19-ஆம் நூற்றாண்டு ஆளுமை ரெவரெண்ட் ஜார்ஜ் உக்லோவ் போப்(1820 – 1908)

ஐரோப்பிய மதபோதக மரபில் உருவாகி, சமயப் பரப்பலுக்காகத் தமிழகத்துக்கு வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜி. யு. போப். இவர் மதபோதகப் பரப்பலின் ஊடாக தமிழ்மொழிக்குத் தம்முடைய இறுதி காலம் வரை பங்களிப்பை நிகழ்த்தியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

1820 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நோவா ஸ்கோஷியோவிலுள்ள பிரின்ஸ் எட்வட் தீவில் ஜான் போப், கேதரின் யுக்ளோ என்னும் இணையருக்கு மகவாய்ப் பிறந்தார். இவருடன் பிறந்தோர் பதின்மர் அறுவர் ஆண்கள் நால்வர் பெண்கள். இவருடைய சகோதரர்கள் மதபோதகர்களாக விளங்கினர். இவரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு செயல்பட்டுவந்தார்.


ஆங்கிலம், எபிரேம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றவர் போப். இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென விரும்பியதால் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சிப்பெற்றார். தமிழகத்தை நோக்கி கப்பலில் வரும்பொழுது தமிழை நன்கு பேசவும் எழுதவும் கற்றார். தமிழகம் வந்த பிறகு ஆரியங்காவு என்னும் ஆசிரியரிடத்தும் மகாவித்துவான் இராமானுசக் கவிராயரிடத்தும் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.


1864 இல் மறைநூற் புலவர் பட்டம்(D.D) 1886 இல் ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் எம்.ஏ.பட்டம்,1906 இல் ராயல் ஏஷியாட்டிக் சொசைட்டி தங்க பதக்கம் வழங்கியது. போப் அவர்களின் காலம் மயிலை சீனிவேங்கசாமியின் 19-ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியம் என்னும் நூலில் 1820 – 1903 என்று காணப்படுகின்றது. மற்ற தரவுகளில் அரது இறுதி காலம் 1908 என்ற குறிப்புக் காணப்படுகின்றது.


போப்பினுடைய பணிகாலங்களை 1842 இல் தொடங்கி 1882 வரையான காலக்கட்டம். 1882 தொடங்கி அவரது இறுதி காலமான 1908 வரையிலான காலகட்டம் என இரு நிலை வைத்து எண்ணலாம். முன் காலங்களில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் நிலையில் பாடநூல் உருவாக்க மரபின் ஊடாக சில பாடநூல்களை உருவாக்குகின்றார். இரண்டாம் நிலையில் தமிழ் நூல்கள் மொழிப்பெயர்ப்புத் தொடர்பான செய்லபாடுகளில் ஈடுபட்டுள்ளார். போப்பினுடைய இலக்கண வினாவிடை முதல் நூல் பல பிரதிகள் மறுபதிப்புக் கண்டுள்ளது. திரு.வி.க.


நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் எங்கள் கரங்களில் திகழ்ந்த இலக்கண நூல்கள் போப்பையரின் இலக்கண நூல்களே(1993: அணிந்துரை)


எனக் குறிப்பிடுகிறார். ஆக அக்காலத்தில் போப்பினுடைய நூல் பெருமளவு பயிலப்பட்டதை அறியலாம். ஒவ்வொரு மறுபதிப்பு பிரதியிலும் 20,000 பிரதிகள் போடப்பட்டதான செய்திகள் காணப்படுகின்றன. ஏறத்தாழ 50 க்கும் மேற்றபட்ட மறுபதிப்புகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் பதிப்பு இலக்கண வினாவிடை 3,50,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது(2010:133)

1840 தொடங்கி 1882 வரை


வெஸ்லியன் மிஷன் சமய நிறுவன மதப்போதகராக 1840 இல் தமிழகத்துக்கு வருகைப் புரிந்த ஜி.யு.போப் சாயர்புரம் , தஞ்சை, உதகமண்டலம், பெங்களூர் ஆகிய இடங்களில் பணிசெய்துள்ளார்.


சாயர்புரம்


தமிழகத்துக்கு வந்த போப் சாயர்புரம் என்னும் இடத்திற்குச் சென்றார். இவ்வூர் திருநெல்வேலி அருகே அமைந்துள்ள கடற்கரைப் பட்டிணமாகும். இதனை சாமுவேல் சாயர் என்பவர் தோற்றிவித்தால் அவர் பெயராலேயே இந்நகரம் பெயர்பெற்றது. தோற்றிவித்தவர் அவர் என்றாலும் அவ்வூர் சிறப்பதற்குக் காரணமாக இருந்தவர் போப். தமிழகத்தில் கிறித்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எண்ணிய போப் இங்கு உள்ள தமிழ் மக்களேயே தொண்டர்களாக மாற்றவேண்டுமென எண்ணி, இங்குள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக கலாசாலை ஒன்றை நிறுவினார்.


கலாசாலை தொடங்கிய காலத்தில் மாணவர்கள் கிடைப்பது அரிதாயிருந்தது. பிறகு மாணவர்களின் வரவு அதிகரித்தது. கிறித்துவ சமயத் தலைமை இடங்கள் பலவற்றில் பாடசாலைகள் இருந்தன. அவற்றில் கற்றுத்தேறியவர்கள் மேற்படிப்புக்குச்ச சாயர்புரத்தில் தங்கிப் பயின்றனர். சாயர்புரத்தில் மாணவர்களுக்கு உறைவிடங்கள், நல்லுணவும் இலவசமாக வழங்கப்பட்டது. கல்வி முடிந்தவுடன் அவர்கள் திருச்சபை தலைவர்களாக விளங்கவேண்டும். அவர்கட்குத் தலைவர்களுக்குரிய பயிற்சியளிக்கும் பொருட்டே போப் காலநிலையம் நாட்டினார்.


மாணவர்களுக்கு உயர்தரக் கல்வி அளிக்கவேண்டும் என்பது போப்பின் நோக்கமாகும். அவர் சாயபுரத்தை ஒருவிதப் பல்கலைக்கழகமாக்க வேண்டுமென்று விரும்பினார். சென்னை மாகாணத்தில் வேறெங்கும் மாணவர்கள் பெறமுடியாத கல்வியைச் சாயர்புரத்தில் பெறவேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதற்கேற்ப அவர் தமது கல்வித் திட்டத்தை அமைத்தார். போப் கலாச்சாலை தலைவராகவும் செய்மூர் என்னும் அறிஞர் ஒருவர் அவருக்கு உதவி ஆசிரியராக விளங்கினார். செய்மூருக்குக் கண் தெரியாது. ஆயினும், தர்கம், தத்துவம், சரித்திரம்ஆகிய கலைகளை அவர் மிகத் திறமையாகப் பயிற்றுவித்தார். அப்பேராசிரியர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றுக் கலைப்பட்டம் பெற்றவர்.


சாயர்புரம் காலாச்சாலை பல்கலைக்கல்லூரியாகவும், பன்மொழிக் கலாச்சாலையாகவும், மறைநூற் கழகமாகவும் விளங்கிற்று. நல்ல படிப்பு, நல்ல சாப்பாடு ,நல்ல அடி இதுவே அப்பாடசாலையின் சட்டமாக விளங்கியது.ஏ.ஆர்.சிம்மண்ட்ஸ் போப்பையர் திருநெல்வேலியில் கல்விக்குப் புத்துயிரும் ஊக்கமும் அளித்தார் ,சாயர்புரத்தில் அவர் ஊட்டிய கல்வியின் தன்மையும் நிலைமையும் அறிந்தோர் மகாணம் முழுவதும் அவரது புகழ் என்றும் நிலவும் என்று உறுதியாய் கூறுவர். ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் சாயர்புரம் கலாச்சாலையின் சிறப்பை உணர்ந்து,1848 இல் சாயர்புரத்தில் ஒரு நூல்நிலையம் அமைப்பதற்குப் பொருளதவி செய்தது.


1849 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக இங்கிலாந்து செல்கின்றார்.அப்பொழுது ராயல் ஏசியாடிக் குவாட்டக்லி(THE INDIAN ROYAL ASIATIC QUARTERLY), இண்டியன் ஆண்டிக் குவரி (THE INDIAN ANTIQUARY) சித்தாந்த தீபிகா, இந்தியன் மேகசின்( INDIAN MAGAZINE AND REVIEW) போன்ற ஆங்கில இதழ்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். தமிழ்நாட்டுப் புலவர்கள், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலைப் பகுதிகள், தமிழ்ப்புனிதர் வரலாறு ஆகியவை இவர் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை.(2000;148)


தஞ்சை


மீண்டும் 1850 தமிழகம் திரும்புகின்றார். தஞ்சைப் பகுதிக்குப் பணிபுரிய செல்லுகின்றார் அங்கு வேதநாயகம் சாஸ்திரி அவர்களுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அங்கு இலக்கண, இலக்கிய, நீதி, சமய நூல்களைக் கற்கின்றார். மூன்று இலக்கண நூல்களை எழுதுகின்றார்.TAMIL HAND BOOK என்பதையும், தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம்- தமிழ் அகராதிகளைத் தொகுத்தார். மாணவர்கள் தாய்மொழி அறிவு இலக்கியங்கள் அறிந்திருக்க வேண்டுமெனத் திருக்குறள், நாலடியார், பழமொழி, இனியவை நாற்பது முதலிய நூல்களின்று பாடல்களைத் தொகுத்து தனிச் செய்யுள் கலம்பகம் என்னும் தொகை நூலை உருவாக்கினார். அந்நூலின் முகப்பில் மாக துரைத்தனத்தாராலே ஆதரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் படிக்கின்றவர்கள் எளிதில் தமிழ் இலக்கியத்தைக் கற்ற்றியும் பொருட்டாக ஜீ. யூ. போப்பையராற் செய்யப்பட்டது என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. மாணவர்களிடம் எளிமையாக பாடங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அன்றைய நோக்கமாக இருந்துள்ளது. மேலும் அந்நூலின் முன்னுரையில் ஒழுக்கத்தைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் உரைத்திருக்கும் பாக்களைப் போன்றதொன்றும், தென்னிந்தியாவிலுள்ள மற்ற மொழிகளில் இல்லை(1944;36) என்று குறிப்பிடுகின்றார். இதே காலக்கட்டத்தில் உரைநடை நூலொன்றையும் எழுதுகின்றார்.


தஞ்சையில் ஏற்படுகின்ற சாதிய உயர்வு \ தாழ்வு காரணமாகச் சிக்கல் ஏற்படுகின்றது கிறித்து சபையில் சாதிப்பிரிவினை நிலவுதலாகாது, அது கிறித்துபெருமான் திருவருள் நெறிக்கு மாறுபட்டதாகும் எனவும் கிறத்துவர்கள் யாவரும் ஒரே குலத்தினர், ஒரே குடும்பத்தினர், கடவுள் யாவருக்கும் தந்தை யாவரும் உடன் பிறந்தோராவர் என்ற கருத்தினைக் கூறினார் , ஆனால் அங்குள்ள மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளாது நிராகரிக்கச் செய்யதோடு சங்க மூலமாக நடவடிக்கை எடுத்தனர். சங்கம் மக்கள் கூறுவதை ஏற்ற வற்புறுத்த அதனை விரும்பாத போப் தஞ்சை பகுதியை விட்டு நீங்கி உதக மண்டலத்திற்குச் சென்றார்.


உதகை


1858 ஆம் ஆண்டு உதகையில் ஸ்னோடன் ஹவுஸ் என்னுமிடத்தில் பள்ளிக்கூடம் அமைத்தார். அங்கிருந்த பொது நூலகத்தை மிகப்பெரும் நூல்நிலையமாக மாற்றினார். நீலகிரியிலுள்ள உதகமண்டலத்தில் இவர் இறைபணி ஆற்றிய போது தோடர் என்னும் மலைவாழ் மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டுது. தோடர்கள் பேசும் மொழியினைப் போப் ஆராய்ந்து அம்மொழிக்கு இலக்கணம் எழுதினார்(2000;151)இங்கிலாந்தின் வரலாற்றைத் தமிழக மக்களுக்கு அறிமுகம் படுத்தும் நோக்கத்தில் 1858 இல் இங்கிலாந்து தேசசரித்திரம் என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலின் முகப்பில் செப்பமுடையான் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து எடுத்து கொடுத்துள்ளார். 1859 இல் தமிழ்ச்சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் முறையில் ஒர் அகராதியினை உருவாக்கினார்.(2010:129)


இந்திய வரலாற்றினை எழுதும் பொருட்டுத் தரவுகளைத் திரட்டினார். பின்னால் இந்திய நாட்டு வரலாற்று நூல்கள் இரண்டு எழுதினார்.(1944;47) 1871 இல் பள்ளிக்கூடத்தை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு1871 இல் இருந்து 1882 வரை பெங்களூரில் பிஷப் காட்டன் பாடசாலைக்குத் தலைமை ஏற்றுப் பணிபுரிந்தார்.


1882 முதல் 1908 வரை


1882 இல் இங்கிலாந்து திரும்பினார் 1882 – 1885 காலகட்டங்களில் மதப்போதகராச் செயல்பட்டார். 1885 க்குப் பிறகு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் தொலுங்கு கற்பிக்கும் ஆசிரியராக பொறுப்பேற்றார். அங்கு பணியாற்றும் காலத்து மாக்ஸ் முல்லர், மானியர் உல்லியம்ஸ், பிரௌணில் போன்றோர் நண்பர்களாக இருந்தனர். அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழை எளிதாகக் கற்பிக்கும் வண்ணம் இலக்கண வினாவிடைகளை ஆங்கிலத்திலும் எழுதினார்.


திருக்குறளின் 1330 குறள்களையும் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்(1886) கோவை அரசுக் கல்லூரி நூலகத்தில் போப் எழுதிய scared kural முதல் பதிப்பு உள்ளது. இதில் குறிப்பிடத் தக்கது என்னவெனில் போப் எழுதிய preface முழுமையும் உள்ளது. ஆனால் சைவசித்தாந்த நூற்பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் preface சிற்சில இடங்களில் விடுபட்டுள்ளது(2003: 7)


1893 ஆம் ஆண்டுல் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்புச் செய்தார். அந்நூலில் நாலடியார் தோன்றிய வரலாற்றினை விரிவாகக் கூறியுள்ளார். காப்பியங்கிளில் ஒன்றான சிலப்பதிகாரக் கதையினை மேல்நாட்டவர் உணரும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண நூலான நன்னூலில் பல பகுதிகளை மொழிப்பெயர்ந்து பதிப்பித்துள்ளார். தமிழ்ச்செய்யுள் எழுதுவதற்கான யாப்பு உரையினை ஆங்கிலத்தில் எழுதினார். சிவஞான போதகத்தையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ந்துள்ளார்(1897). திருவாசக மொழிப்பெயர்ப்பைப் பாராட்டி ஆசிய அரசு கழகம் இவருக்கு தங்கப் பதக்கமும் பட்டயமும் வழங்கியது.


புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு இவற்றிலுள்ள வீரச்சுவையுள்ள செய்யுள்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்(1899). ஐரோப்பியர்கள் தமிழ்க் கற்பதற்றகாகச் சில நூல்கள் எழுதி வெளியிட்டார். பழமையான தமிழ் நூல்கள் இவரால் தொகுக்கப்பட்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான அட்டவணையைச் சிறு நூலாகவே வெளியிட்டுள்ளார்.


உண்மைஒளி( THE LIGHT OF THE TRUTH) என்னும் இதழில் போப் ஆறு கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் மூன்றுகட்டுரைகள் திருஞான சம்பந்தரைப் பற்றியது. ஒன்று மாணிக்கவாசகர் பற்றியது. மற்றொன்று சேக்கிழாரும் பெரியபுராணமும் பற்றியது. அடுத்து சண்டேசுவர நாயகர் கதை பற்றியது.


சில தேவார பாடல்களையும் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார். கிறித்துவர்களிடையே தோத்திரப்பாடல்கள் பெற்றுள்ள இடத்தை இப்பாடல்கள் சைவர்களிடையே பெற்றுள்ளன.


சிலப்பதிகாரத்தைக் காற்சிலம்பு (THE LAY OF THE ANCLET) என்னும் பெயரில் மதிப்புரைச் செய்துள்ளார்சித்தாந்த தீபிகையின்11,12 – வது பகுதிகளில் பல கட்டுரைகளைப் போப் எழுதியுள்ளார், மணிமேகலை மொழிப்பெயர்க்கப்பட்டு போப் அவற்றில் வெளியிட்டார். 1911 இல் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை என்பவர் அவற்றைச் சேர்த்துப் புத்தகவடிவில் பதிப்பித்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி போன்ற காப்பியங்களை ஆங்கில மொழியில் மேலை நாட்டவர் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டிய சிறப்பு போப்பிற்கு உண்டு.


போப்பின் நூல் பதிப்பு விவரம்


இணையத்தில்


  • Pope, G. U.: A compendious Tamil English dictionary, 7th ed. New Delhi : J. Jetley for Asian Educational Services, 1981.

  • Pope, G. U.: A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883; 7th ed. Oxford, Clarendon press, 1911, 1926 printing.
  • Pope, G. U.: A handbook of the Tamil language / G. U. Pope. 7th ed. New Delhi : Asian Educational Services, 1979, 1981
  • Pope, G. U.: A handbook of the Tamil language : a Tamil prose reader. New Delhi : Marwah, 1982.
  • Pope, G. U. : A handbook of the Tamil languages : a compendius Tamil-English dictionary, 7th ed. New Delhi : Asian Educational Services, 1981.
  • Pope, G. U.: A Tamil prose reader : a handbook of the Tamil language, New Delhi : Marwah Publications, 1982.
  • Pope, G. U.: Tamil heroic poems, translations, 1st ed. Madras : South India Saiva Siddhanta Works Pub. Society, Tinnevelly, 1973.
  • Pope, G. U.: Tiru-valluvar -The 'Sacred' Kurral of Tiruvalluva-Nayanar / With introduction, grammar, translation, notes (in which are reprinted C.J. Beschi's and F.W. Ellis' versions) lexicon and concordance by the Rev. G.U. Pope. London : W. H. Allen & co., 1886.
  • Pope, G.U.: The Tiruvacagam, or, Sacred utterances of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar : the Tamil text of the fifty-one poems, with English translation, introductions, and notes : to which is prefixed a summary... Oxford : Clarendon Press, 1900.
  • Pope, G.U.: The Naladiyar, or, Four hundred quatrains in Tamil / with introduction, translation, and notes, critical, philological, and explanatory, to which is added a concordance and lexicon [by] Rev. G.U. Pope. New Delhi : Asian Educational Services, 1984.
  • Pope, G.U.: Manikkavacakar aruliya Tiruvacakam. 1970. Series title: Madras University Tamil Department publication series ; 27.
  • A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett, and the late G. U. Pope, D.D. Printed by order of the Trustees of the British museum. London, British museum [etc.] 1909.
  • Pope, G. U. : A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883.; Reprint 7th ed. Oxford, Clarendon Press, 1906, 1911, 1926
  • Pope, G. U: Longman's school history of India, by the Rev. G.U. Pope ... London, New York, Longmans, Green, and co., 1892.
  • Pope, G. U. : Pope's third Tamil grammar ... 2nd ed. Madras : P.R. Hunt, 1858-1859.
  • Pope, G. U.: A Tamil hand-book : or, full introduction to the common dialect of that language, on the plan of Ollendorf and Arnold : for the use of foreigners learning Tamil, and of Tamulians learning English : with... 2nd ed Madras : P.R. Hunt, 1859.

ரோஜா முத்தையா நூலகத்தில்


· போப்பையர் ஜீ.யூ., History of England, இங்கிலாந்து தேச சரித்திரம், printed and published for the madras school book society and sold at their depository, college of Fort St. Georage scotish press,L.C.Graves,printer,1858.


· போப்பையர் ஜீ.யூ., தமிழ் இலக்கண வினாவிடை முதற் புத்தகம், ஆக்ஸ்போர்ட் க்ளாரண்டன் என்னும் யந்தர சாலையில் பதிக்கப்பட்டது,1895


· போப்பையர் ஜீ.யூ., First Catechism of Tamil Grammer, The Christican Literature Socity for India Formerly Called The Christian Verancular Education Socity S.P.C.K Press,1892,1894,1897,1898,1901,1912, Christian literature society for Madras Allahabad Calutta Rangoon Colombo, 1910,1915,1921,1925,1930.


· Pope G.U., Pope’s II Catecism of Tamil Grammer, Madras The Christian vernacular Educations Societ, Printed at the American Mission Press,1865,1905.


· Pope G.U., Five Naayanmaar, Edited Ramachandran T.N., International Institute of Saiva Siddhanta Research,Dharmapura Aadhinam,Mayiladuthurai,1987.


· Pope G.U., A Tamil Hand – Book or Full Introdutction to the Common Dialect of the language on the plan of ollendorf and Arnold,publishers to the Indian office,Fifth edition,1855,1859,1883,1893.


· போப்பையர் ஜீ.யூ.,Pope’s Third Tamil Grammer Part I Catechism printed and pulished by P.R.Hunt at the American Mission Press,Madras,1857


· Pope G.U., A Hand Book of the Ordinary dialect of Tamil Language, Oxford press,1905, Asian Education Serivess,New Delhi,1985.


· Pope G.U., Tamil Heroic Poems,The South Indian Saiva Siddhantha works publishing society,Tinnelvelly,1973, International Institute of Tamil Studies,1997.


மறைமலை நூலகத்தில்


· Pope G.U.,THE TIRUVACHAGAM, OXFORD AT THE CLARENDON PRESS,1900

அண்மையில் ASIAN EDUCATIONAL SERVICES நிறுவனம் போப்பின் நூல்களை மறுபதிப்பு கொண்டு வந்துள்ளது.


1908 பிப்ரவரி 11 ஆம் திகதி இயற்கை எய்தினார். போப் உயிர் நீக்கும் தருவாயில் எனது கல்லறைக் கென்று செலவாகும் தொகையில் ஒரு சிறு பகுதியாதல் தமிழ் மக்களுடையதா யிருத்தல் வேண்டும் என்று வாய்மலர்ந்த செய்தி சென்னைக்கு எட்டியது. அதை முன்னிட்டு, அது போழ்து பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த செல்வகேசவராய முதலியார் ஒரு சிறு தொகை திரட்டி அனுப்பியது எனக்குத் தெரியும்.(1944 : திரு.வி.க அணிந்துரை)எனக் கூறுவதிலிருந்து இறுதி சடங்குக்குத் தமிழர்களின் பங்களிப்பு இருக்கவேண்டுமென போப் விரும்பியு,ள்ளதை அறிய முடிகின்றது.


1840 தொடக்கத்தில் தமிழகத்திற்குச் சமயப் பரப்பலுக்கு வருகைபுரிந்த போப் கிறித்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க , தமிழகத்தைச் சார்ந்தவர்களையே மதப்போதகராக இருக்கவேண்மென எண்ணி சாயர்புரத்தில் அவர்களுக்கான கலசாலை ஒன்றைத் தொடங்குகிறார்.


மாணவர்களுக்கு எளிமையாக இலக்கணத்தை போதிக்க பாடநூல் உருவாக்க முறையினை உள்வாங்கி எளிமையான முறையில் வினாவிடை அமைப்பில் இலக்கணநூலை எழுதியுள்ளார். இந்நூல் அக்காலக்கட்டத்தில் பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது.


தமது இறுதி காலம் வரை தமிழ் தொடர்பான செயல்பாடுகளிலேயே ஈடுபாடு கொண்டு வாழ்ந்து மறைந்துள்ளார்.


பயன்பட்ட நூல்கள்

1. அரசு.வீ(பதிப்பாசிரியர்), பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழியல் கைநூல், சென்னைப் பல்கலைக்கழகம்கல்விப்பணியாளர் கல்லூரி, சென்னை, 2010.


2. அருள் தங்கையா ஐயா ஆ., புலவர் போப்பையர், PRINTED AT THE DIOCESAN PRESS, MADRAS 1944.


3. சீனிவேங்கடசாமி மயிலை சீனி., கிறித்துவமும் தமிழும், சைவசித்தாந்த கழகம், சென்னை, 2003 .


4. சீனிவேங்கடசாமி மயிலை சீனி., பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம், சைவசித்தாந்த கழகம், சென்னை,2003.


5. தேவராஜ் டி., கிறித்துவர் வளர்த்த பைந்தமிழ்(பத்தொன்பதாம் நூற்றாண்டு), மதுரை,2000.


6. மீனாட்சிசுந்தரம் கா., ஐரோப்பியர் தமிழ்ப்பணிகள், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2003.

கருத்துகள்

ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
ஜி.யு.போப் குறித்து வரலாற்றில் பதிவுகள் இருப்பினும் வலைத்தளத்தில் அவர் அவசியம் அறியப்படவேண்டியவராகிறார். நல்ல விவரமான பதிவு. தொடருங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Superb blog post, I have book marked this internet site so ideally I’ll see much more on this subject in the foreseeable future!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Great site. A lot of useful information here. I’m sending it to some friends!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Thank you, I have recently been searching for information about this topic for ages and yours is the best I have discovered so far.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Keep posting stuff like this i really like it
Robin இவ்வாறு கூறியுள்ளார்…
ஜி.யு.போப் அவர்கள் எழுதிய A handbook of the Tamil language புத்தகத்தைப் படித்துள்ளேன்.

அருமையான கட்டுரை. நன்றி.
பா.இளமாறன் (ஜெய்கணேஷ்) இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கட்டுரை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்