முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெடுநல்வாடை

பத்துப்ப்பாட்களுள் ஒன்று நெடுநல்வாடை. தலைவனை விட்டுப் பிரிந்து இருந்த தலைவிக்கு கூதிர் காலம் நெடியதாகவும், போருக்குச் சென்ற தலைவனுக்கு வெற்றித்தரக்கூடிய கூதில்காலமாக அமைந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது என்று கூறுவர். இப்பாடலை அகப்பாடல் என்றும் ‘வேம்புத்தலை யாத்தநோன்கழ் எஃகமொடு’ என்ற அடினைக்கொண்டு இப்பாடல் அகப் புறவகையைச் சர்ந்தது என்றும் கூறுவர்.இப்பாடலைப் பாடிய ஆசிரியர் நக்கீரர்.இவர் பத்துப்பாட்டில் உள்ள திருமுகாற்றுப்படை என்னும் பாடலையும் இயற்றியுள்ளார்.
இப்பாடலில் நக்கீரர் கூதிகாலத்தை அப்படியே நம்முன் படம் பிடித்துக்காட்டுகின்றார். குளிகாலத்தில் நடக்க்கூடிய ஒவ்வொரு செயல்களையும் நுட்பமாக பதிவுசெய்துள்ளார்.

கூதிர் காலத்தின் இயல்பு

மேகங்கள் மேருமலையை வலம் வந்து உலகம் குளிரும்படி மழையைப் பொழிந்தன.மழையால் பாதிக்கப் பட்ட இடையர்கள்,மாடுகளை ஓட்டும் கோல்களைக் கொண்டு,மாடுகளை மேட்டுப் பாங்கான இடத்திற்கு விரட்டி மேயும்படி விட்டனர்..இடையர்கள் மார்பில் அணிந்திருந்த காந்தள் மலர் மாலைகள் மழையால் பொழிவிழந்தன.அவர்கள் குளிரால் அவர்களுடைய பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டன,அவர்களுடைய நடுக்கம் குறைய நெருப்பினை மூட்டி குளிர்காய்ந்தனர்.


மேய்சலுக்குவிட்ட விலங்குகள் எல்லாம் குளிரால் மேயாமல் நின்றன.குரங்குகள் குளிரால் நடுங்கின.காற்று மிகுதியால் பறவைகள் மரங்களில் இருந்து கீழே நிலத்தில் விழுந்தன.பசுக்கள் கன்றுக்குப் பால் கொடுக்காமல் காலால் உதைத்தன.புதர்கள் தோறும் முசுண்டைப் பூக்கள் பூத்து குலுங்கின. பீர்கம் மலர்கள் எங்கும் மலர்ந்து பொன்னிறமாக காட்சியளித்தன.மழையின் வரவால் விரைந்து வந்த நீரில் கயல் மீன்கள் நீரின் எதிர்த்து நீந்தி வந்தன.மழை ஓய்ந்ததும் பசிய கால்களை உடைய கொக்கு கூட்டங்களும்,வரியையுடைய நாரை கூட்டங்களும் பரந்து விரிந்த கரிய வண்டலும் சேறும் கலந்து ஈரமுடைய வெண்மணலிலிருந்து மீனகளை உண்டன.


வானிடத்தில் எழுந்த வெண்முகில்கள் துளிகளைச் சிதறின.வயல்களில் நீருக்கு மேல் உழர்ந்து வளர்ந்த நெற்பயிற்களை ஈன்ற நெற்கதிர்கள் முற்றி விளைந்திருந்தன. பருத்த அடியினையுடைய கமுகின் நீலமணி போன்ற தலையினை உடைய காய்கள் உள்ளே நீர் நிறைந்தார் போல திரண்டு முற்றி இருந்தன.மலர்கள் நிறைந்த சோலையிடத்துள்ள மரங்கள் கிளைகளில் தங்கி நீரைச் சொரிந்தன.இயர்ந்த மாடங்களும் செல்லவமும் மலிந்த பழைய ஊரிடத்து அகன்று நீண்ட தெருக்கள் ஆறு கிடந்தார் போல காட்சியளித்தன.தழை விரவி தொடுத்த மாலைகளைக் கழுத்தில் அணிந்தவரும்,வண்டு மொய்கின்ற கள்ளை உண்டு களிப்பு மிகுந்தவர்களும்,முன்னும் பின்னும் தொங்கும் படி உடையணிந்தவர்களும்,முறுக்கேறிய உடம்பினருமாகிய மிலேச்சர் மழைத்துளிக்கு அஞ்சாதவர்களாய் தெருக்களில் திரிந்தனர்.மாடப்புறாக்கள் இரவு பகல் அறியாது மயங்கி கிடந்தன.சேவற் புறாக்கள் தனது பேட்டுடன் வெளியிற் சென்று இரைதேடி உண்ணாது பலகை மீது இருந்து கடுத்த கால்களால் ஆறும்படி காலை மாற்றி மாற்றி இருந்தது.

கருத்துகள்

முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று இது போன்ற பதிவுகள் எதிர்காலத் தலைமுறையினருக்கு மிகவும் பயன் படும் இடையிடையே இந்நூல் குறித்த திறனாய்வுக் கருத்துக்களையும் சொல்லிச் சென்றால் ஆய்வாளரகள் மேலும் பயன்பெறுவர்.
ஜீவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் குளிர்கால வர்ணனையை விவரித்து எழுது ...

எட்டாம் வகுப்புல பத்து மார்க் கேள்வி இது ரொம்ப ரசிச்சு படிச்சு எழுதினது
அப்படியே நினைவில நிக்குது............
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துக்கு நன்றி குணா.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஜீவன் நலமா? நெடுநல் வாடையைப் படிக்கும் போது நமக்கே குளிர்வந்துவிடும்.
Pathman இவ்வாறு கூறியுள்ளார்…
நெடுநல்வாடையைப் படிச்சு குளிர் அல்ல குளிர் காச்சலே வரும்போல் உள்ளது .மூலம் மிகவும கடினமான சொற்கள் ..விளக்கத்துக்கு நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…