தஞ்சாவூர்


தஞ்சை என்றவுடன் நம் நினைவில் வருவது விண்னோடு போட்டிபோட்டுக்கொண்டு ,தமிழனின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு
ஓங்கி உயர்ந்து நிற்கும் பெரிய கோவில்.அடுத்து தென்னகப் பகுதியின் நெற்களஞ்சியமாகத் திகழ்த்து,கலைகளுக்கு ஊற்றுக்கண்ணாய் விளங்கியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு சிறப்புக்ளைத் தன்னக்கதே உடையது தஞ்சாவூர் .இவ்வூர் சோழமன்னர்களின் தலைசிறந்த தலைநகராக விளங்கிய பெருமையுடையது.பொதுவாக ஒரு ஊரினைத் தலை நகரமாக அமைக்க வேண்டம் என்றால் அவ்வூர் வளமையும் செழுமையும் கொழுமையும் நிறைந்ததாக இருக்கவேண்டும்.அவ்வாறு மண்வளம் நிறைந்து இருந்ததால் தான் இப்பகுதியினைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆட்சிப்புரிந்தனர்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனத் தொல்காப்பியம் சுட்டுதற்கிணங்க,நம்முடைய முன்னோர்கள் நாம் வாழும் ஊர் பகுதிக்குக் கூட பொருள் உடைய பெயர்களையே வைத்துள்ளனர்.அவர்கள் என்ன நிடைத்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியது ,இருந்தாலும் இக்காரணத்தினால் இப்பெயர் வந்திருக்காலாம் என இப்பொழு நாம் ஆய்து கொண்டு இருக்கின்றோம்.அந்த வகையில் தஞ்சாவூர் என்னும் ஊர்பெயர் வைத்ததற்கானகாரணங்கள் பல கூறப்பெறுகின்றன.

சங்க காலத்தில் சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்து.பின்னர் சங்க கால சோழர்கள்,சிற்றரசர்களாக பழையாறையையும் தலைநகராக கொண்டு ஆட்சிப்புரிந்தனர்.அதன் பிறகு இடைக்காலத்தில் தோன்றிய விசயாலயன் என்ற மன்னன் சோழ அரசை தஞ்சையில் நிலை பெறச்செய்த பிறகு , தஞ்சை வரலாற்று சிறப்பு பெறும் இடமாக மாறியது.


இதற்கு முன் தஞ்சை பகுதி எவ்வாறு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் அறியமுடியவில்லை.தஞ்சாவூரில் உள்ள திருமருகல் என்ற தலம் சோழன் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலைக் கொண்டது என்பதும்,ஞானசம்பந்தர்,அப்பர் பாடல் பெற்ற தலம் எனவும் கூறப்பெறுகிறது.எனவே மருகல் ஒரு பழமையான தலம்,பக்தியால் பெறுமை பெற்ற தலம் எனபது மட்டுமல்லாது ,இது ஒரு பெரும் குடியாற்றப் பகுதியாக,நாட்டுப் பகுதியாக இருந்துள்ளது என்பதையும் அறியமுடிகின்றது. எனவே சோழமன்னன் இந்நகரைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தான் என்றும் கூறலாம்.


தஞ்சையின் ஒரு பகுதியாக மருகல் திகழ்ந்து என்பதனைச் சேக்கிழார் பெருமான் பாடிய

கொள்ளுமியல்பிற் குடி முதலோர் மலிந்த செல்வக் குல பதியாம்
தெள்ளு திரைகள் மதகு தோறும் சேறும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருத நாட்டுத் தஞ்சாவூர்


பாடல் மூலம் தெளியலாம்.மேலும் தஞ்சை பொன்னி நாட்டைச் சார்ந்ததும் என்பதும் புலனாகிறது.மக்கள் வாழும் பகுதியாக விளங்கிய இவ்வூர் சோழர்கள் தலையகராக மாறிய போது,பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுச் சிறப்புப்பெறத்தொடங்கியது எனலாம்.
சுந்தரர் தேவாரத்தில் அடியவர்களைப் பற்றி பாடும் போது,


கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் சுழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங் கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செரிந்துணை தன்னடியார்க்கு மடியேன்,


எனத் தஞ்சை பகுதியைச் செருந்துணை நாயனார் என்ற மன்னன் ஆண்டதாகக் குறிப்பிடப் படுகின்றார்.இம் மன்னனின் கதையினைச் சேக்கிழார் பெருமான் பாடும் போது,


சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண்குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய யடை நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரின்மலர்ந்த பூங்கழல்சூழ் மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந் செருந்துணையார் பரவுத் தொண்டின்

செருந்துணையார் வேளான்குடி முதல்வர் எனச் சுட்டப்படுகின்றாரே ஒழிய மன்னனாகச் சுட்டப்பெறவில்லை.இதனால் வேளாண்குடியைச் சார்ந்த இவர் தஞ்சை பகுதியை ஆண்ட குறுநில மன்னனாக கருதாலாம்.இதே பகுதியில் சேக்கிழார் பெருமான்

உலகு நிகந்த பல்லவர் கோச்சிங்கர் உரிமைப் பெருந்தேவி

எனப் பாடுவதால் ,அப்பகுதியை பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் இவ்வூர்பெயர் காணப்பட்டுள்ளதையும் அறியலாம்.இதனால் இப்பகுதியின் பழமையினை உணரலாம்.
திருநாவுகரசர் பாடலில் தஞ்சை தளிக்குலத்தார் என்ற குறிப்பு காணப்பெறுகின்றது.எனவே தஞ்சைப் பெரியக் கோயிலுக்கு முன்னர் இங்கு கோயில் இருந்துள்ளதையும் ,ஆனால் பெரிய கோயில் அளவுக்கு புகழ் பெறவில்லை என்பதையும் அறியலாம்.இவர் திருவீழி மிழலை பதிகத்தில்,பல கோயில் பெற்ற ஊர்களையும் சொல்லிசெல்லும் நிலையிலேயே சொல்லி செல்கிறாரே ஒழிய தனித்துச் சிறப்பித்துக் கூறவில்லை.


‘தஞ்சை’ என்னும் சொல் மரூஉப் சொல்லாகும்.புதுச்சேரியை ‘புதுவை’என்றும் காஞ்சிபுரத்தைக் ‘காஞ்சி ‘ என்று வழங்குவது போன்று தஞ்சாவூரினைத் ‘தஞ்சை’ என அழைக்கப்பெறுகின்றது.


இதில் தஞ்சை என்பது தஞ்சாவூரின் மரூஉ சொல்லா,இல்லை தஞ்சாக்கூர் என்பதன் மரூவு சொல்லா என்ற ஐயமும் உள்ளது. தஞ்சாக்கூர் என்பதன் மரூஉ தான் தஞ்சை என திரு .நாச்சிமுத்து குறிப்பிடுகின்றார்.


தஞ்சாக்கூர் என்னும் வடமொழி புராணம்,தஞ்சாக்கூர் முன்பு அளகாபுரி என்னும் பெயரால் வழங்கப்பெற்றது என்றும்,தஞ்சாசுரன் என்னும் அசுரன் இப்பகுதியை ஆண்டதால் தஞ்சாக்கூர் எனப் பெயர் பெற்றது என்றும் கூறுகின்றது.

மேலும் தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி என்னும் நூலில் கருங்கோட்டை எனக் காணப்பெறுகிறது.தஞ்சாவூர்,தஞ்சாறை என்பதாகவும்,புகலிடம் காரணமாக இப்பெயர் அமைந்ததாகவும் பல கருத்துக்கள் காணப்பெறுகின்றன.


புராணங்கள் கூறும் கருத்தின் ஏற்றகொள்ள முடியவில்லை என்றாலும்,புகலிடம் காரணமாகத்தோன்றியது என்பதை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்ளுகிறது.


தஞ்சாக்கூர் என்னும் பெயரினை அடிப்படையாகக் கொண்டால் ‘ஆக்கூர்’ என்னும் ஊர் தஞ்சைக்கருகில் உள்ளது.இத்தலம் பாடல் பெற்ற தலமாகும் .இங்கு வேளாண் மறபினர் மிகுதியாக வாழ்ந்துள்ளனர் என்பதை ஞானசம்பந்தர் பாடலின் மூலம் அறியமுடிகின்றது.
பிறருக்குகாக உணவு ஆக்குபவர்ரவாழும் என்னும் நிலையில் ஆக்கூர் என்று பெயர் வந்தது என்று ஆய்வறிஞர்கள் கருத்துஆக்கூரில் இருந்த வேளாண்கடி மக்கள் இப்பகுதியில் வந்து குடியேறியதால் தம்முடை ஆக்கூர் என்னும் நிலையில் தஞ்சாக்கூர் என்னும் பெயர் பெற்று,பின்னாளில் தஞ்சாவூர் என்று மாற்ம் பெற்றதாக கூறப்பெறுகின்றது.


தஞ்சாவூர் என்பதனை தண்+செய்+ஆவூர் எனப் பிரித்து குளிர்ச்சிப் பொருந்திய வயல்கள் நிறைந்த உணவு பொருட்களை ஆக்க கூடிய ஊர் அல்லது பசு கூட்டங்கள் நிறைந்த ஊர் எனவும் பொருள் கொள்ளப்பெறுகின்றது.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு...
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தஞ்சாவூர் பற்றி பல விடயம் அறிந்துகொண்டேன் நன்றி
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
\\தஞ்சாவூர் என்பதனை தண்+செய்+ஆவூர் எனப் பிரித்து குளிர்ச்சிப் பொருந்திய வயல்கள் நிறைந்த உணவு பொருட்களை ஆக்க கூடிய ஊர் அல்லது பசு கூட்டங்கள் நிறைந்த ஊர் எனவும் பொருள் கொள்ளப்பெறுகின்றது.\

இவ்விடயம் இது வரை அறிந்ததில்லை

(நாமும் தஞ்சை ஜில்லா தானுங்கோ)
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஜமால்.வருகைக்கு நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
தஞ்சையில் எந்த பகுதி ஜமால்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்