இடுகைகள்

பூனையும் நானும்

கதிரவன் தன் கதிர்களால் மெல்ல வருடிக்கொடுக்கும்  நேரம். வீட்டின் பின்புறம் மதில் மீது ஒரு பூனை அதன் குட்டியுடன் இருந்தது.  புதிய வரவு. முன்பின் அதனை நான் பார்த்தது இல்லை. அன்று தான் பார்க்கிறேன். நான் அதனையேப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அங்கு முதல் முறையாக மாமரம் ஒன்று பூத்திருந்தது. சாத்துக்குடி மரம் இரண்டு மூன்று காய்களை ஈன்றிருந்தது. நார்த்தங் குருவி, சிட்டுக்குருவி முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அணிற்பிள்ளைகள் வேகமாக மரத்தில் தாவிக்கொண்டிருந்தன. பூனையைப் பார்த்தேன் அது என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது. உனக்குப் பசிக்கிறதா என்றேன். மியாவ் என்றது. உணவு எடுத்துவரவா என்றேன் மியாவ் என்றது. உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு தூர நின்று கொண்டேன். பூனை  கண்களிலும், நடையிலும் அச்சத்துடன் இறங்கி வந்தது. அதன் குட்டியை அழைக்கவில்லை. உணவு அருகே  வந்தது. என்னைப் பார்த்தது. அச்சப்படாமல் சாப்பிடு உன்னை நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்றேன். சாப்பிடத் தொடங்கியது. சுற்றும்முற்றும்பார்த்தவாறே. என் மீதும் கண் வைத்துக் கொண்டு. மெல்ல மெல்ல தன் நாவால் உணவினை நக்கி நக்கிச் ச...
படம்
க. அரவிந்தன் சீர்மை கென் வில்பர் அவர் மனைவி த்ரேயாவின் கதையை அடிப்படையக் கொண்டு எழுதப்பட்ட புனைவாக்கம். உள்ளிழுத்துச்செல்லும் செறிவான மொழிநடை. நோய்மை ஏற்படுத்தும் துயரமும் மன வலியும் சுற்றி இருப்பவரோடு முரண்படுதலும் என விரிகிறது.
https://www.youtube.com/watch?v=hZxm_wpoNOE&feature=share

நாழிப்பாசி ஒவ்வொரு வீட்டிலும் பூத்தப்படி…

படம்
இந்திய தரத்திற்கு எழுதப்பட்டுள்ள நாவல் எனச் சா. கந்தசாமி அவர்களால் முன்மொழியப்பட்ட சி.எம்.  முத்துவின் மிராசு நாவல் தமிழ் புனைவாக்க வெளியில் ஒரு காத்திரமான படைப்பு. அவரின் அனைத்துப் படைப்புகளும் தமது சுய சாதிகுறித்து, இருந்தாலும் அதன் பெருமிதங்களை அல்ல அவற்றுள் இருக்க கூடிய உள் முரண்களை, சிடுக்குகளை அப்படமாக வெளிப்படுத்துபவை. மிராசு நாவல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்திலிருந்து தொடங்கி சமகாலம் வரை, கிட்டத்தட்ட   எழுபது ஆண்டுகாலம் ஒரு குடும்பத்தின், ஒரு ஊரின் அவர்கள் பார்வையில் தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த  மாற்றத்தைக் கவனப்படுத்துகிறது.  கீழத் தஞ்சை கிராமத்தில் வாழ்ந்த சேது காளிங்கராய மிராசுவும் அவரைச் சுற்றியிருந்த மனிதர்களும் எவ்வித புனைவுகளும் அற்று அசலாக நம் கண்முன் நடமாடுகிறார்கள்.  இந்த நாவல் அநேக வகையான திருப்பங்களோ கற்பனைக்கும் எட்ட முடியாத மர்ம முடிச்சுகளோ நாயகன் நாயகி போன்ற சம்பிர்தாயமான பாத்திரங்களோ அடுக்கடுக்கான சம்பவங்களோ எதிர்ப்பார்ப்பை நோக்கிய நிகழ்வுகளோ கோர்வைகளோ ஏதுமற்ற நதி அதன் போக்கிற்கு ஓடுகிற மாதிரி நாவல் அதன் போக...

சீனப் பெண்களின் சொல்லப்படாத கதைகள்

படம்
நீ நேராக நிற்கும் பட்டசத்தில் வளைந்திருக்கும் நிழலைக் கண்டு ஏன் பயப்படுகிறாய் - சீனப் பழமொழி பெண்கள் பற்றி சொல்லப்படாத பேசப்படாத எத்தனை எத்தனையோ கதைகள் உலகம் முழுதும் இருக்கிறன . அந்த கதைகள் எல்லாம்   பொதுவெளிக்குள் சொல்லப்படும் போது தான் அவைகள் குறித்தான பேச்சுகள் உருவாகத் தொடங்குகின்றன . அவற்றிலிருந்து தான் ஒரு சமூகம் நாம் இன்னும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது குறித்தான புரிதலை உருவாக்கிகொள்ள முடியும் .   அந்தவகையில் பெண்களின் பாடுகள் பற்றிய உரையாடலை நிகழ்த்தியவர் 1989 முதல் 1997 வரையில் சீனாவின் மிகப் பிரபலமான வானொலி தொகுப்பாளினி சிம்ரன் . அவர் தனது வானொலி நிகழ்ச்சியின் மூலம் பெற்ற அனுபவங்களையும் , சந்தித்த பெண்களின் உண்மை வாக்கு மூலங்களையும் மனக் குமறல்களையும் ஆதாரத்துடன் தைரியமாகத் தொகுத்து எழுதிய புத்தகம் The good women of china: Hidden Voices. அனைத்து தரப்பு பெண்களையும் நேரிடையாக சந்தித்து பேட்டி கண்டு , உண்மை சம்பவங்களின் தொகுப்பாக சீனாவில் உருவான அரசியல் மாற்றமும் அதனால் ...

பால் அரசியல் தாய்ப்பால் - புட்டிப்பால் - மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்

படம்
பால் குறித்த விவாதங்கள் அண்மை காலத்தில் மேற்கிள ம்பியுள்ளன. அனைத்திலும் கலப்படம் என்ற சூழல் இன்று நிலவுகிறது. நூகர்வோருக்குப் பெரும் சவாலான காலகட்டமாக இருக்கிறது. எந்த பொருளை நம்பி வாக்குவது என்ற புரியாத நிலை. ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் நுண் அரசியல் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. பால் விற்பனை பெருக்கத்திற்காகச் செயப்படும் அரசியல் மிக ஆபத்தானதாக இருக்கிறது. மனித உணர்வுகள் காயடிக்கப்படுகின்றன. இதனுள் செயல்படும் தன்மையை தக்க தரவுகளின் பின்புலத்தோடு பால் அரசியல் என்னும் நூலினை நக்கீரன் அவர்கள் எழுதியுள்ளார்கள். தன் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரக்கவில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பது தான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைப்பத்தன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறியமாட்டார். அது மட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்திருக்கிறது. ...
படம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் இவ்வுரைகியையுமாறு சென்னை இந்துதியாலஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் கோ.வடிவேல் செட்டியார் அவர்கள் இயற்றிய தெளிப்பொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும், சென்னை சித்தாரிப்பேட்டை ஆங்கிலோவர்னாகுலர்ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் வல்லி. ப. தெய்வநாயக முதலியார் அவர்களாலும், சென்னை திருவல்லிக்கேணி, கம்மர்ஷியல் அச்சியந்திரசாலையில் இரண்டு பகமாக 1904 ல்  பதிப்பிக்கப்பட்டது. அந்நூலை மீள் பதிப்பாக 2015 ல் சிவாலயம் ஜெ.மோகன் பதிப்பித்துள்ளார். அண்மையில் சிவாலயம் மோகன் அவர்களைத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் அய்யா அவர்கள் சந்திக்க சென்றார். அவரோடு நானும் எனது கணவர் மருத்துவர் சேக்கிழாரும் உடன் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் மென் பொருள் பொறியாளர் என்றாலும் தமிழ் மீது அளப்பறிய காதலால் தமிழின் தொன்மையான நூல்களைத் தேடித்தேடி சேகரித்து அவற்றைப் பாதுகாப்பதும், அந்நூல்களை மீள்பதிப்பாக்கம் செய்வது குறித்தும் சிலாகித்தார். அவருடைய உரையாடலின் பெரும்பகுதி தமிழுக்கு தான் ஏதேனும் செய்யவேண்டும் என...

கக்கூஸ் ஆவணப்படம்

படம்
இன்று இணையத் தளத்தில் இயக்குநர் திவ்யா எடுத்த கக்கூஸ் ஆவணப்படம் பார்த்தேன். மனம் கனத்து உலுக்கி பல்வேறு கேள்விகளை என்னுள் எழுப்பியது. இந்த படத்தைப் பார்க்கும் போது சில இடங்களில் கண்களை மூடிக்கொண்டேன், சில காட்சிகளைப் பார்க்கும் போது குமட்டிக்கொண்டு வந்தது. பார்க்கும் போதே இப்படியான நிலை உருவாகிறதே, இவ்வேலைகளைச் செய்யும் அவர்களின் நிலை? இவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம். https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU

மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

படம்
மகாவித்துவான்  ச. தண்டபாணி தேசிகர் (சிதம்பரம் சடையப்ப தண்டபாணி தேசிகர்) தோற்றம் - 02. 04. 1903 மறைவு     - 25. 04. 1990       சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி, கிராமத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சடையப்ப தேசிகர். தாயார் பாலம்மாள். சு. பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் மகாவித்துவான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யரின் மாணவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவன் எனும் பட்டம் பெற்றவர். பின் திருவாரூரில் இவர் பணிசெய்யும் போது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இவருடைய மாணவர். மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.           திருக்குறள், திருவாசகம் போன்றவற்றின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் சிறந்த இரு நூல்களை இயற்றிய தண்டபாணி தேசிகர் அவர்கள் சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான் மற்றும் திருமந்திரம் விளக்கக் கூடிய பஞ்சாச்சர தீபம் போன்ற நூல்களை எழுதியுள்ளார...

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பு

படம்
சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு பாடல்கள் முழுதும் உருபனியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அருஞ்சொற்களுக்கு  விளக்கமும் இலக்கணக் கூறுகளும் கொடுக்கப்பட்டுள்ளதுடன்,  அருஞ்சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொல் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மொழியினுடை அமைப்பினையும், ஐங்குறுநூற்றுள் புலவர்களால் மொழி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். கணினி மொழிக்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தனித்தமிழ் இயக்கமும் நீலாம்பிகை அம்மையாரும்

நீலாம்பிகை மறைமலையடிகளின் மகள்; இளமையிலேயே தந்தையிடம் தமிழைக் கற்றுப் புலமை பெற்றவர். தனித்தமிழியக்கத்தை மறைமலையடிகள் தோற்றுவிக்கத் தூண்டுதலாக இருந்தவர். மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையெனில் அவ்வியக்கதின் முதல் தொண்டர் நீலாம்பிகை. தந்தையின் தனித்தமிழ் இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்ற நிலையில் அறியப்படுகிறார்.                       தனித்தமிழ் தோற்றம் குறித்து மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையாரும், மகன் மறை திருநாவுகரசும் தம் நூல்களில் பதிவுசெய்துள்ளனர். ஒருநாள் அடிகளும், அடிகளின் மூத்தமகள் நீலாம்பிகை அம்மாயாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும் போது அடிகள் இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவின் திருமுறையிலுள்ள, பெற்ற தாய்தனை மகமறந் தாலும்           பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிருமறந் தாலும்         ...