இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆத்தா என்னும் ஆளுமை

எத்தனையோ உறவுகளை கடந்து சென்றுகொண்டுள்ளோம் ஆனால் சில உறவுகள் உள்ளிருந்து உடற்றிக்கொண்டு இருக்கும். அவர்கள் நம்முள் ஏற்படுத்திய அதிர்வுகள்  அதிர்ந்துபடியே உடன் உறையும். நாம் சோர்வடையும் பொழுதெல்லாம் அது நம்மை விழிப்படையச்செய்யும். எப்படி பட்ட மனுஷி இவள் எனப் பல நேரங்களில் நான் பார்த்து வியந்தவர் என் அம்மாவைப் பெற்ற அம்மாயி என்று எங்கள் ஊர்பக்கம் அழைகக்ககூடிய எங்கள் ஆத்தா. 20 வயதுக்குள் இரண்டு பெண்பிள்ளைகள், சிங்கபூருக்குச் சென்ற தன் கணவன் இறந்துவிட்டார் என்னும் செய்தி கேட்டு, வாழ்க்கையின் ஒட்டுமொத்த துயரங்களையும் சுமந்து நின்ற நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்துகாட்டிய தன்நம்பிக்கை அவர். நான் பிறந்த ஊர் கிராமம் 1950 அந்த காலகட்டங்களில் கிராமங்களின் முகம் எப்படியிருந்து இருக்கும் என்பது நமக்கும் தெரியும் , கணவனை இழந்த சூழலிலும், தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய இரண்டு பெண்களையும் பி.யூ.சி வரை படிக்கவைத்தவர். வீட்டு வேலையிலிருந்து வயல் வேலைகள் வரை அவருக்கு அத்துப்படி. கரம்பை என்று சொல்லக்கூடிய ஊரைவிட்டு தூரமாக இருகக்கூடிய வயல்வெளியில் தனியாளாய் நின்று, இரவு எந்நேரமான