இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளியது எய்த........

இற்றை நாட்களில் புத்தக கண்கட்சிகளுக்குச் சென்றோம் என்றால் அங்குப் பெருமளவில் காணக்கூடிய நூல்கள்,வாங்க கூடிய நூல்களாக இருப்பது தன்னம்பிக்கையூட்டும் சுயமுன்னேற்ற நூல்களாக உள்ளன. சிறகை விரி சிகரம் தொடு,சுயமுன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டி,தன் முயற்சி,நமது இலக்கு என்ன அடைவது எப்படி,நம்மால் முடியும், நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள், நினைப்பதெல்லாம் நடந்துவிடும், வெற்றிக்கு வழிகாட்டி,வெற்றியின் மூலதனம்,தடைக்கு விடைகொடு,உங்களால் வெல்ல முடியும் போன்ற நூல்களைக் கூறலாம்.இந்நூல்களுள் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முப்பாட்டன் வள்ளுவர் கூறிவிட்டார். ஒருவன் வாழ்க்கையில் வெறுமனமே உட்கார்ந்து இருந்தால் காலம் என்ற மண்ணில் தன் அடையாளத்தைப் பதிக்கமுடியுமா? இந்த உலகத்தில் எதனையுமே செய்யாமல் எதனையும் பெற முடியுமா? சுதந்திரம் வேண்டுமென நம்நாட்டவர் கொண்ட வேட்கை தானே அந்நியர்களை இம்மண்ணைவிட்டு விரட்டியது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் வேட்கையாக இருக்க வேண்டும். நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றிபெற முடியுமா என்றால் முட

ஏறுதழுவுதல்........

படம்
சங்க மக்களின் வீரவாழ்வினை எறுதழுவுதலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.வீரம் செறிந்து,கட்டுப்பாடின்றி திரியும் இளம் வயதுடைய,வலிமையான காளையினை அடக்குவதே ஏறுதழுவுதல் எனப்படும் .இப்பொழுது வழக்கத்தில் கூறுகின்றோமே சல்லிக்கட்டு அதுதான் ஏறுதழுவுதல் எனப்படும்.வீறுமிக்க காளையினை அடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை 'ஏறுகோடல்' என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.காளையாகிய ஏற்றினை அடக்க முற்றபடுங்கால் ஏற்படும் துன்பங்களைப் பொருட்படுத்தாது,காளையின் மீது பாய்ந்து தன் வலிமையால் அடக்குவதாதலின்,இடர் மிகுந்த அச்செயல் அவ்வீரனுக்கு அவனது வீரத்தைப் புலப்படுத்தும் செயலாக அமைவதனால் அதனைத் தழுவல் என்னும் சொல்லொடு சேர்த்து ஏறுதழுவுதல் என்று பழந்தமிழர் கூறினர்.இது பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களைப் பார்க்கும் போது ஏறு தழுவுதலில் முல்லை நிலத்து வாழ்ந்த ஆயர் மரபில் வந்த இளைஞர்கள் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளமையைக் காணலாம்.இலக்கண நூல்களும் முல்லை நில மக்களின் தொழில்களுல் ஒன்றாக ஏறுதழுவுதலைக் குறிப்பிட்டுள்ளன. முல்லை நில ஆயர் மக்கள் தம் குடிப்பெண் பருவம்

பிச்சாவரத்தில் ஒரு நாள்.........

படம்
சிதம்பரத்திற்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்றாலும்,பிச்சாவரம் சென்று பார்த்ததில்லை.ஊரில் இருந்து அம்மா குழந்தைகள் வந்திருந்தார்கள் சரி செவ்வாய் கிழமை போகலாம் என்று திட்டம் போட்டு நண்பர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றோம்.திட்டம் போட்டப்படி செவ்வாய் மதியம் 2.15 மணிக்கு ,படகில் செல்லும் போது சாப்பிடுவதற்கு நொறுக்குத் தீனிகள் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு ,எங்களுடைய மகிழ்வுந்தில் கிளம்பினோம்.நான் ஓட்டிக்கொண்டு போனேன். மகிழ்வுந்து கேஸில் ஓடக்கூடியது ,கேஸ் குறைவாக இருந்தது.பெட்ரோல் கால் அளவு இருந்தது.இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவுதானே போய்விட்டு வந்துவிடலாமெனக் கிளம்பிவிட்டோம். பாதி தூரம் சென்றவுடன் கேஸ் தீர்ந்துவிட்டது.உடனே பெட்ரோலுக்கு மாற்றி வண்டியை எடுத்தேன் மெதுவாக சென்றது.நாங்கள் போய் கொண்டு இருக்கும் போது பூனை ஒன்று குறுக்கே வந்தது(பூனை குறுக்கே வருவதில் எல்லாம் நம்பிக்கையில்லை அதுவேறு) எப்படியோ ஒரு வழியாக பிச்சாவரம் போய் சேர்ந்தோம்.ஐந்து பேர் அமர்ந்து செல்ல கூடிய படகு 300 ரூபாய் என்றார்க்ள அதனை வாங்கி கொண்டு படகு ஏறுமிடத்திற்கு முன்னால் வனத்துறையினர் ஒருவருக

வள்ளுவர் கண்ட சமுதாயம்...1

கள்ளுண்ணாமை........ சமுதாயம் என்பது என்ன என்னும் வினாவிற்கு எப்படி விடை கூறலாம்.மனிதர்கள் கூட்டமாக வாழ்வது சமுதாயமா? பன்றிகள் கூடதான் கூட்டமாக வாழ்கின்றன அதனை சமுதாயம் என்று கூறலாமா?முடியாது இல்லையா?அப்பொழுது சமுதாயம் என்பது பகுத்தறிந்து தனக்கு இது தேவை தேவை இல்லை என ஆய்து அறிந்து தெளிந்த சிந்தனை,நல்வழிபட்டு நடந்து பிறரையும் நடத்தி வைப்பவர்கள் நிறைந்த கூட்டத்தையே சமுதாயம் என்று கூற வேண்டும்.ஆனால் இன்று சமுதாயம் எப்படி உள்ளது.எங்கு காணீணும் பொய்கள் புரட்டுகள் ஏமாற்றங்கள்,வஞ்சகங்கள்,இளைய சமுதாயம் பெரும்பாலர் மதுவுக்கு அடிமை,என்றல்லவா இருக்கின்றது.இதனை சமுதாயம் என்று எப்படி ஒத்துக்கொள்வது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முப்பாட்டன் வள்ளுவ பெருந்தகை நாம் வாழ்க்கையில் சிறந்த நெறியைப் பின்பற்றி மேன்மைகளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வாழ்க்கையின் சாரத்தை ஒன்றே முக்கால் அடியில் பிழிந்து சாறாக கொடுத்துள்ளார். அவற்றுள் ஒன்றுதான் கள்ளுண்ணாமை .அறிவினை மயக்கும் கள்ளினை உண்ணுவதால் ஏற்படும் உடல் நலக்கேட்டினையும் ,கள்ளுண்ணுபவனைச் சமுதாயம் எப்படி மதிக்கும் என்பதைப் பற்றி பத்துக் குறள்

இல்வாழ்க்கை

இல்லறம் ஏற்றகும் துணையர் இருவரும் வாழ்க்கையில் எது போல இருக்கவேண்டும் என்பதைப் பல உவமைகளின் வழி நமது இலக்கியங்கள் கூறுகின்றன. இரட்டை மாலைகளை ஒருங்கே ஒருமாலையாக பிணைப்பது போல பொலிவுடையவர்கள் அறிவு,உரு,திரு முதலியவற்றால் ஒப்புமையுடைய தலைவன் தலைவியர் என ஒரு குறுந்தொகைப் பாடல் கூறுகின்றது. துணைமலர் பிணையல் அன்னஇவர் மணமகிழ் இயற்கை(குறுந்தொகை,229) இப்பாலின் மூலமாக நாம் அறிந்து கொள்வது அனைத்திலும் வாழ்க்கை இணையர் இருவரும் சமநிலையில் இருந்தால் அவ்வாழ்க்கை சிறக்கும் என்பதாகும். அன்புடைய தலைவன் தலைவியர் ஓருயிரை இரண்டு உடற்கண்ணே பகுத்து வைத்ததுபோலவும்,இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவையைப் போலவும் ,மணியும் அதனுள் தோன்றும் ஒளிபோல ஒன்று பட்டவர்கள் போலவும் வாழ்வார்கள் என நற்றிணையும் ,அகநானூறும்,சூளாமணியும் கூறுகின்றன. நினக்கு யான்,உயிர்பகுத்தன்ன மாண்பின்னே(நற்றிணை,128) யாமே,பிரிவின் றியைந்து துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே (அகநானூறு,12) நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல மணியுள் பரந்த நீர்போலத் துணிபாம் இணைபிரியாமல் ஒருவர்மேல் ஒருவர் உண்மையான அன்பு கொண்டு வாழும் இனிய இல்லறவாழ்க்கை என்றும் நீர்வற

பழமொழி........

படம்
மிளகு சிறுத்தாலும் வீரியம் போகுமா?(கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?) என்ற பழமொழிக்குப் பொருள் ஒருவரின் குள்ள உருவத்தினைக் கொண்டு அவரை எடை போடகூடாது என்பதாகும்.தோற்றத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரகூடாது என்பதாகும். இதனையே வள்ளுவர் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பர்.மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு என்ற வழக்கு தொடரும் இப்பொருளினையே உணர்த்தும். சிறுமையான தோற்றமுடைய மனிதனுக்கு மிளகும்,அவன் திறமைக்கு மிளகின் வீரியமும் ஒப்பு நோக்கப்படுகின்றன.மிளகு சிறுத்தாலும் வீரியம் போகுமா?போகாது குறையாது.வீரியம் என்று இங்கு சுட்டபெறுவது மிளகின் காரமாகும்.மிளகு அளவில் சிறிதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாதது .இதன் மூலம் யாரிடமும் எத்திறமையும் ஒளிந்திருக்க கூடும் எனப் புலப்படுகின்றது.

இளமை விகடனுக்கு நன்றி...

படம்
எனது பக்கத்தில் வெளியான கட்டுரையை விகடன் குட் ப்ளாக்கில் வெளியிட்டமைக்கு நன்றிகள்.

தொல்காப்பியம்

தெல்காப்பியம் மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றள்ளது.மூன்று அதிகாரங்களும் ஒன்பது இயல்களாக வகுக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு அதிகாரங்களிலும் உள்ள ஒன்பது தலைப்புகளையும் நினைவில் வைத்துக்கொள்ளும் படி நம் முன்னோர் நூற்பா இயற்றியுள்ளனர் . தொல்காப்பிய அகராதி என்னும் நூலில் அத்தொகுப்பு காணப்பெறுகின்றது. அதுபோலவே ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை நூற்பாக்கள் உள்ளன என்பதற்கும் நூற்பாக்கள் இயற்றியுள்ளனர்.இதோ உங்கள் பார்வைக்கு. எழுத்த்திகாரத்தின் இயல் வரிசை நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலாம் உருபியலில் பின்னுயிர் புள்ளி மயக்கம் தெரிவரிய குற்றுகரகம் செப்பு எழுத்த்திகாரத்தின் நூற்பாத் தொகை எழுத்தி காரத்துச் சூத்திரங்க ளெல்லாம் ஒழுக்கிய வொன்பதோத் துள்ளும் - வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள் மேனூற்று வைத்தார் விரித்து. சொல்லதிகாரத்தின் இயல்வரிசை கிளவியாக் கம்மே கிளர்வேற் றுமைசொல் உறவேற் றுமைமயக்க மோங்கும் - விளிமரபு தேற்றும் பெரயர்வினைச்சொல் சேரும் இடையுரிச்சொல் தோற்றிய வெச்சவியல் சொல். சொல்லதிகார நூற்பாத் தொகை தோடவிழ்பூங் கோதாய் சொல்லாதி காரத்துள் கூடிய

குறளின்பம்..........

காமத்துப் பாலில் ஒரு குறள் துனியும் புலவியும் இல்லாயின் காமங் கனியுங் கருக்காயும் அற்று.(1306) இக்குறளுக்குப் பரிமேலழகர் முதிர்ந்த காலமாகிய துனியும் இளைய கலமாகிய புலவியும் இல்லையாயின்,காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். அதாவது மிக முதிருந்த இறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமையாது ஆதலின்,துனியில்லை யாயின் கனியற்று என்றும் கட்டிளமைத்தாய காய் நுகருச் செவ்வித்து அன்றாகலின் புலவி இல்லை யாயின் கருக்காயற்று என்றும் கூறினான்.இவ்விரண்டும் வேண்டும் என்று கூறியவாறு என்று பொருள் கூறுகின்றார். இக்குறளுக்கு பரிபெருமாள் இது தலைமகள் புலவி நீட்டித்தவழி துனி இல்லையாயின் பழம் போலும் இனிமை தரும்;புலவி இல்லையாயின் காய் போல துவர்க்கும் ஆதலால்,இஃது உணர்தற்கு நல்லளவு என்று கூறியது என்று விளக்கம் தருவர். பரிதியார் துனியும் புலவியும் இல்லாத காமம் பழத்தைப் போன்று காயைத் தின்றதற்கு ஒக்கும் என்று உரைகாணுகிறார். பழைய உரையாசிரியர் ஒருவர் துனியும் புலவியும் உண்டாயின் காமம் கனி போல சுவைக்கும்.துனியும் புலவியும் இல்லையாயின் காமம் இளங்காய் போலச் சுவை இல்லாமை பெறும் என்றும், புத்துரை ஆசிரியர்

கலித்தொகை – பதிப்புகள்

படம்
வாய்மொழியாக செவிவழிப் பகரப்பட்டுப் பின்னர் கல்வெட்டுக்களிலும் சுவடிகளிலும், செப்பேடுகளிலும் பதிவு செய்யப்பெற்ற,நம்முடைய பழைமையான ,நூல்கள்,பிரதிகள், கருத்துருக்கள், மேலை நாட்டவரின் வருகைக்குப் பிறகே அச்சில் வலம் வரத்துவங்கின. அச்சுக்கலை, காலனிய ஆட்சிக் காலத்தில்,கிறித்துவ மதப் பாதிரியார்களால் தொடங்கப்பட்டது என்றாலும்,சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. அச்சுக்கலை 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றப்பொழுதும், 19 ஆம் நூற்றாண்டில் தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டு 20 –ஆம் நூற்றாண்டில் செழித்து, படர்ந்து, வளர்ந்து, பல்வேறு புதுமைகளையும் தொழில் நுட்பங்களையும் கொண்டு இலங்குகின்றது. அச்சுக் கலையின் வரவினால் தமிழ் பதிப்புலகம் ஓலைச்சுவடியில் இருந்த நூல்களைச் செப்பம் செய்து பதிப்பித்தல். புதிதாக நூல்கள் எழுதப்பட்டுப் பதிப்பித்தல் என இரு தளங்களில் செயல்படத் தொடங்கின.அச்சுப்பதிப்பு இருதளங்களில் இயங்கிய போதும் நம்முடைய பழைமையான இலக்கியங்களைப் பதிப்பிப்பதில் சிலர் தான் ஆர்வம் காட்டினர். அவர்களுள் உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுகநாவலர் போற்றோரைக் குறிப்பிடலாம். இவர்களால்

நிலவில் மலர்ந்த முல்லை....

படம்
நம்முடைய பழமையான இலக்கியங்கள் இன்றும் வாழ்ந்துகொண்டு நம்மை இன்புறுத்திக்கொண்டும் செவ்வியல் மொழிக்குக் காரணமாகவும் இருப்பதற்குக் காரணம் அந்நூல்களை அழிவுறாமல் அச்சில் ஏற்றிய பெருமக்களையே சாரும்.பழமையான நூல்கள் அழிவுறாமல் காத்ததில் பெரும் பங்கு தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்பெறும் மாமனிதர் உ.வே.சா அவர்கள்.அவர் பத்துப்பாடல் நூல்களைத் தேடி சென்று என்ன என்ன துன்பங்களை அனுபவித்துப் பெற்றார் என்பதை பதிவு செய்துள்ளார்.நம்முன்னோர்கள் எத்துணை துன்பத்திற்க்கு இடையே சங்க நூல்கள் போன்றவற்றை காத்துள்ளார்கள்.அவற்றைப் போற்றி பாதுகாப்பது தம்முடைய கடமை அல்லவா. இதோ பத்துப்பாட்டை தேடிசென்றதை அவர் மொழியிலேயே காணலாம். சீவகசிந்தாமணியை நான் முதன் முதலில் ஆராய்ந்து பதிப்பித்து வருகையில் (1887-இல்)அதில் உள்ள மேற்கோள்கள் இன்ன இன்ன நூலிலுள்ள வென்று கவனித்தேன்.அப்பொழுது பல பழைந தமிழ் நூல்களைப் பற்றி அறிந்தேன்.பத்துப்பாட்டென்று ஒரு தொகை நூல் உண்டென்பதும் அது திருமுருகாற்றுப்படை முதலிழ பத்துத் தனி நூல்களை உடையதெனபதும் நாளடைவில் தெரிய வந்தன.அதனால் பத்துப்பாட்டைத் தேடிப் பெற்று ஆராயவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்ற

இலக்கணப் புலைமையில் பெண்கள்........

இலக்கிய நூல்களைக் காட்டிலும் இலக்கண நூல்களைப் படித்தறிதல் கடினமானது.இலக்கண நூலை இயற்ற வேண்டும் என்றால் பரந்த நூலறிவு வேண்டும். இலக்கண நூல்களை இயற்றுவதிலும் பெண்கள் சிறப்புடன் செயலபட்டுள்ளனர்.செய்யுளைப் பற்றிய இரண்டு நூல்களை பெண்பாற் புலவர்கள் இயற்றியுள்ளனர்.அவ்விலக்கண நூல்கள் காக்கைப்பாடினியம்,சிறுகாக்கைப் பாடினியம் என்பதாகும்.யாப்பருங்க விருத்தியுரை,யாப்பருங்கலக் காரிகையுரை என்னும் நூல்கள் இவ்விரு நூல்களில் உள்ள பல சூத்திரங்களை மேற்றகோளாக் காட்டியுள்ளன.காக்கைப்பாடினியம் பற்றிய குறிப்பு தொல்காப்பிய உரைகளிலும்,நன்னூல் மயிலைநாதர் உரையிலும்,களவியல் உரையிலும்,வீரசோழியம் உரையிலும் உள்ளன.காக்கைப் பாடினிய நூற்பாக்கள் 89 கிடைத்துள்ளன.புலவர் இரா.இளங்குமரன் அவர்கள் உறுப்பியல் செய்யுளியல் பொதுவியல் எனப் பகுத்துக்கொண்டு இந்நூலை அமைத்துத் தருகின்றார்.சங்க இலக்கியத்திலும் ஒரு காக்கைப்பாடினியார் இருந்துள்ளார்.பாடினி என்பது பெண்களைக் குறிக்கப்பயன்படும் சொல்லாகும். பாணன் சூடான் பாடினி அணியாள் (புறம்,242) மறம்பாடிய பாடினியும்மே(புறம் 11) வாடா மாலை பாடினி அணிய ( புறம் ,364) புரிமாலையர் பாடினிக்குப் (புற

பாரதியைப் பற்றிய நினைவலை.....

படம்
முண்டாசு கவிஞனாய், விடுதலையில் மூர்கனாய் ,முறுக்கிய மீசையுடன் ,தமிழின் காதலனாய்,தமிழகத்தின் தவப்புதல்வனாய் தோன்றியவன் பாரதி. சுவை புதிது,பொருள் புதிது வளம்புதிது, சொற்புதிது,சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை பாரதியுனுடைய கவிதை. உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புது செறி காட்டியவன் பாரதி தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்தால் இமைதிற வாமல் இருந்த நிலையில், தமிழகம்,தமிழுக்குத் தரும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான். தமிழுக்குப் புத்தொளி பாய்ச்சப் பிறந்தவன் பாரதி எனப் பாடுவர் பாவேந்தர். 'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிதாவது எங்கும் காணும்' என்றான் பாரதி, இன்று அந்த தமிழின் நிலை ,தமிழ் பேசினால் தீட்டு என்று பேசமறுப்போர் பெருபான்மையினராகி விட்டனரே.... தமிழ் நாட்டில் தமிழ் முழங்காமல் தமிங்கிலம் அல்லாவா முழங்கி கொண்டு இருக்கின்றது. பிற மொழிகளை யாரும் எப்பொழுதும் வெறுக்கவில்லை,பல மொழிகளை அறிந்துகொள்ள வேண்டும்.அது தவறில்லை.நாம் தாய்மொழியை மறவாமல் இருக்க வேண்டும். பிற மொழியைத் தவறு இல்லாமல் பேசவேண்டும் என்பதில் எத்தனைக் கவ

மடைநூல்....

படம்
உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் மடைநூல் எனப்படும்.அதைப்பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை,மணிமேகலை,பெருங்கதை முதலிய நூல்களிற் கூறப்படுகின்றன.பலவகை உணவு வகைகள் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன.காலத்திற்கு ஏற்ற உணவுகளையும் சாதி,நிலம் முதலியவற்றிற்கேற்ற உணவுகளையும் அந்நூல்களால் அறிந்துகொள்ளலாம்.சீவகசிந்தாமணியில் முக்தி இலம்பகத்தில் இருது நுகர்வென்னும் பகுதியில் சில பெரும்பொழுதுகுரிய உணவு வகைகள் கூறப்பட்டுள்ளன.

இரவும் ஏக்கமும்....

காதலன் ஒருவன்; காதலி ஒருத்தி.இருவரும் சில நாள் இன்னபமாக இருந்தனர்.இது எவருக்கும் தெரியாது.களவு ஒழுக்கம்.எத்தனை நாள் இப்படி இருத்தல் இயலும்.மணம் செய்து கொள்ள வேண்டாமா? பரிசம் போட பணம் கொண்டு வருகிறேன் என்று கூறினான் அவன். எப்போ ? என்றாள் அவள் விரைவில் என்றான் அவன் சரி போய் வா என விடை கொடுத்தாள். நாள்கள் சென்றன ; வாரங்கள் ஓடின;மாதங்கள் கடந்தது;அவன் வரவில்லை.இன்று வருவான் நாளை வருவான் என் ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்தாள் அவள்.அவன் வந்தால் தானே வரவில்லை.என்ன செய்வாள்! பாவம் ! ஏங்கினள்.தூக்கம் வரவில்லை.எந்த நொடி அவன் வருவானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.உள்ளம் துடிக்கிறது அவதிபடுகிறாள். ஏன் இப்படி அவதி படுகிறாய் என்று கேட்க கூட ஆள் இல்லை. அருகில் தோழியோ கவலை இன்றி நிம்மதியாக உறங்குகின்றாள். வெளியே எட்டிப் பார்க்கின்றாள் ஒரே இருள்.நடு நிசி.எங்கும் அமைதி!அமைதி! ஆள் நடமாட்டமே இல்லை.பேச்சுக்குரல் கூட கேட்கவில்லை. எல்லோரும் தூங்குகின்றார்களே! அந்த பாழும் தூக்கம் எனக்கு வரவில்லையே என்று ஏங்குகின்றாள். ஐயோ! எங்கும் அமைதி நிலவுகிறதே என் மனம் மாத்திரம் அமைதி யில்லாதிருக்கிறதே! என்ன செய்வே

இதுதானோ காதல்....

சின்னஞ் சிறு வயது ஆனால் குழதை அல்லள்; வயது வரப்பெற்றவளே.காதல் இன்பத்திற்குப் புதியவள்.அவ்வளவே! அவனும் காதலித்தான் ;அவளும் காதலித்தாள் ; உள்ளம் இரண்டும் ஒன்று ஆயின .சிலநாள் இன்பம்.பிறகு அவன் சென்றான்;அவனோ செல்வச் சீமான் வீட்டுப் பிள்ளை; நெய்தல் நிலத்திலே உள்ள ஒரு பெரிய மரக்காயர் மகன்.அவன் ஊரிலே ஏராளமான புன்னை மரங்கள் உண்டு. அந்த மரங்களிலே குருகு வந்து தங்கும்;உறங்கும் . ஓயாது அலைகள் வீசும்.அத்தகைய நெய்தல் நில இளைஞன் விரைவில் வருவேன் என்று சொல்லிப்போனான். அவன் வரவையே எதிர் நோக்கினாள் ; வழிமேல் விழிவைத்து நின்றாள்.ஆனால் வரவில்லை.ஒரு நாள் அல்ல பல நாள் இப்படி சென்றன. உணவு செல்லவில்லை அவளுக்கு ,உறக்கம் கொள்ளவில்லை.துன்புற்றுத்துடித்தால்,வாடினாள். ஐயோ ! என்னால் தாங்க முடியவில்லையே ! காம நோய் என்று சொல்கிறார்களே ! அது இப்படி தான் இருக்குமோ தோழி என்று கேட்கின்றாள் தோழியை நோக்கி. அந்த உள்ளம் தான் எத்தனை மாசு மறுவற்றது ! அந்த உள்ளத்தில் இருந்து எத்தகைய ஏக்கம் எதிரொலி செய்கிறது;சூது வாது இல்லாத பெண் . காதலன் பிரிந்து அவள் படும் பாட்டைச் சில வரிகளிலே தம் கண்முன் எழுதி காட்டுகின்றார் கவி.அந்த சொற்கள

கண்துடிப்பு....

படம்
நம்பிக்கை என்பது தெளிந்த எண்ணத்தின் திடமான உறுதிபாடு என்பர்.நம்பிக்கை தான் வாழ்க்கையின் அடிதளம்.நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி எனபதே இல்லை. ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கை என்பது வேறு. மரபு வழியாக சில நிகழ்வுகளையோ , கருத்துக்களையோ, நம்பிக்கொண்டு தான் இருக்கின்றோம்.வீட்டை விட்டுக் கிளம்பும் போது பூனைக் குறுக்கே போனால் ஏதோ கெட்ட சகுனம் என்று வழிவழியாக நம்பிகை நம்முள் விதைக்கப்பட்டுள்ளது.அதனை இன்றும் நாம் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றோம்.இது போல் எத்தனையோ நம்பிக்கைக்ள நம்மை விட்டு பிரிக்க முடியாமல் நம்மோடு ஒன்று கலந்துவிட்டது. சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கும் போது அக்கால மக்களில் கொண்டிருந்த சில நம்பிக்கைகள் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம். மகளிருக்கு இடக்கண்ணும் ஆடவருக்கு வலக்கண்ணும் துடித்தால் நல்லது நடக்கும் என்றும்,மாறாகப் பெண்ணுக்கு வலக்கண்ணும் ஆணுக்கு இடக்கண்ணும் துடுத்தால் கெட்டது நடக்கும் என்றும்,கூறுவதைக் காணலாம்.இந்நம்பிக்கை சங்க இலக்கியத்திலும் காணப்பெறுகின்றது. பொருள்வயின் காரணமாக தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கின்றான்.பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில

ஆவதும் பெண்ணால்....

நாட்டிலும் வீட்டிலும் நல்லவை ஆவதும் பெண்களால் கெட்டவை அழிவதும் பெண்களால்.இதனைத் தான் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று கூறினார்கள்.இதனைச் சிலர் திரித்துக் கூறுவதும் உண்டு. சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் தலைவன் ஒரு பசுவினை வைத்துக் கொண்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றான் .அவனுக்குத் திருமணம் ஆகின்றது.மனைவியாக வந்தவள் அவனுடைய வாழ்வினைச் செழிப்புடையதாக ஆக்குகின்றாள். அவன் இல்லமே தலைவி விழாக்கோலம் பூண்டது போல செழிப்புற்றுத் திகழ்கின்றது.அவன் கணவனின் வருவாய்க்குத் தக்க குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுவதோடு மட்டும் அல்லாமல்,அவனுக்கு உதவியாகவும் இருந்து செல்வ நிலையிலும் மேன்மையுறவும் உறுதுணையாக விளங்குகின்றாள். ஓரான் வல்சில் சிரீல் வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தென, இனிவிழவு ஆயிற்று என்னுமிவ் வூரே(குறுந்தொகை,295) ஏர் பிடித்தவன் என்ன் செய்வான் பானை பிடித்தவள் பாக்கியசாலி என்னும் பழமொழியும் இங்கு நினையத் தகும்.

பெரும் பிறிதாதல்...

பெரும் பிறதாதல் என்ற மரபுத்தொடர் சொல்லுக்குச் சாதல் என்று பொருள்படும். பெரிதும் வேறாதல் அதாவது உறவு தொடர்பெல்லாம் நீங்கிப் பிணம் எனப் பெயர் பெற்று வேறாக அன்னியமாக்கப் பெறுதல் என்பது விளக்கம். இச்சொல் சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது காட்டகத்தே ஒரு ஆண்குரங்கு மரத்தில் தாவி விளையாடும் போது இறந்து விடுகின்றது. பெண் குரங்கோ தன் தலைவன் பிரிந்ததைப் பொருத்துக் கொண்டு கைமை நோன்பை நோற்க விரும்பாமல்,தன் குழந்தையைத் தன் சொந்தங்களிடம் சேர்த்துவிட்டுத் தன்னுயிரை விடுகின்றது.(இதற்கு இன்னொரு பொருளும் கூறுகின்றனர் தன் கட்டி தன் வேலைகளைத் தானே செய்யும் படி திறம் பெறுவரை அதனை வளர்த்து விட்டு அதன் பிறகு உயிரினை மாய்த்துக் கொள்கின்றது) இப்பாடலில் , கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி ஓங்குமலை அடிக்கத்துப் பாய்ந்துயிர் ஞெகுக்கும் சாரல் நாட (குறுந்தொகை,69) பெரும்பிறிது என்னும் சொல் அப்பொருளில் பயின்று வந்துள்ளதைக் காணலாம். அது போலவே கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலையில் போர் செய்து புறப்புண்பட்டு,அதற்கு நாணிய சேரலாதன் வாளொடு வடக்கிருந்து உயி