இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொல்காப்பியம்

படம்
1985 இல் திருப்பனந்தாள் அறக்கட்டளை வெளியீடாக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த டாக்டர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியர் உரையுடன் குறிப்புரையும்  சேர்த்து பதிப்பித்த தொல்காப்பியம் பொருளதிகாரம் பின் நான்கு இயல்களுக்கான(மெய்ப்பாட்டியல், உவமவியல்,செய்யுளியல், மரபியல்)  நூல் இப்பொழுது மறுபதிப்பாக கிடைக்கின்றது. நூலின் விலை 270 பாதிவிலையாக 135 க்கு கிடைக்கின்றது. வேண்டுவோர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறையில் வாங்கி கொள்ளலாம்.

கூடுகள் சிதைந்த போது

படம்
புலம்பெயர் படைப்புகளில் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்னும் சிறுகதை கவனப்படுத்தப்படவேண்டிய சிறுகதையாக அமைகின்றது. வாழ்வின் ஊடாக தான் பெற்ற அனுபவங்ளைக் கதாபாத்திரங்களாக நூல் முழுதும் உலவ விட்டிருக்காறார் அகில்.இந்நூல் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி , நவீன காலத் தமிழ் இலக்கியத்திலே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும்.                      கூறுவதற்கேற்ப அகிலிடமிருந்து இது போன்ற சிறுகதை தொகுதிகள் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்நூல் உருவாக்கியுள்ளது.
படம்
.. தமிழ் சூழலில் சிறுகதை குறித்தான ஆய்வுகள் ,அவற்றை ஆவணமாக்கும் முயற்சிகள் குறைந்தளவே நிகழ்ந்துள்ளன. 1980 க்குப் பிறகு சிறுகதை பற்றிய ஆய்வுகள் பெரும்பாண்மை இல்லை என்றே கூறலாம் 1980 களில் இருந்து2010 வரைக்கும் வெளிந்த சிறுகதைகள். அனைத்தையும் தொகுப்பது என்பது எளிதன்று ஆனாலும் ஒரு வரையறைக்குள் நின்று தொகுத்துக்கொண்டு ,அவை பற்றிய புரிதலுக்கான வழி வகுப்பதாக தமிழில் சிறுகதை உருவாக்கத்தின் போக்குகள் - பரிமாணங்கள், பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள், இஸ்லாமிய எழுத்தாளர்களின் சிறுகதைகள், தலித் எழுத்தாளர்களின் சிறுகதைகள், சிறுகதை ஆளுமைகள் பற்றிய அறிமுகத்தோடு மாற்றுவெளியின் பத்தாவது ஆய்விதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சென்னை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் சிறுகதை திரட்டல்/பட்டியலுக்கான  உழைப்பு  இவ்விதழுக்கு பெரிதும் உதவியுள்ளது.

சங்க காலத்தில் வழங்கிய சமஸ்கிருதச் சொற்கள்

சத்தாரணை மருந்து கொழம்பு

சத்தாரணை என்ற  ஒருவகைச் செடியுள்ளது. மருத்துவகுணம் நிறைந்த செடி. எங்கூர் பக்கம் அதனைப் பறித்து கொழம்பு வைப்பார்கள். சத்தாரணை இலை பூவரசு இலை போல இருக்கும் ஆனால் இலையின் ஓரத்தில் வளைவாக காணப்படும்.(ஊருக்குச் செல்லும் பொழுது அதனைப் படம் எடுத்துப் போடுகிறேன்). இணையத்தில் தேடினேன் அப்படி ஒரு பெயரே இல்லை. அது வேறு பெயரில் வழங்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை.அது ஒரு கொடி வகை. இலையைப் பறித்து நன்றாக அலசிவிட்டு நல்லெண்ணை வதக்கி எடுத்துக்கொண்டு அதனை அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அரைக்கும் பொழுது மிளகு, சீரகம்,சோம்பு, மஞ்சள் வைத்து வழிக்கும்போது வெங்காயம் வைத்து வழித்து எடுத்துகொண்டு,  நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்து,சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூல் இரண்டையும் சேர்த்து , உப்பு போடவேண்டும். அதனுடன் முருங்கைக்காய் கத்தரிக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த பிறகு இறக்கி, சாப்பிட்டால் அப்படித்தான் இருக்கும். இதில் கருவாடும் வேண்டுமென்றால் சேர்ப்பார்கள்.