இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

19-ஆம் நூற்றாண்டு ஆளுமை ரெவரெண்ட் ஜார்ஜ் உக்லோவ் போப்(1820 – 1908)

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் சில:

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை

நூல் பதிப்பும் நுண் அரசியலும்...

படம்
நூல் பதிப்பும் நுண் அரசியலும்என்னும் நூல் புலம் பதிப்பகம் வழி வெளிவந்துள்ளது. ஆசிரியர் அ.சதீஷ் கேராளாவிலுள்ள சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.இவரின் பிற நூல்கள் ரசிகன் கதைகள், சங்க இலக்கிய உரைகள், கு.பா.ரா. கதைகள் ஆய்வுப் பதிப்பு, கு.பா.ரா. கட்டுரைகள் ஆய்வுப் பதிப்பு .

அச்சு ஊடகத்தின் வருகையால் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இன்று செம்மொழி என அடையாளப்படுத்திக் கொள்வதற்கான பிரதிகள் , அன்று ஓலைச்சுவடியிலிருந்து அடையாளங் காணப்பட்டு அச்சில் பதிப்பிக்கப்பெற்றன.
பதிப்பிக்கப்பட்ட பிரதிகளின் ஊடாக நிகழ்ந்த அரசியலைத் தக்கச் சான்றுகளுடன் , தான் கலந்த தமிழ், 19 ஆம் நூற்றாண்டுப் புத்தகப் பதிப்பு முறைகளும் உ.வே.சா அவர்களும், அகநானூறு உரைப் பதிப்பு நிகழ்ந்ததும் நிகழவேண்டியதும், பதிப்பாசிரியர் பயன்படுத்தும் அடைமொழிகள் சில விவாதங்கள், தமிழில் மதனநூல் பதிப்பு, திண்ணைப் பள்ளிச் சுவடிகள் பதிப்பும் சிக்கலும், நவீன கதைப் பதிப்புகள் புதுமைப்பித்தனின் கதைப் பதிப்புகளின் பதிப்பு அரசியல் என ஏழு தலைப்புகளில் நூல் பதிப்பும் நுண் அரசியலும் என்னும் நூலில்…