முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேராசிரியர் எம்.ஏ.சுசீலாமதுரை பாத்திமாகல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஒய்வு பெற்று இந்திய தலைநகரான டெல்லியில் வசித்து வருபவர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள். கடந்த சில மாதங்களாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப்பெற்றேன். அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்த குற்றமும் தண்டனையும் என்னும் நூலை இந்த ஆண்டு புத்தக்கணகாட்சியில் வாங்கியிருந்தேன். அந்நூலே அவர்களை அறிய காரணமாக இருந்தது. பிறகு அவர்களுடன் இணையத்தில் மட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தேன் . கடந்த மாதம் அவர்கள் நெறிகாட்டுதலில் முனைவர்பட்ட அய்வு மேற்கொண்டு ,முடித்த பெண்ணுக்கு வாய்மொழித் தேர்வுக்கு மதுரை வருவதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள்.

அவர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.அவர்கள் மதுரை வந்தவுடன்,சென்று சந்தித்தேன்.நான் வருகிறேன் என்று கூறிய நாளுக்கு முதல் நாளே சென்றேன்.அவர்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு , என்னோடு நேரத்தைச் செலவிட்டார்கள்.பழகுவதற்கு மிக எளிமையனவராக,இனிமையானவாராக இருந்தார்கள். அவர் அவர்களுடை குடும்ப நண்பர் வீட்டில் தான் தங்கிஇருந்தார்.அவர்களோடு 30 ஆண்டுகால பழக்கமாம்.அவர்களும் மிக அன்போடு வரவேற்றார்கள்.

இலக்கியத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம். இன்றைய பெண்ணியம் பற்றி வினாவினேன் . இன்றைய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் ஏற்றக்கொள்ளும் படி இல்லை என்றார்.காரணம் அவர்கள் பெண்ணுரிமை ,பெண்ணியம் என்பதை தவறாக புரிந்துகொண்டு,இலைமறை காயாக இருக்கவேண்டிய செய்திகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றார்கள் எனச் சாடினார்.

அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது பல ஆண்டுகள் அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் வந்தாள். அந்த பெண் டெல்லியில் சென்று அங்கு வேலை செய்துள்ளாள்,அந்த பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் செய்துள்ளார்கள்,அந்த பெண்ணைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே நினைத்துள்ளனர்.ஆனால் அந்த பெண் வீட்டில் உள்ள அனைவரும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென விரும்பி,அவர்களைப் பலவகையில் துன்புறுத்தியுள்ளாள்.ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டாள் இறந்துவிடுவேன் என்று மிரட்டியும் இருக்கின்றாள். அவர்கள் பயந்து போய் ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.இப்பொழுது ஏதாவது உதவிசெய்யுங்கள் என்று வந்து நிற்கின்றாள்.சுசீலாஅம்மாவும் முடிந்த உதவியைச் செய்கின்றேன் என்று அனுப்பி வைத்தார்கள்.இன்னா செய்தாருக்கும் இனியவே செய்வார்கள் பெரியோர் என்பதனை அவர்களைப் பார்த்து அறிந்தேன்.

பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னும் நேரத்தைப் பொன்போல் மதித்து, தேனீ போல சுறுசுறுப்பாய் இயங்கி வருகின்றார்கள்.இணையத்திலும் எழுதிவருகிறார்கள்.அவர்களின் இடைவிடாத உழைப்பு என்னைக் கவர்ந்து.

கருத்துகள்

முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நான் பேராசிரியர் சுசீலா அவர்களில் வலைப்பதிவைப் பார்த்திருக்கிறேன்..
அவரின் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
நறி குணா
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
///அவர்கள் பெண்ணுரிமை ,பெண்ணியம் என்பதை தவறாக புரிந்துகொண்டு,இலைமறை காயாக இருக்கவேண்டிய செய்திகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றார்கள் எனச் சாடினார்.///

உண்மையான வார்த்தை
வண்ணத்துபூச்சியார் இவ்வாறு கூறியுள்ளார்…
அவர்களின் வலைப்பதிவையும் படித்திருக்கிறேன்.

அதன் சுட்டியும் இணைத்திருந்தால் இந்த பதிவை படிப்பவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

வாழ்த்துகள்.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வண்டத்துப் பூச்சியாரே..........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…