சீனப் பெண்களின் சொல்லப்படாத கதைகள்
நீ நேராக நிற்கும் பட்டசத்தில் வளைந்திருக்கும்
நிழலைக் கண்டு ஏன் பயப்படுகிறாய் - சீனப் பழமொழி

அனைத்து தரப்பு பெண்களையும் நேரிடையாக சந்தித்து பேட்டி கண்டு, உண்மை சம்பவங்களின் தொகுப்பாக சீனாவில் உருவான அரசியல் மாற்றமும் அதனால் பெண்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் வன்முறைகளையும் பெண்குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறைகளும் பதிவு செய்துள்ளார். மேலும் ஆண்குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட லெஸ்பியன், ஹோமோசெக்ஸ் சீன சமுகத்திலும் கலாச்சாரத்திலும் பாலியல் குறித்த கருத்துக்களைப் பேசும் முதல் புத்தகம் இது.
இந்தப் புத்தகம் சீனப்பெண்களின் ஒடுக்குமுறை பற்றியும் நவீன பெண்களின் புதிய வாய்ப்புகள் பற்றியும் வெளிப்படையாக உண்மைக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறுது. சீன வரலாறு மிக நீண்ட வரலாறு. ஆனால் ஒரு சில வருடங்கள் முன்புதான், பெண்களுக்கான வாய்ப்புகளுக்கு ஆண்களிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. 1930 களில் வெளிநாடுகளில் பெண்கள் பாலியல் சுதந்திரம் கேட்டுப் போராடிய காலகட்டங்களில்தான், சீனப்பெண்கள் ஆண்களின் உலகத்தை எதிர்கொள்ளவே ஆரம்பித்தனர். இனி ஆணின் காலடியில் விழுந்து கிடக்க இயலாது என்றும், தங்கள் திருமணங்களைத் தாங்களே முடிவு செய்வோம் என்ற சுதந்திர சிந்தனைக்குள் வந்தனர். அது எதுவானாலும், இன்று வரை சீனப்பெண்களுக்கு அவர்களது சமூகப் பொறுப்பு என்னவென்றோ அவர்களது உரிமை என்னவென்றோ தெரியாது என கூறுகிறது. ஒட்டுமொத்தமாக இந்நூல் சீனாவின் நவீன நாகரிகப்பெண்களிலிருந்து பழங்குடிப்பெண்கள் வரையான இதுவரை சொல்லப்படாத பல கதைகளைச் சொல்கிறது. சீன பெண்களின் நிலை குறித்து அறிய இந்நூல் உதவும். மொழிபெயர்ப்பு சிற்சில இடங்கள் தவிர்த்து நீரோட்டம் போல் வாசிப்பதற்குத் தடையின்றியுள்ளது.
எதிர் வெளியீடு
96,நீயூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி-642002
தொலைபேசி
04259 226012,99425 11302
விலை
280/-
கருத்துகள்