இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனே புயலின் அறுவடை

2011 டிசம்பர் 29 அன்று கடலூர்,புதுச்சேரி பகுதியில் கோரத்தாண்டவம் ஆடிச் சென்ற தனே புயல் குறித்து தனே புயலின் அறுவடை என்னும் ஆவணப்படத்தை தங்கர்பச்சான் பிப்ரவரி 25 அன்று சிதம்பரம் லேனா திரையரங்கில் வெளியிட்டுப் பேசினார். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு வேறு தனே புயல் ஒரு தலைமுறையின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிட்டது. கடலூர் மாவட்டம்  பல  பகுதிகளின் வாழ்வாதாரமாக இருக்க கூடிய பலா,முந்திரி போன்ற மரங்கள் அழிந்த நிலையில், அது போன்று உருவாக்க குறைந்தது இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதுவரை அவர்களின் வழி என்ன? அப்படி மரங்கள் வைத்தாலும் அதனை காவந்து பண்ணுவது எப்படி?நிலத்தடி நீர்மட்டம் இறங்கி போயியுள்ள நிலை இது எப்படி சாத்தியமாகும்? இதற்கு அரசு என்ன தீர்வை கூறப்போகின்றது என்ற வினாவுடன் ?ஆவணப்படம் திரையிடப்பட்டது.48 நாள்கள் அங்கு தங்கி எடுக்கப்பட்டதாக கூறினார். தமிழர் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவேண்டிய  மக்கள் புயல் அறுவடை செய்து சென்ற நிலையில்  அடிப்படை வசதிகள் கூட பழுது நீக்கப்படாமல்  புலம்பி தவிக்கும் மக்களையும், வாங்குவோர் இன்மையால் சுணங்கி போன வியாபரங்களும், அவ்வூர்களில் வசிக்க கூ

“யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்”

படம்
  போராட்டமே வாழ்வாக மாறிய போது எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்னும் துடிப்புடன் தொடங்குகிறது சயந்தனின் ஆறாவடு. ஆறாதவடுவாய் ஈழ மக்களின் உணர்வுக்குள் ஒடுங்கிய போன பல பக்கங்களைப் பேசுகிறது. சிங்கள இராணுவம், அமைப்திபடை, இயக்கம்  மூன்றின் நிலைபாடு வாழ்வினை மீட்டுத் தரும்  என்னும் நம்பிக்கையோடு அமைதிப்படையைக் கொண்டாட்டத்தோடு வரவேற்கும் ஈழ மக்களின் நம்பிக்கையைக் குலைத்து,வெறியாட்டம் ஆடும் அப்படை, சிங்களப்படையின் கொடூரம், மேலும்...

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்பக நூல்கள் 50% கழிவு

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள  கம்பராமாயணம் தவிர மற்ற நூல்கள்  பாதி விலை கழிவிற்கு இந்த வருடமுழுதும் விற்பனைக்கு கிடைக்கும்.