணையருக்கு மகவாய்ப் பிறந்தார். இவருடன் பிறந்தோர் பதின்மர் அறுவர் ஆண்கள் நால்வர் பெண்கள். இவருடைய சகோதரர்கள் மதபோதகர்களாக விளங்கினர். இவரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு செயல்பட்டுவந்தார். ஆங்கிலம், எபிரேம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றவர் போப். இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென விரும்பியதால் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சிப்பெற்றார். தமிழகத்தை நோக்கி கப்பலில் வரும்பொழுது தமிழை நன்கு பேசவும் எழுதவும் கற்றார். தமிழகம் வந்த பிறகு ஆரியங்காவு என்னும் ஆசிரியரிடத்தும் மகாவித்துவான் இராமானுசக் கவிராயரிடத்தும் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். 1864 இல் மறைநூற் புலவர் பட்டம்( D.D) 1886 இல் ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் எம்.ஏ.பட்டம்,1906 இல் ராயல்...