மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்



மகாவித்துவான் 
ச. தண்டபாணி தேசிகர்

(சிதம்பரம் சடையப்ப தண்டபாணி தேசிகர்)

தோற்றம் - 02. 04. 1903
மறைவு     - 25. 04. 1990

      சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி, கிராமத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சடையப்ப தேசிகர். தாயார் பாலம்மாள். சு. பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் மகாவித்துவான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யரின் மாணவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவன் எனும் பட்டம் பெற்றவர். பின் திருவாரூரில் இவர் பணிசெய்யும் போது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இவருடைய மாணவர். மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.

          திருக்குறள், திருவாசகம் போன்றவற்றின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் சிறந்த இரு நூல்களை இயற்றிய தண்டபாணி தேசிகர் அவர்கள் சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான் மற்றும் திருமந்திரம் விளக்கக் கூடிய பஞ்சாச்சர தீபம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

       இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி தமிழக அரசு இவருக்குத் திருவள்ளுவர் விருதைத் தந்து சிறப்பித்தது. இவரது பஞ்சாட்சர தீபம் நூலுக்காக திருவாடுதுறை ஆதீனம் இவருக்கு ம்மாவித்துவான் என்னும் பட்டம் வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தையும் புதுவைப் பல்கலைக்கழகம் இவருக்கு துணைவேந்தர் கி. வேங்கிட சுப்ரமணியம் தலைமையில் 1000 வெண் காசுகளுடன் முதுமனைவர் பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தது.

      இந்திய அரசு இவரது வாழ்நாள் பணிகளுக்காக பத்ம பூஷன் விருது தந்து பெருமைப்படுத்தியது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்த திருக்குற்ள உரைக்களஞ்சியம் பழைய உரையாசிரியரிகளின் உரைகளைத் தொகுத்தும், வேண்டிய இடத்து விளக்கமும் முடிபும் ச.தண்டபாணி தேசிகர் அவர்களால் கூறப்படிருக்கும். இந்நூல்கள் மிக முக்கியமான தொகுப்பு .





கருத்துகள்

C.Rajendiran, Founder ,www.voiceofvalluvar.org இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பணி..மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் பற்றிய அறிமுகக் குறிப்பு...
மிக்க நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்