இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயக்கி இந்தியத் தொல்குடித் தெய்வம் முனைவர் வெ. வேதாசலம்

படம்
  இயக்கி இந்தியத் தொல்குடித் தெய்வம் முனைவர் வெ. வேதாசலம்   இன்று இந்தியா என்று கூறப்படும் நிலத்து தொல்பழங்காலத்து பல கடவுளர்களும் வழிபாட்டு முறைகளும் இருந்துள்ளன. அவற்றுள் இயக்கன் – இயக்கி வழிபாட்டு முறை குறிப்பிடத்தக்கது.   இயற்கையும் இயற்கை இறந்த ஆற்றல்களைத்   தொல்குடிகள் வேவ்வேறு நிலைகளில் குறிப்பாக   தங்கள் ஊர் மரங்களில் குடிக்கொண்டிருப்பதாகவும் தங்களுக்கு வளத்தை அளிப்பதாகவும் நம்பி, அம்மரக்கிளைகளுக்கு மாலை அணிவித்து, மரத்திற்கு மேடை அமைத்து விளக்கேற்றி படையல் படைத்துள்ளனர். பின்னர் உருவங்கள் செய்து வணங்கியுள்ளனர். பிற்காலத்து இயக்கர்- இயக்கியர் வழிபாடாக மாறியுள்ளது. இந்தியாவில் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே   அதாவது ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே இவ்வழிபாடு மிகச்சிறப்புடன் இவ்வழிபாடு இருந்துள்ளது. வைதீக, சமண, பௌத்த மதங்கள் தொடக்கத்தில் இவ்வழிபாட்டினை நிராகரித்தலும் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாகத்   தங்கள் தெய்வங்களின் காவல், ஏவல் தெய்வங்களாக உட்செரித்துக்கொண்டனர். பொதுவாக இயக்கியை வளமையின் தெய்வமாக வணங்கியுள்ள...

எனது பால்யகால ஆசிரியர்கள் இன்றும் நினைவுகளில்….

  பால்ய காலத்து (1 – 5 ஆம் வகுப்பு) ஆசிரியர்களில் நினைவில் நிற்பவர் மறைமலை என்ற ஆசிரியர். வெறுப்பின் பொருட்டே அவர் என் நினவுகளில் தங்கியுள்ளார். சமத்துவம் என்ற குணம்   துளியும் அவரிடம் நான் அந்த வயதில் பார்க்கவில்லை என்பதே (நிறபேதம் பார்த்தவர் பேசியவர்).   ஒக்கநாடு கீழையூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். ஆறாம் வகுப்பு ஒக்கநாடு கீழையூர் ஊரின் புறத்தே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு வகுப்பெடுத்த வி. என். என்று அன்புடன் அழைக்கப்படும் வி. நடராசன் சார். அவர் மீது பயம் கலந்த மரியாதை எப்பொழுதும் உண்டு. மிக கண்டிப்பானவர். பாடம் நடத்துவதில் வல்லவர். மாணவர்கள் தவறு செய்யும் பொழுது கிண்டலும் கேலியுமாக அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார். அவர் கரும் பலகையில் எழுதிக்கொண்டிருப்பார். ஆனால் பின்னால் பேசும் மாணவர்களைச் சரியாக் கணித்து அவர்களின் மீது சாக்பீஸைத் தூக்கி எறிவார். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் சாருக்கு முதுகில் ஒரு கண்ணுயிருக்குமோ ஒருவேளை தட்டானைப் போல் எல்லாப் பக்கமும் அவர் கண்களால் நமக்குப் புலனாகாமல் பார்க்க முடிகிறதோ என்று எங்களுக்குள் பேசிக்கொள...