இடுகைகள்

ஜூன், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தனைகள்

வயல்களுக்குக் களை அழிவை உண்டாக்குவது போல,மனிதர்களுக்குக் காம இச்சை அழிவை உண்டாக்குகிறது---------புத்தர் கல்லைச் செதுக்கி உருவாக்குவது போல்,மனிதனை உருவாக்க முடியாது.தனக்குத்தானே உருவாகும்படி அவனுக்குக் கற்பிக்கத்தான் முடியும்.-----------கே.எம்.முன்ஷி நேரம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே செல்வம்.இந்த செல்வத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உங்கள் ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவர்கள் ஏமாற்றித் தங்களுடைய தன்நலத்திற்காக உபயோகித்துக்கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்கள். படிக்க நேரம் ஒதுக்குங்கள்--அது அறிவின் ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்--அது மகிழ்ச்சிக்கு வழி. உழைக்க நேரம் ஒதுக்குங்கள்--அது வெற்றியின் விலை. பேச்சு என்ற வணிகத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே பயன்படுத்துங்கள்.----------அண்ணல் காந்தியடிகள்.

தேனுண்ட கதை

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் ,சில நேரங்களில் தென்றல் போல சில மகிழ்வாக நிகழ்வுகள் நிகழ்வதும் உண்டு.அதனை நாம் மகிழ்வாகவும் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த நேரத்தில் நம்முடைய பழைய துன்பங்களை மறந்து விடுகின்றோம்.இப்படிதான் ஒருவன் காட்டு வழியே சென்று கொண்டு இருந்தான் .அப்பொழுது யானை ஒன்று அவனைத் துரத்த தொடங்கியது,அவன் யானைக்கு அஞ்சி வேகமாக ஓடினான்,ஓடும் போது செடிகொடிகளால் மறைக்கப்பட்டு இருந்த பாழுங்கிணற்றை அறியாமல் அதில் விழுந்து விட்டான். விழுந்தவன் அக்கிணற்றில் தொங்கிக் கொண்டு இருந்த விழுது ஒன்றினைப் பற்றிக் கொண்டு தொங்கினான்.அப்பொழுது ஐந்து தலை நாகம் ஒன்று கடிப்பதற்குச் சீறிக்கொண்டு வந்து,அந்நிலையில் அவன் பிடித்திருந்த விழுதை எலி ஒன்று தன்னுடைய கூரிய பற்களால் கரகரவெற்று கடித்துக்கொண்டு இருந்து. அவ்விழுது அறுந்தால் அவன் அக்கிணற்றுக்குள் விழுந்து மடியவேண்டியதுதான். இந்நேரத்தில் ,இப்படி துன்பத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே என்று,இறைவனை நோக்கிப் புலம்பிக்கொண்டு, விண்ணை நோக்கி வாயைப்பிளந்தான்.அப்பொழுது அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூடு ஒன்றில் இருந்த சில தேன்

புலி வழிபாடு

படம்
மானுட வாழ்வில் மனிதன் எதனைக் கண்டு அச்சப்படத் தொடங்கினானோ அவற்றையும், தமக்குப் பயன்தரக்கூடியவற்றையும் வழிப்படத் தொடங்கினான்.அவ்வகையில் காலம்தோறும் விலங்குகள் வழிபாட்டில் புலி நடைமுறையில் இருந்துள்ளது.தொடக்க கால நாட்டுப்புற மக்கள் புலி ,சிறுத்தை போன்ற விலங்குகளின் வலிமையும் சீற்றத்தையும் கண்டு அஞ்சியும் வியந்தும் ,அவற்றை தெய்வங்களாக எண்ணி வழிபடத்தொடங்கினர்.வேட்டைக்கால மனிதன் அவ் விலங்குகளில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவற்றை வழிபடத் தொடங்கியிருக்கலாம்.இந்திய்ய பழங்குடி மலாயின மக்களாகிய இகான்களும் சாந்தளர்களும் புலியைத் தங்கள் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர்.மகாராட்டிரா மாநிலத்தில் வாகோபா எனப்படும் தலைமைப்புலி கிராம மக்களால் வழிப்படப் படுகிறது.புலிவழிபாட்டின் கூறாக இன்றைக்கும் குழந்தைகளின் கழுத்து அல்லது இடுப்பில் தங்கத்தால் ஆன வடத்தில் புலிநகங்களைக் கோர்த்து அணிந்திருப்பதைக் காணலாம். சுமத்திரா போன்ற நாடுகளில் புலிகள் வேட்டையாடப்படுவதில்லை.தன் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள வேறு வழியில்லை என்னும் போது மட்டுமே அங்கு புலி கொல்லப்படுகின்றது.அந்த அளவிற்கு மக்கள் மனத்தில் புலி இடம் பெற்றுள்ளது.

வள்ளலார் வழியில்

படம்
நேற்று (17-6-2009)மதுரை சென்று வந்தேன்.அங்கு பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களையும்,எழுத்தாளர் வேல இராமமூர்த்தி அவர்களையும் சந்தித்து வந்தேன்.எழுத்தாளர் அவர்களின் வீடு அவனியாபுரத்தில் இருந்து,அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தான் திருப்பரங்குன்றம் இருந்து.அங்கு சென்று வரலாம் என வேலா இராமமூர்த்தி அவர்கள் கூறினார்கள்.சென்று வந்தோம்.அங்கு நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது.13 ஆண்டுகளாக பாண்டியராசன் என்னும் அன்பர் செயலை எண்ணி மகிழ்ந்து,வியந்து போனேன்.திருப்பரங்குன்றத்தின் பின்புறமுள்ள குகைக்கோவில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு தீயர்களின் கூடாரமாக விளங்கியுள்ளது. அந்நிலையை மாற்றி, மக்கள் வந்து செல்லகூடிய இடமாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உள்ளது என்று கூறலாம்.அந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபொழுது அங்குள்ள குரங்குகள் மயில்கள் போன்ற உயிரினங்கள் உணவில்லாமல் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.குரங்குகள் எல்லாம் நகரை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளன. இந்நிலைக்கு வருந்திய பாண்டியராசன் அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணிபோல் அங்குள்ள குரங்

சிந்தனைகள்

ஒரு பஞ்சுமெத்தையின் மீது நெருக்கியடித்து உட்கார்ந்து இருப்பதை விட,ஒரு பூசணிக்காயின் மீது தனியாக வசதியாக உட்கார்ந்து இருப்பதை விரும்புகிறேன்.----தொராவ் எச் செயலிலும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.-----------மகாவீரர் தொழில் வெற்றிக்கு வழி ; துணிந்து செய்யுங்கள்,முதலில் செய்யுங்கள்,வித்தியாசமாகச் செய்யுங்கள்.--------மர்ச்சன்ட் நான் வெற்றியடைவதற்குக் காரணம் நான் எப்பொழுதும் எதற்கும் தயாராக இருக்கிறேன்.எனக்காக வேறு யாரும் உதவி செய்வதை நான் அனுமதிப்பதில்லை.--------காப்பர் வெற்றி ஒரு விளக்கு.தானாக அது எரியப் போவதில்லை நீ தான் அதை ஏற்ற வேண்டும்.------அர்னால்டு கிளாசோ. எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.------வில்லியம் மீக்லி.

துன்பம் தொடர்ந்துவந்த கதை

துன்பம் ஒருவருக்கு வந்தால் எப்படி தொடர்ந்து வரும் என்பதற்கு ஒரு கதையினை விவேகசிந்தாமணி என்னும் நூல் கூறுகின்றது.பட்டகாலிலே படும் கெட்டக்குடியே கெடும் என்ற பழமொழியும் இதறகுப் பொருத்தமாக இருக்கும். ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான்.அவனுக்குப் பொல்லாத காலம் வந்தது.ஒருநாள் பெருமழை பொழிந்தது.அப்பொழுது அவனுடைய பசு மாடு கன்று போட்டது.மழையினால் பசுவும் கன்றும் துன்புற்றன.அப்பொழுது அவனுடைய வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது கருவுற்றிருந்த அவனுடைய மனைவிக்குப் பேறு காலம் நெருங்கியதால் உடல் வருந்தினாள்.அந்நேரத்தில் அவனுடைய வேளையாள் இறந்து போனான் என்ற செய்தி வந்தது.மழை பெய்யும் போதே விதை விதைக்க வேண்டிய சூழல். எது எப்படி ஆனாலும் ஆகட்டும் என்று வயலில் விதைவிதைத்து விடலாம் என விதையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.அந்நேரத்தில் பழைய கடன்காரர்கள் சிலர் எதிர்பட்டுக் கடனைக் கொடுத்துவிட்டு மறுவேலையைப் பார் என மறிக்கின்றார்கள்.இச் சமயத்தில் வரிகட்டவில்லை என அரசாங்க ஆள் வந்து வரிப்பணம் கேட்கின்றான். இவை இவ்வாறாக இருக்க குடியானவனுதைய குலகுரு தமக்கு அவ்வாண்டு கொடுக்க கூடிய காணிக்கைப்பொருள் தரவில்லை என

சிந்தனைகள்

தனது தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிறமொழியில் நல்ல தேர்ச்சி வராது.---------பெர்னார்ட் ஷா பரந்த கற்பனைவளம்,எல்லாப் பொருள்களிலும் ஊடுருவும் பேராற்றல் இவை இல்லாதவனும் இலக்கியமே படிக்காத எந்த எழுத்தாளனும் காலத்தால் சாகாத இலக்கியத்தைப் படைக்க முடியாது.--------காண்டேக்கர் எந்நேரமும் தொழில் பணி என்று இராமல் ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரமாவது வீட்டில் குழந்தைகளுடன் இருப்பதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை.-------சாகர். உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை என்றால் எல்லோரும் அந்த வேடத்தைப் போட்டுக் கொண்டிருப்பதால் தான்.------------ஹிலே உயர்ந்த குடியில் பிறந்த எவன் தன்னிடம் வரக்கூடிய பழிக்கு அஞ்சுகிறானோ அவனைத் தேடிப் பொருள் கொடுத்தாவது நட்புக்கொள்.-------திருவள்ளுவர் அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.----------லயட்கரின்

பட்டத்து யானை

படம்
சுதந்திரப் போராட்டக்காலத்தில் எத்தனையோ அக்கினிக் குஞ்சுகள் சுதந்திர வேட்கை கொண்டு ,ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினர்.அவ்வாறு தென்னகப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு வீரனி வரலாற்றைப் பிண்ணனியாக வைத்து எழுதப்பெற்றதுதான் பட்டத்துயானை என்னும் புதினம். இந்நூலின் ஆசிரியர் குற்றப் பரம்பரை என்னும் நாவல் மூலம் எனக்கு அறிமுகமானார்.கடந்த புத்தக கண்காட்சியில் குற்றப் பரம்பரை என்னும் நாவலை வாங்கினேன் .அந்நாவலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான். அப்புதினத்தின் கதையோட்டத்திலும் ,கதை சொல்லும் உத்திமுறையாலும் ஈர்க்கப்பட்டு,ஆசிரியரிடம் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.உடனே அப்புத்தகத்தை வெளியிட்ட காவியாப் பதிப்பகத்தாரிடம் தொடர்ப்பு கொண்டு ,அவருடைய அலைபேசி எண்ணை வாங்கி அவரிடம் புதினம் தொடர்பான என்னுடைய கருத்தினைக் கூறினேன்.அவரும் மிகமகிழந்தார். அன்றிலிருந்து எங்கள் நட்புத் தொடர்ந்து வருகிறது. அவரின் அடுத்தப் புதினமான பட்டத்து யானை என்னும் புதினத்தை அனுப்பி வைத்தார். இப் புதினம் ஏற்கனவே ஜீனியர் விகடனில் வெளிவந்து வெகுஜன மக்களால் பரப்பரப்பாகப் பேசப்ப

நெடுநல்வாடை

பத்துப்ப்பாட்களுள் ஒன்று நெடுநல்வாடை. தலைவனை விட்டுப் பிரிந்து இருந்த தலைவிக்கு கூதிர் காலம் நெடியதாகவும், போருக்குச் சென்ற தலைவனுக்கு வெற்றித்தரக்கூடிய கூதில்காலமாக அமைந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது என்று கூறுவர். இப்பாடலை அகப்பாடல் என்றும் ‘வேம்புத்தலை யாத்தநோன்கழ் எஃகமொடு’ என்ற அடினைக்கொண்டு இப்பாடல் அகப் புறவகையைச் சர்ந்தது என்றும் கூறுவர்.இப்பாடலைப் பாடிய ஆசிரியர் நக்கீரர்.இவர் பத்துப்பாட்டில் உள்ள திருமுகாற்றுப்படை என்னும் பாடலையும் இயற்றியுள்ளார். இப்பாடலில் நக்கீரர் கூதிகாலத்தை அப்படியே நம்முன் படம் பிடித்துக்காட்டுகின்றார். குளிகாலத்தில் நடக்க்கூடிய ஒவ்வொரு செயல்களையும் நுட்பமாக பதிவுசெய்துள்ளார். கூதிர் காலத்தின் இயல்பு மேகங்கள் மேருமலையை வலம் வந்து உலகம் குளிரும்படி மழையைப் பொழிந்தன.மழையால் பாதிக்கப் பட்ட இடையர்கள்,மாடுகளை ஓட்டும் கோல்களைக் கொண்டு,மாடுகளை மேட்டுப் பாங்கான இடத்திற்கு விரட்டி மேயும்படி விட்டனர்..இடையர்கள் மார்பில் அணிந்திருந்த காந்தள் மலர் மாலைகள் மழையால் பொழிவிழந்தன.அவர்கள் குளிரால் அவர்களுடைய பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டன,அவர்களுடைய நடுக்கம் குறைய நெருப்பி

கருத்தரங்கம்

படம்
கடந்த வாரம்(5,6-6-2009)அன்று தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் ,மலேசியாவில் இருந்து தமிழ் இலக்கிய படைப்பாளர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்தில் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் பங்களிப்பினைப் பற்றிய கட்டுரைகள் வழங்கப்பெற்றன. மலேசியா ,சிங்கப்பூர் படைப்பாளர்கள் 41 பேர் இக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.5-ஆம் திகதி காலை பத்து மணிக்கு விழா தொடங்கப்பெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழத் துணைவேந்தர் விழாவினைத் தொடங்கி வைக்க மு.மேத்தா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மு.மேத்தா அவர்கள் கவிதையின் இன்றைய நிலையினைக் குறித்து மிக அழகாவும் ஆழமாகவும் விளக்கினார்.மேலும் மலேசியா,சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மரபுகவிதைகளை விட்டு இன்னும் வெளிவரவில்லை புதுக் கவிதைகளையும் அவர்கள் படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இக்கருத்தினை மறுத்து புதுக்கவிதைகளை அங்குள்ள படைப்பாளர்கள் படைக்கின்றனர் என்று கூறினர். தமிழ்நாட்டில் உள்ள முத்துப்பேட்டை என்னும் ஊரில் இருந்து சிங்கப்பூர் சென்று,மிகப் பெரும் தொழில் அதிபராக வி

தஞ்சாவூர்

படம்
தஞ்சை என்றவுடன் நம் நினைவில் வருவது விண்னோடு போட்டிபோட்டுக்கொண்டு ,தமிழனின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் பெரிய கோவில்.அடுத்து தென்னகப் பகுதியின் நெற்களஞ்சியமாகத் திகழ்த்து,கலைகளுக்கு ஊற்றுக்கண்ணாய் விளங்கியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு சிறப்புக்ளைத் தன்னக்கதே உடையது தஞ்சாவூர் .இவ்வூர் சோழமன்னர்களின் தலைசிறந்த தலைநகராக விளங்கிய பெருமையுடையது.பொதுவாக ஒரு ஊரினைத் தலை நகரமாக அமைக்க வேண்டம் என்றால் அவ்வூர் வளமையும் செழுமையும் கொழுமையும் நிறைந்ததாக இருக்கவேண்டும்.அவ்வாறு மண்வளம் நிறைந்து இருந்ததால் தான் இப்பகுதியினைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆட்சிப்புரிந்தனர். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனத் தொல்காப்பியம் சுட்டுதற்கிணங்க,நம்முடைய முன்னோர்கள் நாம் வாழும் ஊர் பகுதிக்குக் கூட பொருள் உடைய பெயர்களையே வைத்துள்ளனர்.அவர்கள் என்ன நிடைத்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியது ,இருந்தாலும் இக்காரணத்தினால் இப்பெயர் வந்திருக்காலாம் என இப்பொழு நாம் ஆய்து கொண்டு இருக்கின்றோம்.அந்த வகையில் தஞ்சாவூர் என்னும் ஊர்பெயர் வைத்ததற்கானகாரணங்கள் பல கூறப்பெறுகின்றன.

சிந்தனைகள்

பிறர் துன்பங்களக் கேட்டுக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.---------பீச்சர் விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.-----------லாலா லசபதிராய் நாம் விரும்புவதை மட்டும் பெறவே முயலுங்கள்.முடியாத போது நாம் பெறக்கூடியவற்றை மட்டும் விரும்புங்கள்.---------வில்சன்

முல்லைப்பாட்டு

படம்
நம்முடைய பழமையான இலக்கியம் சங்க இலக்கியம் என்று கூறக்கூடியது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும்.பத்துப்பாட்டு என்பது பத்துத் தனித்தனி பாடல்களைக் கொண்டது.எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களும் பல பாடல்களால் தொகுக்கப்பட்டது.பத்துப்பாடல்களில் ஒன்று முல்லைப்பாட்டு .பத்துப்பாடல்களில் மிகச்சிறிய அடிகளைக்103 கொண்டது முல்லைப்பாட்டாகும். இப்பாடலைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன் என்பது சிலரின் கருத்தாக உள்ளது. இயற்கை இன்பத்தில் தோய்ந்து இன்பம் கண்ட நம்முடைய முன்னோர்கள் ,இயற்கையின் ஊடே வாழ்வியல் செய்திகளை நமக்கு அள்ளித் தரும்,இப்பாடல் செய்தியினைப் பார்ப்போம். தலைவன் தலைவி பிரிவு நிலையில் அவர்களின் நிலையினை மிக அழகா விளக்குகின்றது. முல்லைக்குரிய கார்காலம் வந்து விட்டது ஆனால் போருக்குச் சென்ற தலைவனின் தேர் வரவில்லை. தலைவன் பிரிவை எண்ணி பொறுக்காத தலைவியின் கண்கள் துயில மறுக்கிறது.கண்களில் தலைவனை எண்ணி கண்ணீர் முத்துப் போல் கண்ணீரை உதிர்ந்துகொண்டே இருக்கின்றது. பசலை நோயினால் கைவளையல்கள் நெகிழ்கின்றன.அதனைத்திருத்துகின்றாள்.அவளுடைய

சிந்தனை

ஒரு நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கமோ பரப்பளவோ அந்நாட்டிற்குப் பெருமை சேர்பதல்ல,அந்நாட்டு மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வே அந்நாட்டின் உண்மையான உயர்வாகக் கருதப்பெறும்-----------ஜவர்கலால் நேரு நீ உன்னை வலிமையற்றவன் என்று ஒருபோதும் எண்ணாதே.எழுந்து நில்,உன் விதியைப் படைப்பவன் நீயே என அறிந்துகொள்,உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,ஆற்றலும்,உனக்குள்ளே குடிக்கொண்டிருக்கின்றன.----------காந்தியடிகள் நடக்க கூடாதது நடந்துவிட்டதற்காக வருந்திக் கொண்டு இருப்பதை விட,இனிமேல் அதைச் சீர்திருத்திட என்ன செய்யலாம் எனச் சிந்திப்பவனே சரியான மனிதன்.----------மு.வ