முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

April, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேருந்து - அனுபவப் பகிர்வு

ஹரணி என்னும் புனைபெயரில் எழுதிவரும் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் பேருந்து நாவலினை அண்மையில் வாசித்து முடித்தேன். கடந்த கால பேருந்து பயணத்தின் ஊடாக பெற்ற அனுபவங்களைப் புனைகதையாக உருவாக்கியுள்ளார். பயணத்தின் போது எதிர்படும் மனிதர்கள் அவர்களுடைய இயல்புகள், அவர்களின் நினைவு வழியே சொந்தங்களின் முகங்களைத் தேடி அவ்வுணர்வுகளைப் பகிர்தல் என விரிகிறது. பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் இவர்களுக்கிடையேன உரையாடல் அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல் என பதிவு செய்யப்பட்டுள்ள தன்மை அவர்கள் குறித்தான புரிதலை உருவாக்குகிறது.