இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுவெளி - ஆய்விதழ்

தமிழாய்வினை மாற்றுச் சிந்தனைக்கு உட்படுத்தி புது வகை உரையாடலுக்கான களத்தினை உருவாக்கி கொடுக்கும் மாற்று வெளியின் 7 ஆவது இதழாக தமிழ்ச் சமூக வரலாறு புதுப்பார்வைகள் - அணுகுமுறைகள் வெளிவந்துள்ளது. அண்மையில் மறைந்த பேரா.கா.சிவதம்பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பேரா.வீ. அரசு அவர்கள் தமிழ் சமூக வரலாற்றை மீட்டெடுப்பதில் புதிய அணுகுமுறைகளையும், அதன் வழி இலக்கண இலக்கியங்களில் ஊடாடிக் கிடக்கக்கூடிய தரவுகளைச் சேகரித்தும் , முன்செய்த ஆய்வு விவரணைகளை மறு பரீசிலனைச் செய்தும் தமிழ் சமூகம் குறித்த பேரா. கா.சிவதம்பியினுடைய பார்வையினை, பங்களிப்பினை தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஆடை ஏற்றுமதியிம் மூலம் உலகளாவி இணைந்து செயல்படக்கூடிய திருப்பூர் நகர தொழிலாளின் பிரச்சனைபாடுகள் ,உரிமைப் போராட்டங்கள் , அவர்களுக்கு ஏற்படு நெருக்கடிகளைப் புரிந்து கொள்ளவதற்கான திறவுகோளாக எம்.விஜயபாஸ்கரன் அவர்களுடைய கட்டுரையும், அடித்தள மக்கள் மத்தியில் தினதந்தி ,தினமலர் இதழ்கள் ஏற்படுத்தியுள்ள