மூக்கரட்டை ரசம்(சூப்)

எங்க ஊரில் (ஒக்கநாடு கீழையூர் என்ற ஒக்கூர்)அதிகமான அளவு மூக்கரட்டை எங்கும் படர்ந்து காணப்படும். எங்க அம்மாயி நல்லா சமைக்கும்.  அவங்க சமைச்சா எங்க வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். எதனையும் மிக சுவையாக சமைத்து தருவதில் கைதேர்ந்தவர். மூக்கரட்டை ரசம் வைத்து தருவார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். மூக்கரட்டை தரையோடு படர்ந்திருக்கும் அதனை பிடிங்கி வந்து அதன் வேரை அம்மியில் மைய அரைத்து அதனுடன் மிளகு, சீரகம்,சோம்பு,மஞ்சள், மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து வைத்து அரைத்து வழிக்கும் போது சிறிய வெங்காயத்தையும் வைத்து வழித்து எடுத்து, நல்லெண்ணை ஊற்றி சிறிது கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி நன்றாக வதக்கி விட்டு, புளி கரைகல் குறைந்த அளவு அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையைக் கலந்து, கொதித்து வரும்பொழுது அதன் மேல் நல்லெண்ணைவிட்டு இறக்கி வைத்தால் கமகம மணம், மிகுந்த சுவை. வாய்ப்புக் கிடைத்தால் ஊருக்குப் போகும் பொழுது அம்மாயியை வைக்கச் சொல்லி படத்தோடு போடுகிறேன்.

கருத்துகள்

ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
கிராமத்தின் மணத்தையும் அதன் வேரையும் இழந்துகொண்டிருக்கிறோம். மூக்கரட்டை ரசம் ஒருமுறை சாப்பிட்ட நினைவு. இடம். வாளமர்க்கோட்டை. அவர்கள் கருப்பு சட்டியில் வைத்துக் கொடுத்தார்கள். எழுதுங்கள் இதுபோன்ற பதிவுகள் காலத்தின் அவசியமானவை.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஹரணி சார்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலை மாறி வருகிறது...அதனை நினைத்து மனம் ஏங்குகிறது
THE BALACHANDRAN இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பு சகோதரி மூக்கரட்டை வேர் என நீங்கள் குறிப்பிட்டது அதன் தண்டு பகுதியா அல்லது பூமி கீழே உள்ள வேர் பகுதியா?விளக்கவும் நன்றி பாலச்சந்திரன்
THE BALACHANDRAN இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
THE BALACHANDRAN இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
THE BALACHANDRAN இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பு சகோதரி மூக்கரட்டை வேர் என நீங்கள் குறிப்பிட்டது அதன் தண்டு பகுதியா அல்லது பூமி கீழே உள்ள வேர் பகுதியா?விளக்கவும் நன்றி பாலச்சந்திரன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் பாலசந்தர் அவர்களே மூக்கரட்டை செடியின் தண்டு அல்ல அடி வேர்பகுதியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்