முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுவெளி - ஆய்விதழ்

தமிழாய்வினை மாற்றுச் சிந்தனைக்கு உட்படுத்தி புது வகை உரையாடலுக்கான களத்தினை உருவாக்கி கொடுக்கும் மாற்று வெளியின் 7 ஆவது இதழாக தமிழ்ச் சமூக வரலாறு புதுப்பார்வைகள் - அணுகுமுறைகள் வெளிவந்துள்ளது. அண்மையில் மறைந்த பேரா.கா.சிவதம்பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பேரா.வீ. அரசு அவர்கள் தமிழ் சமூக வரலாற்றை மீட்டெடுப்பதில் புதிய அணுகுமுறைகளையும், அதன் வழி இலக்கண இலக்கியங்களில் ஊடாடிக் கிடக்கக்கூடிய தரவுகளைச் சேகரித்தும் , முன்செய்த ஆய்வு விவரணைகளை மறு பரீசிலனைச் செய்தும் தமிழ் சமூகம் குறித்த பேரா. கா.சிவதம்பியினுடைய பார்வையினை, பங்களிப்பினை தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஆடை ஏற்றுமதியிம் மூலம் உலகளாவி இணைந்து செயல்படக்கூடிய திருப்பூர் நகர தொழிலாளின் பிரச்சனைபாடுகள் ,உரிமைப் போராட்டங்கள் , அவர்களுக்கு ஏற்படு நெருக்கடிகளைப் புரிந்து கொள்ளவதற்கான திறவுகோளாக எம்.விஜயபாஸ்கரன் அவர்களுடைய கட்டுரையும், அடித்தள மக்கள் மத்தியில் தினதந்தி ,தினமலர் இதழ்கள் ஏற்படுத்தியுள்ள

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…