இடுகைகள்

ஜூலை, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமணத்தில்.......

படம்
சிலப்பதிகாரம் மூன்று கண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டுள்ளது.முதல் காதையான மங்கலவாழ்த்துப் பாடலில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கும் திருமண நிகழ்ச்சியை விவரிக்கின்றார் இளங்கோவடிகள்.ஒரு திருமணம் என்றால் எப்படி நடக்கும்,அதில் யாரெல்லாம் பங்கு பெறுவார்கள்,அவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை மிக அழகாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திகின்றார். திருமண நாளில் முரசு முதலியன இயம்பின,மத்தளம் முதலியன அதிர்ந்தன,சங்கம் முதலியன முழங்கின,மங்கல அணி அரசன் வெண்குடை கீழ் உலா வருவது போல் அந்நகரினைச் சுற்றி எடுத்து வந்தனர். திருமண மண்டபத்தில் ஆழாகன பூவேலைபாடுகள் நிறைந்து,அப்பூவேலைப்பாடு செய்துள்ள தூண்களில் வயிரமணிகள் பதிக்கப்பெற்றுள்ளன.மண்டபத்தின் மேலே நீல பட்டினால் அலங்காரம் செய்யப்பெற்று அதில் முத்துக்கள் தொங்கவிடப்பெற்றுள்ளன. அம் மண்டபத்தில் அழகிய பெண்கள் தங்களை நன்றாக அலங்காரம் செய்து கொண்டு,மேனிமுழுதும் பொன்னாலாய நகையினை அணிந்திருப்பதால் விளங்குகின்ற மேனியை உடையராய் உள்ள அவர்கள் விரைந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும்,மலர்களை கையில் ஏந்திகொண்டும்,தங்களுக்குள்ளே பேசிக்கொண்டும்,சிலர் பாடிக்கொண்ட

சிலப்பதிகாரம்

படம்
நமது தொன்மையான இலக்கியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.ஐம்பெருங்காப்பியங்களுள் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப்பெறுவன சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும்.மணிமேகலை ஒரு சமயகாப்பியமாத் திகழ,சிலப்பதிகாரம் வாழ்வியலையும்,நமது பண்பாட்டையும் உணர்த்தும் காப்பியமாகத் திகழ்கின்றது.சேர,சோழ,பாண்டி மன்னர்களைப் பற்றியும் ,அங்குள்ள மக்களின் வாழ்க்கைநிலையினைப் பற்றியும் எடுத்தி இயம்பும் காப்பியமாக படைத்துக்காட்டியுள்ளார் இளங்கோவடிகள். அதுபோலவே தமது காலத்தில் நிலவிய சமய வேறுபாடுகளைக் களைந்து ,சமயங்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றுள்ளார்.மக்களுக்கிடையே இருந்த இனவேறுபாட்டையும் சமன்செய்ய முயன்றுள்ளார்.மன்னர்களைப் பற்றியே பாடிக்கொண்டும் காப்பியம் இயற்றியும் இன்புற்றுகொண்டு இருந்தவர்கள் மத்தியில் ,குடிமக்களையும் பாடி காப்பியம் படைக்கலாம் எனப் படைத்துக் காட்டி புதுதடத்தைப் பதித்தவர் இளங்கோவடிகள். சிலம்பு கதைக்கு மூலக்காரணமாக அமைந்ததால் இக்காப்பியத்திற்குக் சிலப்பதிகாரம் எனப் பெயர் வரக் காரணமாயிற்று.யாருடைய சிலம்பு காரணமாக இருந்தது,அதாவது கோப்பெருந்தேவியின் சிலம்பா,கண்ணகியின் சிலம்பா என்பதில் அறிஞர்களுக

படித்ததில் பிடித்தது

அண்மையில் ஒரு ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கத்தைப் படித்தேன் மிகவும் ரசித்தேன்.அக் கவிதையின் ஆசிரியர் ஜேம்ஸ்வெல்டன் ஜான்ஸன்.கவிதையின் தலைப்பு "Sence You Went Away" என்பது .பிரிவின் வலியினைப் பதிவுசெய்துள்ளார்.அக்கவிதையை நீங்களும் படித்துப் பாருங்களேன். நீ என்னை விட்டு சென்றதில் இருந்து........ நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து, தோன்றுகினது எனக்கு, விண்மீண்கள் அவ்வளவாக மின்னுவதில்லை என, கதிரவன் ஒளியினை இழந்துவிட்டான் என், ஒன்றும் சரியாக நிகழ்வதில்லை என. நீ என்னை விட்டுச்சென்றதிலிருந்து தோன்றுகிறது எனக்கு, வானம் வெளிர் நீலமாய்கூட இல்லை என, எல்லாம் உன்னை விரும்புகின்றன என, நான் என்ன செய்யவேண்டும் எனதெ தெரியவில்லை என. நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து, தோன்றுகிறது எனக்கு, எல்லாம் தவறு என, நாட்கள் இரட்டிப்பு நீண்டதாக உள்ளதென, பறவைக்ள பாட்டினை மறந்து விட்டன என. நீ என்னை விட்டு சென்றதிலிருந்து, தோன்றுகிறது எனக்கு, நான் பெருமூச்சு விடுவதை தவிர்க்க முடியவில்லை என, என் தொண்டை வறண்டு உள்ளது என, கண்களில் நீர்த்திவலைகள் நிரம்பி உள்ளன என.

சான்றோர் சிந்தனைகள்

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழவைப்பதில் தான் இருக்கிறது. ---------மோஹர் பாபா உடற்பயிற்சி உடலுக்கு எவ்வளவு நல்லதோ,படிப்பது அவ்வளவு மனதுக்கு நல்லது. -----------ரிச்சட் ஸ்டீலி நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை. நன்றாக பேசுவது நல்லது தான் ,ஆனால் நன்றாக செய்வது அதனினும் நன்று. ---------கிளார்க் ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை--------டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன். எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து. -------------ஆபிரகாம் லிங்கன். மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை; சென்றதை மறப்பது நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.-----------இங்கர்சால். இருபது ஆண்டு வளர்ச்சி இருபது ஆண்டு மலர்ச்சி இருபதாண்டு மகிழ்ச்சி.----------கம்பர் முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது-------நபிகள் நாயகம் நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.---தாமஸ் புல்லர் எல்லா புண்களுக்கும் காலம் தான் நல்ல களிம்பு; மாற்றம் இயற்கையின் நியதி.-----எட்ஹோ

இயற்கைப் புனைவு

படம்
குறிஞ்சிப்பாடுவதில் வல்லவரான கபிலர், அகநானூற்றில் ஒரு பாடலில் இயற்கையை வெகு அழகாக காட்சிப்படுத்துகின்றார்.அப்பாடலைப் படிக்கும் போது குறிஞ்சி நிலப் பகுதிக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வு நமக்குத் தோன்றும். கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளிக்க கூடிய பசுமையான மலைப் பகுதி ,அங்கு உள்ள மூங்கில் மரங்களை வண்டுகள் துளைத்துள்ளன.அத் துளையின் வழியே காற்றுப் புகுவதால் ஒலி எழுகின்றது.அவ்வொலி குழலிசையாக ஒலிக்கின்றது.அருவியில் இருந்து வீழும் நீரின் ஓசை இனிய முழவின் ஒலியை ஒத்து இருக்கின்றது.மலைப் பகுதியல் விளையாடும் மான் இனங்கள் எழுப்பும் ஒலிபெருவங்கியத்தின் இசையாக விளங்குகின்றது.அங்கு பறந்து திரியும் வண்டுகள் எழுப்பும் ஒலி யாழிசையாக மயக்குகின்றது.இவற்றையெல்லாம் ,அக்காட்டில் உள்ள குரங்குகள் வியந்து நோக்க ,பக்கத்து மலைகளில் தோகை விரிந்நு ஆடும் மயில்கள் விறலியர் போன்று தோன்றுகின்றனவாம். எத்தனை அழகான காட்சி.நம்முடைய முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி ,அதனோடு வாழ்ந்து படைப்புக்களைப் படைத்துள்ளார்கள் பாருங்கள். ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின், கோடை அவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை ம

இணைமொழிகள்

சகர வரிசையில் தொடங்கும் இணைமொழிக்ள. சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். சண்டு சருகு அரிக்கின்றாள். சண்டை சச்சரவு இருக்க கூடாது. சண்டை சல்லியத்திற்குப் போகமாட்டான். சந்தி சதுக்கங்களில் சிலை நிறுத்தப்பெறும். சந்துபொந்தெல்லாம் தேடிப்பார்த்தான். சப்புஞ் சவரும் வாங்கிக்க கொண்டு வந்திருக்கான். சவண்டு துவண்டு கிடக்கிறத். சளித்துப் புளித்துப் போயிற்று. சழிவு நெளிவு இல்லாத பெட்டியாய் வாங்கு. சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது. சாகப்பிழைக்க கிடந்தான். சாடைமாடையாகப் பேசுகிறான். சுவர் சாய்ந்து சரிந்து கிடக்கிறது. வேலையை சாயலாய் மாயலாய் செய்துவருகிறான். அவனைச் சாவிழவு தள்ளவைத்திருக்கிறது. சிக்கி முக்கியாய்க் கிடக்கிறது. உடம்பெல்லாம் சிக்குஞ் சிரங்குமாய் இருக்கிறது. சிட்டிசிரட்டை யெல்லாம் தண்ணீர் ஊற்றிவைத்திருக்கிறது. சிந்திச் சிதறி சீரழிக்கின்றான். சிந்தமணி சிதறுமணியெல்லாம் பொறுக்கிக் கொண்டாள். சிறுதனம் சீராட்டு அவளுக்கு நிரம்பக் கிடைத்தது. சின்னது சிறியதிற்கு ஒன்றுங் காட்டக்கூடாது. சின்னாபின்னமாக்கச் சிதறிகிடக்கிறது. சீட்டுநாட்டுப் போட்டு வைத்திருக்க வேண்டும். சீத்துப்

புலவர்கள் போற்றும் புலவர்கள்

சங்க பாடல்களைப் படிக்கும் போது ,அக்காலப் புவர்களிடையே எவ்விதமான காழ்ப்புணர்வுகளும் இல்லாமல் தம்மை ஒத்த புலவர்களை மதித்துப் போற்றும் பாங்கினைக் காணமுடிகின்றது. புறநானூற்றில் பொறையன் என்னும் புலவர் குறிஞ்சி பாடல்களைப் பாடுவதில் சிறந்தவரான கபிலரைப் போற்றிப் பாடுகின்றார். செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த கேள்ளவி விளங்கு புகழ்க் கபிலன் இன்றுளன் ஆயின் நன்றுமன்!(புறம்,53) கபிலர் பல பொருளையும் அடக்கிய செய்யுளை இயற்றும் செவ்விய நாவையும்,மிகுந்த அறிஞானத்தையும்,பல்லோர் புகழ்ந்து ஏத்தும் சிறப்பினையும் உடையவர் எனப் பாடுகின்றார். மாறோகத்து நப்பசலையார் என்ற புலவரும் கபிலரைச் சிறப்பித்துப் பாடுகின்றார். நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற் அந்த ணாளன் இரந்துசெல் மாக்கட்க் இனியிடன் இன்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்.(புறம்,126) மண்ணில் பரவியுள்ள மக்களுக்கெல்லாம் புலமைக் குறை இல்லாத அந்தணனாகிய கபிலன்,இரந்து செல்லும் புலவர்களுக்கு இனி இடம் இல்லையாகப் பெருகிய புகழ் நிலைக்கப் பாடினான் என்று கபிலரின் கவி திறனைக் கண்டு வியக்கின்றார். பதிற்றுப் பத்தில் பெருங்குன்றூர் கிழார் கபிலரின் பாடலின் சிற

வாழ்வியல் அறம்

வாழ்க்கையின் நெறியை ,வாழும் முறையை நல்லந்துவனார் கலித்தொகைப் பாடலில் மிக அழகாக வடித்துக்கொடுத்துள்ளார்.வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் வாழ்வது என்பதில்லை,இப்படிதான் வாழவேண்டும் என்பதை வரையறுத்துக் கொண்டு வாழ்வது.அவ் வாழ்க்கை கலையினை அறிந்து நாம் வாழ்ந்தால் மண்ணுலகம் பொன்னுலகமாக மாறும்.அவ்வாறு வாழும் கலையைக் கொண்டு இலங்குவது தான் சங்க இல்க்கியப் பாடல்கள்.இதோ .......படியுங்கள் இல்வாழ்க்கை வாழுகிறேன் என்பதன் பயனே பொருள் அற்ற வறியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியினைச் செய்தல். ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாமல் இருப்பது தான். மக்களுக்குரிய உயர்ந்த பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து நடத்தலே. அன்பு என்பது தன் சுற்றத்தாருக்கு தீங்கிழைக்காமல் இருத்தல். அறிவு என்பது என்ன தெரியுமா? அறியாமல் ஒருவர் நம்மிடம் தவறான சொற்ளைப் பயன்படுத்தி பேயுகிறார் என்றால் அதனைப் பொறுத்து போதல் தான். உறவு என்பது நெருக்கமுடையவர்கள் கூடியவர்களின் சொற்களை மறுக்காது இருத்தல். நிறை என்பது பிறரைப் பற்றி சொல்லக்கூடாத செய்திகளைப் பிறர் அறியாமல் காத்தல். முறை என்பது நமக்கு வேண்டியவர் தவறு இழைத்தால் இவர் நம்மவர் தானே

உடன்போக்கு

படம்
உடன் போக்கு என்பது இப்பொழுது ஒடிபோய்விட்டார்கள் என்று சொல்லகிறோம் அல்லவா அதுதான். சங்க இலக்கியத்தில் உடன்போக்கு என்று கூறுகிறார்கள்.இதோ கலித்தொகையில் ஒரு பாடல், காதலித்த இருவர் ஓடிபோகின்றார்கள்,அவர்களை எண்ணி அவர்கள் குடும்பம் வருந்துகிறது,ஆனால் இது தவறில்லை இதுதான் உலகியல் என எடுத்துக்காட்டுவது போல் அமைந்துள்ளதைப் பாருங்களேன். ஒர் பெண்ணும் ஆணும் காதல் வயப்பட்டனர்.அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.பெண் வீட்டில் காவல் அதிகமாக இருந்தது.இந்நிலையில் என்ன செய்வது என்று இருவரும் சிந்தித்தார்கள்.இதற்கு ஒரே வழி வீட்டை விட்டுச் செல்வது தான் எனக் காதலன் கூறி ,நீ உன் வீட்டையும் உன் உறவுகளையும் விட்டு வருவாயா?என்று கேட்கிறான். நீ இருக்கும் இடம் தான் எனக்கு சொர்க்கம்,நீ இல்லாமல் இருக்கும் இடம் நரகமாக அல்லவா இருக்கும் என்று கூறுகின்றாள். உடனே தலைவன் நீயோ பெரிய இடத்துப் பெண் நாம் செல்ல இருப்பதோ பாலை நில வழி உன்னால் வரமுட்டியுமா?என வினவுகிறான். உன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் போது பாலை நிலம் கூட எனக்கு சோலைவனமாக அல்லவா இருக்கும் உன்னுடன் இருந்தால் எந்த துன்பமும் இன்பமாக அல்லவ

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது என்பார்கள் அல்லவா,அதற்குச் சான்றாகத் திகழும் இக் கதையினைப் படித்துப் பாருங்களேன் . ஒரு வேடனின் தினை காட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு யானை வந்து தினையை அழித்துச் சென்று கொண்டு இருந்து.அதனை எப்படியாவது கொல்ல வேண்டுமென முடிவு செய்தான் வேடன்.ஒருநாள் வில்லை எடுத்துக்கொண்டு யானையின் மீது அம்பினைப் பாய்ச்சினான்.யானையின் உடலில் மீது அம்பு தைத்தவுடன் கோபம் கொண்டு,யானை அவனைத் தாக்கியது.அப்பொழுது அருகில் இருந்த பாம்பு புற்றில் வேடன் காலை வைத்து விட்டான். பாம்பு அவனைத் தீண்டியது.அவன் தனது உடை வாளை உருவி பாம்பினைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான்.ஆக யானை வேடனாலும்,வேடன் பாம்பின் நஞ்சாலும்,பாம்பு வேடனின் வாளாலும் இறந்துபட்டன.அந்நிலையில் அவ்வழியே வந்த நரி ஒன்று தனக்கு நிறைய உணவு கிடைத்து விட்டது என மகிழ்ந்து,இந்த யானையின் உடல் ஆறு நாளுக்கு உணவாகும்.வேடனின் உடல் மூன்று நாளுக்கு உணவாகும்,பாம்பு ஒருநாளுக்கு உணவாக போதும்.ஆனால் இப்பொழுது உண்ணுவதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்தித்தது , வேடன் கையில் இருந்த வில்லின் நரம்பை உணவாக கொள்ளலாம் என எண்ணி ,அதனை இழுத்தது ,அதிலோ ஏவ

இணைமொழிகள்

கரவரிசையின் தொடர்ச்சியான இணைமொழிகள்.இது போன்ற இணைமொழிகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாமே. காக்கனும் போக்கனும் கொள்ளை கொண்டு போனார்க்ள. பிள்ளைக்ள காச்சுப்பூச் சென்று கத்திக்கொண்டு இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் காடும் செடியுமாய் இருக்கிறத். காடுமேடாய் அலைந்து திரிந்தான். காதிலே கழுத்திலே ஒன்று மில்லை, காமா சோமா என்று கத்திக் கொண்டு இருந்தார். பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன . காரசாரமற் ற பேச்சு. கானான் கோனான் என்று நாதங்கி கடுக்கன் தொங்குகிறது. கிட்டதட்ட அவன் சாயல். கிட்ட முட்ட அவனை வரவிடாதே. கிண்டி கிளறி எடுத்தான். கிணறு குட்டை இருந்தால் குளிக்கலாம். கிழங்கெட்டை வீட்டில் இருப்பது நல்லது. ஆடு கீரைகுழை தின்னும். கீரியும் பாம்பும் போலப் பகை. குஞ்சுங் குழுவானுமாய் இருக்கிறது அவன் குடும்பம். குட்டி குறுமான் எல்லாம் வந்துவிட்டன. குண்டக்கமண்டக்கமாய் அவனை கட்டித் தூக்கிக் கொண்டு போனார்கள். தரை குண்டும் குழி யுமாய் இருக்கிறது. குணங்குற்றம் யாருக்கும் உண்டு. குணங்க குறிகளைக் கண்டுப்பிடிக்க வேண்டும். கால் குத்தலும் குடைசலுமாய் இருக்கிறது. அரிசியைக் குத்திக்கொழித்து ஆக்கவேண்டும். வீடுவாசல்

காகம் கரைந்தது காதலன் வந்தான்

படம்
காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்று, காதலனை விட்டுப் பிரிந்த தலைவிக்குத் தோழி நன்மொழி கூறுவதாக அமைந்துள்ளது. காதலன் வரைவை எதிபார்த்திருக்கிறாள் தலைவி அவன் வரவில்லை அதனை எண்ணி புலம்பிக்கொண்டு இருக்கிறள் தலைவி.அவளை எப்படி தேற்றுவது என்று எண்ணுகிறாள் தோழி. அப்பொழுது காகம் ஒன்று கரைகின்றது.அதனைக் கண்ட தோழி இன்று கண்டிப்பாக உன்னுடைய காதலன் வந்துவிடுவான் என்று கூறுகின்றாள். எப்படி இவ்வளவு நம்பிக்கை கூறுகிறாய் என்கிறாள் தோழி. அங்கு காகம் கரைகிறது பார்த்தாயா! காகம் கரைந்தால் யரேனும் வருவர்!அது உன் காதலனாக தான் இருப்பான்.கவலையை ஒழி என்றாள். தோழி கூறியவுடன் காதலன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை தலைவிக்கு உண்டாகின்றது.மனம் கலங்காமல் தலைவன் வரவை எதிர் நோக்கியிருந்தாள். அவள் எண்ணிய படியே காதலன் வந்தான். காதலிக்கு ஆறுதல் கூறியதற்காக தோழிக்கு நன்றி கூறி பாரட்டினான். உடனே தோழி ஆறுதல் தந்து நானா ? அல்ல ! அன்று கரைந்த காகம் அல்லவா?ஆகையால் தலைவியின் துன்பத்தை நீக்கிய அந்த காகத்துக்கு, நள்ளி வள்ளலின் காட்டில் உள்ள பசுக்கள் ஏராளம் உள்ளதல்லவா?.அந்தப் பசுவின் நெய்யும்,தொண்

மங்கையும் மந்தியும்

படம்
சங்க இலக்கிய குறுந்தொகைப் பாடல் ஒன்றில் விலங்குகளின் அன்பு வாழ்கையினைக் கூறி வாழ்வியல் கருத்தினைப் புலப்படுத்துகின்றார் கடுந்தோட் கரவீரன் என்னும் புலவர்.இந்த பாடலைப் படிக்கும் போது விலங்குகள் இவ்வளவு அன்புடைவனா என்று தோன்றும்.கள்ளம் கபடம் இல்லாத உண்மையான அன்பு. நிலமோ குறிஞ்சி.குறிஞ்சி என்றால் மலைப் பகுதிதானே.அந்த மலைகள் எங்கும் குரங்குகள் நிறைந்து காணப்பெறுகின்றன.குரங்களின் இயல்பு ஆணும் பெண்ணும் இணைந்து கூட்டங் கூட்டமாக மரங்களுக்கு மரம்,கிளைக்குக் கிளை,பாறைக்குப் பாறை தாவுவது.இப்படி தாவி விளையாடிக் கொண்டு இருக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சில நேரங்களில் தவறி விழுந்துவிடுவதும் உண்டு.அப்படி ஒருநாள் ஒரு ஆண் குரங்கு தவறி விழுந்து இறந்து விடுகிறது.உடனே அதன் மனமொத்த அன்பிற்கினிய காதலியாகிய பெண்குரங்கு கண்ணீர் வடிக்கிறது.கத்துகிறது கதறுகிறது.காதலனைப் பிரிந்த துன்பத்தைத் தாங்க முடியாமல் துடிக்கிறன்றது. தன் துணையில்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது என முடிவெடுக்கின்றது.ஐயோ என் குழந்தை இருக்கிறது என் செய்வேன் என எண்ணுகிறதுஅடுத்த கணம், தன் குழந்தையை நன்கு பேணி வளர்த்து ஆளாக்குவார் யாரென ஆய்

கள்வன் மகன்

படம்
சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேலைநாட்டினரின் வருகையால் நமது நாட்டில் வளர்ச்சியுற்றதாக கருத்து உள்ளது.உரைநடை வடிவில் உள்ள இலக்கிய சிறுகதைகள் வேண்டுமென்றால் வந்து என்று கூறலாம் ஆனால் சிறுகதை படிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடிய செய்யுள்களை நம்முடைய சங்க இலக்கியங்களில் காணலாம். சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை.இந்நூலில் குறிஞ்சிக்கலிப் பகுதில் கபிலரால் பாடப்பட்ட ஒரு பாடலைப் படிக்கும் போது நமக்கு ஒரு சிறுகதையினைப் படித்த உணர்வும் ஒரு நாடகத்தைப் பார்த்தவுணர்வும் தோன்றும். இப்பாடலில் தலைவி தோழியிடம் ,தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக,கபிலர் 16 அடிகளில் அமைந்து பாடியுள்ளார். தலைவி தோழியிடம் ,அழகிய ஒளி பொருந்திய வளையகள் அணிந்த என் அன்புக்கினிய தோழியே நான் கூறுவதை சற்றுக் கேட்பாயா? நாம் சிறு வயதில் வீதியில் விளையாடி திரியும் போது,நல்ல தேர்ந்த கட்டக் கலைஞர்களைப் போல மணவீடுகட்டி விளையாடுவோம்.அப்பொழுது நாம் கட்டிய மணல் வீட்டினைக் காலால் இடறி கலைத்து மிதித்து விட்டு,தலையில் நாம் வைத்திருக்கும் பூக்களையும் பிய்த்து எறிந்துவிட்டு,பூங்காவனத்தில் பந்து வைத்து விளைடு

இணைமொழிகள்

ககரத்தில் தொடங்கும் இணைமொழிகள். சரக்குக் கங்குகரையற்றுக் கிடக்கிறது. கஞ்சிதண்ணீர் அவனுக்குச் செல்லவில்லை. கட்டியும் முட்டியுமாய் இழுதுப்போட்டுருக்கான். எதற்கும் ஒரு கட்டு முட்டு வேண்டும். கடாவிடைகளால் பொருளை விளக்கினார். கண்டது கடியது எல்லாம் சொல்லக் கூடாது. கண்டவன் கடியவனெல்லாம் வந்து சாப்பிடுகிறான். கணக்கு வழக்கு இல்லாமல் எடுத்துச் சென்றான். கண்டந்துண்டமாய் வெட்டு. கண்ணீரும் கம்பலையுமாய் இருக்கிறாள். கண்ணும் கருத்துமாய் காக்கவேண்டும். கத்திக்கதறி அழுதான். கந்தல் கூலமாய் கிடக்கிறது. கப்புங்கவருமாய்க் கிளைத்திருக்கிறது. கந்தலும் பொத்தலும் உடுத்திக்கொண்டு திரிகிறான். கரடு முர டானவன். கரை துறை தெரியவில்லை. கல்லுங் கரடு மான வழி. கல்லுங் கரம்புமாய் கிடக்கின்ற நிலம். கல்வி கேள்விகளில் சிறந்தவன். கல்யாணம் காட்சிக்குப் போகவேண்டும். களங்கமளங்க மற்றுப் பேசவேண்டும். கள்ளங்கவடி ல்லாதவன். கற்பும் பொற்றபும் உடையவள். கற்றோருக்கும் மற்றோருக்கும் விளங்கும் நன். கன்றுகாலி வரும் நேரம். கனவோ நனவோ ? -----------தொடரும்.............

இணைமொழிகள்

இன்று இகர வரிசையில் துவங்கும் இணைமொழிகளைப் பார்க்கலாம். இசகு பிசகாய் நடக்கிறான்,அகப்பட்டுக்கொண்டான். இண்டும் இடுக்குமாய் இருக்கிறது. இயங்குதிணை நிலைத்திணை ஆகிய இருவகைச் சொத்தும் உண்டு. இயலும் செயலும் ஒத்திருக்கும். இழுப்பும் பறிப்புமாய் கிடக்கிறது. இளைத்தும் களைத்தும் போனான். இன்னார் இனியார் என்று அவனுக்கில்லை. ஈகை யிரக்கம் இருக்க வேண்டும். ஈடும்எடுப்பும் அற்றவன். ஈடுசோடு இல்லாதவன். ஈயெறும்பு மொய்க்கும். உடைநடையால் உயர்வு தாழ்வு அறியப்படும் உண்டியுறையு ள் வசதியுண்டு. உண்டுடுத்து வாழவேண்டும். உருட்டும் புரட்டும் எண்ணிடம் பலிக்காது. உருண்டு திரண்டு இருக்கிது. உருவும் திருவும் ஒத்த காதலர். உள்ளது உரியது எல்லாம் விற்றுவிட்டான். உற்றார் உறவினர் உதவுவர். ஊண்உடை சிறக்க வேண்டும். ஊண் இறக்கம் ஒழித்து வேலை செய்தான். ஊதியமும் இழப்பும் வணிகத்திற்கியல்பு. எக்கச்சக்கமாய் மாட்டிக் கொண்டான். எக்காளமும் ஏடாசியுமாய் பேசுகிறான். எய்படை எறிபடை கொண்டு பொருதார்கள். ஏங்கித் தேங்கித் தவிக்கிறான். ஏட்டிக்குப் போட்டியாய் செய்கிறான். ஏமமும் சாம்மும் கூத்தாடுகிறான். ஏழை பாழை பிழைக்க வேண்டும். ஏற்றதாழ்

இணைமொழிகள்

நேற்று அகரத்தில் தொடங்கும் சில இணை மொழிகளைப் பார்த்தோம் இன்று ஆகாரத்தில் தொடங்கும் சில இணைமொழிகள்.உங்கள் பக்கத்தில் வழங்கப்பெறும் இதனைப் போன்ற இணைமொழிகள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே. ஆக்கமும் கேடும் அனைவருக்கும் உண்டு. ஆக்கியரித்துப் போடுகிறவள் அம்மா. ஆட்டமும் பாட்டுமா இருக்கிறது அங்கு. ஆடல் பாடல் கண்டு மகிழுங்கள். காலை ஆட்டி அலைத்து வருகிறாள். தூணை ஆட்டி அசைத்துப் பார்த்தேன். ஆடிப்பாடிச் செல்லுங்கள். ஆடியசைந்து நடக்கின்றான். ஆடையணி யலங்காரம் வேண்டும். ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறு. ஆண்டான்அடிமை வேறுபாடில்லை. ஆதாளி பாதாளியாய் இருக்கிறது. ஆதியந்தம் இல்லாதவன். ஆய்ந்தோய்ந்து பார்த்து நட்பு கொள்ள வேண்டும். நேற்றிரவு கண்ணனுக்கு ஆயிற்று போயிற்று என்று கிடந்தது. அவன் ஆயிற்றா போயிற்றா என்று அரட்டினான். ஆலே பூலே என்று அலப்பிக்கொண்டு இருக்கிறான். ஊர் முழுதும் ஆழும்பாழுமாய்க் கிடக்கிறது. ஆளும் தேளும் அற்ற இடம். அவனை ஆற்றி தேற்றி வை. ஆற அமர காரியம் செய்ய வேண்டும். ஆனைக்கும் பூனைக்கும் உள்ள தூரம். நாளை தொடரும்...............

இணைமொழிகள்

எழுத்து நடையில் பல்வேறு வகைகள் உள்ளன.ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடையைப் பின்பற்றுவர்.சிலருடைய எழுத்து நடையைப் பார்த்தவுடன் இவருடைய எழுத்து தான் என்று கண்டுப் பிடித்துவிடுவோம்.சிலருடைய எழுத்தில் காணப்படும் சொல்லாட்ச்சியைக் கொண்டும் இவர் எழுத்து என்று கூறிவிடலாம்.நம் எழுதும் போது சில இணைச் சொற்களைப் பயனபடுத்தலாம் அவ்வாறு பயன்படுத்தும் போது நம் எழுத்து நடை சிறப்பாக அமையும்.அவ்வாறு எழுத்து நடையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள சில இணைச் சொற்களைப் பார்க்கலாம். அக்கம் பக்கம் பார்த்துப் பேசு அக்குத் தொக்கு இல்லாதவன். அகடவிகடமா பேசுகிறான் அடங்கிவொடுங்கி யிரு. அஞ்சிலே பிஞ்சிலே அறியவேண்டும் அடரடி படரடியாய்க் கிடக்கு. அவன் இவனுக்கு அடிதண்டம் பிடிதண்டம் அடுகிடை படிகிடையாய் கிடத்தல் அடிப்பும் அணைப்புமா இருக்க வேணுடும். அடையலும் விடியலும் குருடுக்கில்லை. அண்டம் பிண்டம் ஒத்த இயல்புடையன. அண்டை வீடு அடுத்த வீடி பகையிருக்க கூடாது. அண்டை அயலெல்லாம் தேடி பார்த்தேன். அந்தியும் சந்தியும் பூசை நடக்கிறது. அயர்ந்தது மறந்தது எடுத்துக் கொண்டு போ. அரதேசி பரதேசிக்கு உணவளிக்க வேண்டும். அரிசி தவசி விலையேறி விட்டது. அருவுருவாகிய

சொற்பொருள்

தமிழ் சொற்கள் சில பொருள் ஒன்று என எண்ணுவோம் ஆனால் அவற்றுள் சில வேறுபாடுகள் இருக்கும் என்பதை நாம் அறிவதில்லை.எடுத்துக்காட்டாக வணங்குதல் ,தொழுதல் என்னும் சொற்களுக்கு பொருள் ஒன்று என எண்ணுவோம்.ஆனால் இரண்டு சொற்களுனுடைய பொருளில் சிறு வேறுபாடு உண்டு. வணங்குதல் என்பது தலையினுடைய தொழில் என்றும் தொழுதல் என்பது கையினுடையச் செயல் என்றும் கூறப்பெறுகிறது.இதற்கானச் சான்று திருக்குறளில் காணப்பெறுகிறது. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை இக்குறளில் ‘வணங்கா தலை’ என்ற சொற்களை நோக்கும் போது வணங்குதல் என்பது தலையினுடைய தொழில் எனபதை அறியலாம். அதேபோல் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்ற குறளில் 'கைகூப்பி தொழும்' என்ற சொற்களைப் பார்கும் போது தொழுதல் கையினுடைய செயல் என்பதனை அறியலாம்.இஸ்லாம் மதத்தினர் இறை வழிப்பாட்டினைத் தொழுகை என்று கூறுவதும் இங்கு நினையத் தகும். அது போலவே ஐம் புலன் ஐம் பொறி என்பதற்கும் வேறுபாடு உண்டு. பொறி என்றால் மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்ற உறுப்புக்களைக் குறிக்கும்.புலன் என்றால் அதனால் நடக்க்கூடிய செயலினைக் குறிக்கும்.அதாவது உணர

திருநாவுகரசு சுவாமிகள் வரலாறு

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் கொள்கையில் உறுதியாக நின்று உழவாரப்பணி மேற்கொண்டு, சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய போது தன்னை துன்புறுத்திய மகேந்திர பல்லவ மன்னனைச் சைவ சமயத்தின் பால் ஈடுபடவைத்து,பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர்பெற்று எழச்செய்து,திருமறைக்காட்டில் பாடியே கோயில் வாசலை திறக்கச்செய்து,எனப் பல செயற்கரிய செயல்களைச் செய்து 80 வயது வரை திணைத்துனையும் இறைபற்று நீங்காமல், ‘சிவனென்னும் ஓசை யல்ல தறையோ வுலகில் திருநின்ற செம்மை யுளதே’ என இறைதொண்டு ஆற்றி, இறையடி அடைந்தவர் மருள் நீக்கியார் என இயற்பெயர் கொண்டு ,இறைவனால் நாவுக்கரசர் எனவும் திருஞானசம்பந்தர் பெருமானால் அப்பர் எனவும்,தமது வாக்குத் திறத்தால் வாகீசர் எனவும்,தாண்டகம் என்னும் பாவகையைச் சிறப்பாக பாடியதால் தாண்டக வேந்தர் எனவும் அழைக்கப்பெற்ற திருநாவுகரசர் ஆவார். திருமனைப் பாடி என்னும் நாட்டில் உள்ள திருவாமூர் என்னும் ஊரில் வேளாண் மரபு குடி வழிவந்த புகழனார் ,மாதினியார் என்னும் இணையருக்கு மூத்த பெண்ணாக திலகவதியார் என்னும் புகழ்ச் செல்வியார் தோன்றினார். அவர் பிறந்து சில ஆண்டுகள் கழிந்து ஒளி விளங்கு கதிர் போல

பேராசிரியர் எம்.ஏ.சுசீலா

படம்
மதுரை பாத்திமாகல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஒய்வு பெற்று இந்திய தலைநகரான டெல்லியில் வசித்து வருபவர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள். கடந்த சில மாதங்களாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப்பெற்றேன். அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்த குற்றமும் தண்டனையும் என்னும் நூலை இந்த ஆண்டு புத்தக்கணகாட்சியில் வாங்கியிருந்தேன். அந்நூலே அவர்களை அறிய காரணமாக இருந்தது. பிறகு அவர்களுடன் இணையத்தில் மட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தேன் . கடந்த மாதம் அவர்கள் நெறிகாட்டுதலில் முனைவர்பட்ட அய்வு மேற்கொண்டு ,முடித்த பெண்ணுக்கு வாய்மொழித் தேர்வுக்கு மதுரை வருவதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அவர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.அவர்கள் மதுரை வந்தவுடன்,சென்று சந்தித்தேன்.நான் வருகிறேன் என்று கூறிய நாளுக்கு முதல் நாளே சென்றேன்.அவர்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு , என்னோடு நேரத்தைச் செலவிட்டார்கள்.பழகுவதற்கு மிக எளிமையனவராக,இனிமையானவாராக இருந்தார்கள். அவர் அவர்களுடை குடும்ப நண்பர் வீட்டில் தான் தங்கிஇருந்தார்.அவர்களோடு 30 ஆண்டுகால பழக்கமாம்.அவர்களும் மிக அன்போடு வரவேற்றார்கள். இலக்கியத்தைப் பற்

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இந்த கல்வியாண்டிற்கான வகுப்புக்கள் இன்று முதல் தொடங்கப்பெறுகின்றன.

ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு

தமிழ் தகவல் தொழிநுட்பத்திற்கான உத்தமம் அமைப்பு,ஜெர்மன் கோலொன் பல்கலைக்கழகத்தின் இந்திய இயல் மற்றும் தமிழ் ஆய்வு மையம் சார்பில் தமிழ் இணைய மாநாடு அக்டோபர் 23முதல் 25ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இம் மாநாட்டில் கணினிவழி காண்போம் தமிழ் என்ற மையக்கருத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றது.இது தொடர்பான கட்டுரைகளை ti2009@infitt.org என்னும் மின்முகவரிக்கு அஞ்சல் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்களுக்கு ஜெர்மன் செல்ல விசாவும்,தங்குமிடமும் இலவசமாக வழங்கப்பெறுகின்றது.

கருத்தரங்கம்

படம்
காஞ்சிபுரமாநகரில் திருமுறை அருட்பணி அறக்கட்டளைச் சார்பில் 12-7-2009 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணிக்கு நீதியை நிலை நிறுத்தும் அரசர்கள் என்னும் பொருண்மையில் மனுநீதி சோழன் என்னும் தலைப்பில் முனைவர் இரா.செல்வகணபதி அவர்களும்,புகழ்ச்சோழர் என்னும் தலைப்பில் முனைவர் புரிசை ச.நடராசன் அவர்களும்,அரிச்சந்திரன் என்னும் தலைப்பில் முனைவர் மு.சிவச்சந்திரன் அவர்களும் பொழிவுநிகழ்த்தவுள்ளார்கள்.முனைவர் ஔவைநடராசன் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்பிக்கவுள்ளார்கள். நடைபெறும் இடம் ஸ்ரீ ராமா லாட்ஜ்(பேருந்துநிலையம் அருகில்) நெல்லுக்காரத்தெரு காஞ்சிபுரம்