இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேன் சிட்டும் சில முட்டைகளும்

படம்
  தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிறகு, போன்சாய் ஆல மரத்தைச் சீர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் புலர்ந்தது அன்றையக் காலை பொழுது.   வீட்டின் முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றுமாக   இரண்டு போன்சாய்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கடந்த மரங்கள். அன்று காமராசர் பிறந்தநாள்.   சிட்டுக் குருவிகளின் சிணுங்கல்களும் தவிட்டுக் குருவிகளின் ஆராவாமும், கிளிகளின் கொஞ்சல்களும், செம்போந்துவின் முணுமுணுப்பும், காக்கைகளின் கரைதலும், குயில்களின் கூவலும், அணிகளின் கீரீச்சிடலும்   பரிதியன் கதிர்கள்   சாரளத்தின் இடுக்குவழியேஎன்னவரின் புகைப்படத்தில் பரவ விட்டிருந்த காலை இளம் பொழுதில் போன்சாய் மரத்தைச் சீர் செய்யத் தோட்டத்துக் கத்திரிக்கோலை எடுத்தேன். வீட்டின் பின்புறம் இருந்த போன்சாய் ஆலமரத்தின் வளர்ந்த கிளைகளை வெட்டி எடுத்தேன். வெட்டிய இடத்திலிருந்து பால் வடிந்து கொண்டே இருந்தது. வீட்டின் முன்புறம் உள்ள செடியை ஒழுங்குப்படுத்த கத்திரியுடன் செடியருகே சென்றேன். சீர் படுத்தினேன். அந்நேரத்தில் அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மா போன்சார் மரத்திற...