இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

படம்
            இயற்கையோடு இயைந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கையை நவீனம் என்கின்றோம். அதனோடு இன்றளவும் இயைந்து வாழக்கூடியவர்களைப் பழங்குடிகள் என அடையாளப்படுத்துகிறோம். தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வியல் குறித்த ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்வுகளை வாசிக்கும் பொழுது, ஆய்வுகளின் நோக்கம் ஆவணப்படுத்துவது மட்டுமா? வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதா? அம்மக்களை மேம்படுத்டுவதா? அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வாழ்க்கையை அளிப்பதா? என்ற பல்வேறு வினாக்கள் எழுகின்றன.             நீலகிரி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் வசித்துவரும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களோடு ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களின் வாழ்வியல் முறைகளை நுட்பமாக அவதானித்து, அங்குள்ளோரிடம் வாய்மொழியாகப் பெற்ற விவரங்களை அடிப்பட்டையாகக் கொண்டு, தம்முடைய அனுபவத்தையும் இணைத்து தகவல் கிடங்காக மட்டும் இல்லாமல் வாசகர்களை ஈர்க்கும் வகையில் பிலிப் குமார் என்னும் ஊராளன் சே.ச. ஊராளி இனக்குழுவின் வாழ்வியலை நூலாக்கம் செய்துள்ளார். ஊராளி பெயர்க்காரணம், உணவு, வீடு அமைப்பு முறை,