இடுகைகள்

ஜனவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கணமும் சமூக உறவுகளும்

படம்
சமூக இயங்கியலுக்கும் மொழிக்குமான உறவு காலத்தால் ஏற்பட்டும் மாற்றத்தை பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் இலக்கணங்களை அணுகுகிறது இந்நூல் .உற்பத்தி முறைகளுக்கு ஏற்ப ஒரு சமூக குழுவின் அரசியல்/ சட்டம், பண்பாட்டு நிலை, கருத்து நிலை மேற்கட்டுமானம் ஆகியவற்றில் இயல்பாக மாற்றங்கள் நிகழும் என்பதை விஞ்ஞான முறையில் விளக்க முற்படுகிறது. கி.பி 4 தோன்றியதாக கூறக்கூடிய  தொல்காப்பியத்தையும் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலையும் அடிப்படையாக கொண்டு திணை பகுப்பு, பால்,எண், வேற்றுமை வினையமைப்பு ஆகியவற்றில் சமூக மாறுதலுக்கு ஏற்ப மொழி சமூகத்தோடு கொண்டிருந்த உறவினை ஆராய்கின்றது இந்நூல்.

2012 புத்தக கண்காட்சி

2012 க்கான புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்று வந்தேன். ஞாயிறு 12 மணியளவிலேயே  கூட்டம் நிரம்பி வழிந்த்து.  புத்தக கண்காட்சியைக் காண இவ்வளவு கூட்டம் பிரமிக்க வைத்தது. ஒரு நாளில் அனைத்து புத்தக கடைகளுக்குள்ளும் நுழைந்து பார்க்கும் சாத்தியம் வாய்க்கவில்லை. குறிப்பாக தமிழ் இலக்கிய, இலக்கணம் ,மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்தான புத்தகங்கள் மட்டும் வாங்கியதால் அவை தொடர்பாக கடைகளுக்கு மட்டமே செல்ல முடிந்தது. இலக்கியம் திறனாய்வு சார்ந்த நூல்கள் இந்த ஆண்டு பெருமளவு இல்லை என்று கூறலாம். சில பழைய புத்தகங்களின் அட்டைகள் மாற்றப்பட்டு காட்சியளித்தன.   ப. அருணாச்சலம் அவர்களின் வைணவ, சைவ, பக்தி போன்ற சமயநூல்களும், ராஜ்.கௌதமனின் ஆரம்பக் கட்ட முதளாலியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்,  கலித்தொகை - பரிபாடல் விளிம்பு நிலை நோக்கு அவரின் மொழிபெயர்ப்பு நூல்களான பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், கதைக் கரூவூலம் சமணக் கதைகள்,  இராம.கி யின் சிலம்பின் காலம்  எம் . வேதசகாயகுமாரின் புனைவும் வாசிப்பும்  ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள், இந்திய ஞானம் தேடலும் புரிதலும்,   அறம் உண்மை மனிதர்களின் கதை பெ.நிர்மலாவ