திருமணத்தில்.......


சிலப்பதிகாரம் மூன்று கண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டுள்ளது.முதல் காதையான மங்கலவாழ்த்துப் பாடலில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கும் திருமண நிகழ்ச்சியை விவரிக்கின்றார் இளங்கோவடிகள்.ஒரு திருமணம் என்றால் எப்படி நடக்கும்,அதில் யாரெல்லாம் பங்கு பெறுவார்கள்,அவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை மிக அழகாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திகின்றார்.


திருமண நாளில் முரசு முதலியன இயம்பின,மத்தளம் முதலியன அதிர்ந்தன,சங்கம் முதலியன முழங்கின,மங்கல அணி அரசன் வெண்குடை கீழ் உலா வருவது போல் அந்நகரினைச் சுற்றி எடுத்து வந்தனர்.
திருமண மண்டபத்தில் ஆழாகன பூவேலைபாடுகள் நிறைந்து,அப்பூவேலைப்பாடு செய்துள்ள தூண்களில் வயிரமணிகள் பதிக்கப்பெற்றுள்ளன.மண்டபத்தின் மேலே நீல பட்டினால் அலங்காரம் செய்யப்பெற்று அதில் முத்துக்கள் தொங்கவிடப்பெற்றுள்ளன.


அம் மண்டபத்தில் அழகிய பெண்கள் தங்களை நன்றாக அலங்காரம் செய்து கொண்டு,மேனிமுழுதும் பொன்னாலாய நகையினை அணிந்திருப்பதால் விளங்குகின்ற மேனியை உடையராய் உள்ள அவர்கள் விரைந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும்,மலர்களை கையில் ஏந்திகொண்டும்,தங்களுக்குள்ளே பேசிக்கொண்டும்,சிலர் பாடிக்கொண்டும்,சிலபெண்கள் ஒரக்கண்ணால் தம் கதலர்களை நோக்கிக் கொண்டும்,சிலர் சந்தன சாந்தினையும் புகையினையும்,மணம் மிக்க மாலைகளையும்,இடித்த சுண்ணத்தினையும்,விளக்குகளையும்,கலங்களையும், ஏந்திக்கொண்டும், அரும்பிய புன்முறுவலையுடைய பெண்கள் முளைப்பாலிகை யினராயும் நிறைகுடத்தினராயும் வந்து திரண்டனர்.

அப்பொழுது வானில் திங்களும் உரோகிணியை சேர்ந்த அந் நன்னாளில்,அருந்தி போன்று கற்புடைய கண்ணகியை,மாமுது சான்றோர்கள் வேத நெறிபடி மந்திரங்களைச் சொல்ல,அவர்கள் தீவலம் வந்து திருமணம் செய்து கொண்டதைக் காண கண்கோடி வேண்டும் என்கின்றார் இளங்கோவடிகள்.

கருத்துகள்

துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
அழகான வர்ணனையில் காட்சிகள் கண்முன்.வாழ்த்துக்கள்.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ,ராஜா உங்கள் கருத்துரைக்கு நன்றி.
Mojo Arasu இவ்வாறு கூறியுள்ளார்…
பழந்தமிழ் இலக்கியங்களில் அழகான வர்ணனைகளும், உவமைகளும் நிறைந்துள்ளன. அவற்றின் மூலம் நாம் முன்பிருந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுகிறோம். தங்களின் முயற்சியால் அவற்றைப் பலரும் அறிந்துகொள்ள முடிகிறது.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
//பழந்தமிழ் இலக்கியங்களில் அழகான வர்ணனைகளும், உவமைகளும் நிறைந்துள்ளன. அவற்றின் மூலம் நாம் முன்பிருந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுகிறோம். தங்களின் முயற்சியால் அவற்றைப் பலரும் அறிந்துகொள்ள முடிகிறது.//

ஆம் அரசு நம் பழ இலக்கியங்களில் இல்லாத வளங்களே இல்லை......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி நன்றி.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வர்ணனைகள்
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சேகரன்.........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

செய்யுளும் உரைநடையும்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்