இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள் உரை வேற்றுமை நூற்பதிப்பும்: மறுபதிப்பின் தேவையும்

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் உலகறியச் செய்வது இப் பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த குறிக்கோள்என 1929 இல் நடைபெற்ற ஆளவை மன்ற துவக்க உரையிலும், அண்ணாமாலைச் சர்வ கலாசாலையின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் சிந்திப்பேன். தமிழ் நாடெங்கும் தமிழிசை முழங்க வேண்டும் என்பது எனது ஆவல் என 25. 03. 1944 வெளியிட்ட அறிக்கையிலும் அண்ணாமலை அரசர் தமது நோக்கத்தை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனபடி செய்லபட்டார். 1929 இல் உருப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் முதன்மை கொடுத்து அத்துறையில் வல்லுநர்களைப் பணியில் அமர்த்தி, கற்பித்தலும் ஆய்வும் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் தனித் தமிழ் இயக்கங்கள் வலுவாக இருந்த பின்னணியையும், திராவிட இயங்கங்கள் முன்னெடுத்த தமிழ் நூற்களையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்திய முறைமை, அதன் தொடர்ச்சியாக தமிழ் குறித்த சிந்தனை, தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை உலக வளத்தோடு ஒப்பிட்டு நோக்க வேண்டி தேவை எழுந்தன. குறிப்பாக திருக்குறளை உலகப்பொதுமறையான கட்டமைத்து, புலமை தளத்தில் ம…

வீரபத்திர இராமாயணக் கும்மி

படம்
கதையாடல் மரபு என்பது சமூக அடையாளம். பாரத கண்டத்தின் ஆதி காவியமாக இராமாயணம் முன்வைக்கப்டுகிறது. இக்காவியம் பெருங்கதையாடல் மரபினை கொண்டது.  அப்பெருங்கதையை இந்திய நிலப்பரப்பில், ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு மாறுபாடுகளுடன்,  கதை கரு மாறுபடாமல் ஆனால் தங்களுக்குத் தேவையான வடிவங்களில் உருவாக்கியுள்ளனர்.

அந்த வகையில் ஒக்காநாடு கீழையூர் பகுதியில் வாழ்ந்த வீரப்பத்திர வாத்தியார்(1798 - 1832 ) சரபோஜி மன்னர் காலத்தில் இராமாயண கதை முழுவதையும் நாட்டுப்புற  கும்மி வடிவில் எழுதி  அப்பகுதியின் கதைச்சொல்லியாகவும் திகழ்ந்துள்ளார்.
தொடக்கத்தில், சக்கரை முக்கனி தேனுடனே - ருசி       தானுமே ஆகவும் தான் படைக்கும் ஒக்கநாடன் வீரபத்திரன்நான் - இதை       ஓதுவேன் கும்மிக்கு ஒப்பனையாய் 
என்னும் பாடலுடன் தொடங்குகிறார். சுவடிகளில் இருந்த பாடல்களை,  பல இடங்களில் தேடி எடுத்து முனைவர் பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அதனை செம்மைப்படுத்தி தொகுத்து இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார்கள்.
வீரபத்திரன் கும்மியிலிருந்து சில பாடல்கள்.
சீதையை கண்டு வந்த அனுமன் இராமனிடம் கூறும் பொழுது கம்பர்
கண்டனென் கற்பினுக்கு அணியைக் க…

விடுமுறை நாட்களும் கழிந்த பொழுதுகளும்

நீண்ட நாள்களாக வலை பக்கத்தில் எழுத முடியாத சூழல் ஏன் இப்படி ஒரு இடைவெளி ஏற்பட்டது என்று கூட தெரியவில்லை. கடந்த 20 நாட்களாக விடுமுறை. திங்களில் இருந்து பல்கலைக்கழகம் திறப்பு.

விடுமுறையில் நிறைய நூல்கள் வாசிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

ஐந்து நூல்கள் மட்டுமே வாசிக்க முடிந்து.

பெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல்முற்றம், கூளமாதாரி,மாதொருபாகன், ஆளண்டாப்பட்சி என அவருடைய புனைகதைகளை ஏற்கனவே வாசித்திருந்தேன். நீண்ட நாள்களாக அவருடைய கங்கணம் வாசிக்க வேண்டும் என நினைத்தேன். இந்த விடுமுறையில் அதற்கான நேரமும் வாய்த்தது.

அவருடைய கதைகளின் ஊடே பயணிக்கும் போது வெவ்வேறு விதமான மனிதர்கள் வேவ்வேறு விதமான தேவைகள், அதனை நோக்கி தேடல் என்னும் நிலையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பனுபவம்.

கங்கணத்தை அணியப்போகும் நாள் எந்நாளோ எனத் தவித்துகிடக்கும் திருமண வயது கடந்த ஒருவனின் ஆதங்கம், துடிப்பு, வலி அதனால் தோன்றும் வக்ர எண்ணம் என விரிந்து செல்கிறது பெருமாள் முருகனின் கங்கணம்.
 கதைக்கான  நிலம், அதன் ஆளுமைகள், மொழி  நம்மை வசிகரிக்கின்றன.