முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமம்

அதுகொல்?தோழி!காம நோயே,
வதிகுருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடைத்திரை திவலை அரும்பும் தீம்நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடுஒல் லாவே(குறுந்தொகை,5)

தன்னிடத்தே தங்கியிருக்கும் நாரைகள் உறங்கும் இனிய நிழலையுடைய புன்னை மரமானது, அலைவீசும் துளியால் அரும்புகின்ற இனிய நீர்ப்பரப்பையுடைய நெய்தல் தலைவன் பிரந்தானாக , தாமரை போன்ற கண்கள் இமை பொருந்தாவாயின்
(உறங்கவில்லை) அவ்வுறக்கமின்மைதான் காமநோயோ எனப் பிரிவில் கவலையோடு தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாம்மும் விடியலும் என்று இப்
பொழுதிடை தெரியின், பொய்யே காமம் (குறுந்தொகை,32)

காலை நண்பகல் பிரிந்த்தால் செயல்ற்று வருந்தும் மாலை,ஊரார் துயிலும் நள்ளிரவு, விடியற்காலம் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோன்றுமாயின்,அத்தைகையோரிடம் தோன்றும் காமம் உண்மையன்று; பொய்யேயாகும். பொழுதின் வேறுபாடு தெரியாது துய்ப்பது தான் காமம் என் மிகுத்துச் சொல்லியது.

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்,
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே (குறுந்தொகை,58)

கதிரவனின் வெயில் எறிக்கும் வெம்மையுடைய பாறையில் , கையில்லாத ஊமையன் தன் கண்களாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப் போல, என்பால் தோன்றிய காமநோய் பரவியது. அது பொறுத்துக் கொள்ள அரிதாயிருக்கிறது என இடித்துரைக்கும் பாங்கனுக்குத் தலைவன் கூறினான்.

அரும்பனி அச்சிரம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லைஅவர் மணந்த மார்பே(குறுந்தொகை,68)

பொறுதற்கரிய பனியுடைய முன்பனிகாலத்தால் உண்டாகும் துன்பந் தீர்க்கும் மருந்து, என்னை முயங்கிய தலைவருடைய்ய மார்பன்றி வேறொன்றில்லை.

நோதக் கன்றே காமம்; யாவதும்
நன்றுஎன உணரார் மாட்டும்,
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே(குறுந்தொகை,78)

காமம் சிறிதும் நன்மை தராது என உணராத அறிவில்லாதவரிடத்தும் சென்று தங்கும் பெரும் அறியாமையை உடையது, அது வெறுக்கத் தக்கது.

------------------பெருந்தோட் குறுமகள்
நீர்ஓர் அன்ன நாயல்
தீஓர் அன்னென் உரன் அவித் தன்றே (குறுந்தொகை,95)

தலைவியினது நீரைப் போன்ற மென்மை, தீயையொத்த எனது வலிமையைக் கெடுத்தது எனத் தலைவன் பாங்கனுக்கு உரைத்தான்.

உள்ளினும் உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே;
வான்தோய் வற்றே காமம்;Boldசான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே( குறுந்தொகை,102)

தலைவரை நினைத்தால் என் நெஞ்சம் வேகின்றது. நினையாது இருந்தால் இது என் ஆற்றல் அளவிற்கு உட்பட்டதன்று. காம நோய் எம்மை வருத்தி வானத்தை அளாவியது போன்ற பெருக்கம் உடையது. யாம் கூடி முயங்கிய தலைவர் பண்பு நிறைந்தவர் அல்லர்.

-----------------------சேவல்
நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்,
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி
கடுநவைப் படீஇயரோ! நீயே,நெடுநீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏமின்துயில் எடுப்பி யோயே(குறுந்தொகை,107)

சேவற்கோழியே! நீர்வளத்தால் உண்டாகும் புதுவருவாயையுடைய ஊர்க்குரிய தலைவனுடன் தங்கிய இன்பம் தரும் துயிலின்றும் விடியற் காலத்தும் எம்மை எழுப்பினாய்! செறிந்த இருளையுடைய நள்ளிரவில், வீட்டிலுள்ள எலிகளை உண்ணப் பார்க்கும் காட்டுப்பூனைக் குட்டிச் சிலநாளைக்கு வைத்துண்ணும் உணவாகிய நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக! எனத் தோழி இன்பத் தடையாயிருந்த சேவலை நோக்கி சினந்து கூறினாள்.

கௌவை அஞ்சின்; காமம் எய்க்கும்;(குறுந்தொகை,112)

பிறர்கூறும் அலர் மொழிக்கு அஞ்சினால், காமம் நலிந்து மெலியும்.தலைவி கௌவையும் காமமும் ஒன்றுகொன்று முரணாக இருத்தலின் துனபமுற்றாள்.

கருத்துகள்

ஆரூரன் விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்ந்தமைக்கு நன்றிங்க. வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…