தொகைச்சொற்கள்

எட்டு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......


அட்டபுட்பம் ----- புன்னை,வெள்ளெருக்கு,நந்தியாவர்த்தம்,அண்பகம்,நீலோற்பம்,பாதிரி, அலரி,செந்தாமரை

அட்டவீரட்டம் ----- கண்டியூர்,கடவூர்,அதிகை,வழுவூர்,பறியலூர்,கோவலூர்,குறுக்கை, விற்குடி

அருகனெண்குணம் ----- கடையிலாவறிவு,கடையிலாக்காட்சி,கடையிலாவீரியம், நாமமின்மை, கோத்திரமின்மை,ஆயுளின்மை,அழியாவியல்பு

அளவை ----- காட்சி,அனுமானம்,ஆகமம்,அருத்தாபத்தி,உபமானம்,அபாவம்,சம்பவம், ஐதிகம்

அக்ஷ்தகல்யாணி ----- யான்கு கால்கள்,முகம்,தலை,வால்,மார்பு

அக்ஷ்டபந்தனம் ---- சுக்கான்கல்,கொம்பரக்கு,சாதிலிங்கம்,செம்பஞ்சு,தேன்மெழுகு,எருமைவெண்ணெய்,குங்கிலியம் ,நற்காவி

அக்ஷ்டமாந்தம் ----- செரியாமாந்தம்,போர்மாந்தம்,மலடிமாந்தம்,பெருமாந்தம், வாதமாந்தம்,சுழிமாந்தம், கணமாந்தம்

ஈசுரன் குணங்கள் ----- தன்வயனாதல்,தூயவுதம்பின்னாதல்,இயற்கையுணர்வின்னாதல், முற்றுமுணர்தல்,இயல்பாகப் பாசங்கினின்று நீங்குதல்,பேரருளுடமை,வரம்பிலின்பமுடைமை,முடிவிலாற்றுலுடைமை

எட்டுத்தொகை ----- நற்றறிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை,அகநாநூறு, புறநானூறு

எண்சுவைத்தமிழ் ----- சிங்காரம்,வீரியம்,பெருநகை,கருணை,ரௌத்திரம்,குற்கை,அற்புதம்,பயம்

எண்பதம் ---- நெல்,புல்,வரகு,தினை,சாமை,இறுங்கு,துவரை,இராகி

எண்ணுவகைவிடை ----- சுட்டுவிடை,மறைவிடை,நேர்விடை,ஏவல்விடை,வினாவிடை,உற்றரைத்தல விடை, உறுவதுகூறல்விடை,இனமொழிவிடை

ஐசுவரியம் ----- தனம்,தானியம்,நிதி,பசு,புத்திரர்,வாகனம்,சத்தம்,தைரியம்

குய்யதராட்டகபுவனம் ----- கயை,குருக்கேந்திரம்,நாகலம்,நகலம்,விமலம்,அட்டகாசம்,
மகேந்திரம்,பூமேசம்

குறிஞ்சியாழ்த்திறம் ----- நைவளம்,காந்தாரம்,படுமலை,பஞ்சுரம்,மருள்,அஞிர்ப்பு,அரற்று, செந்நிறம்

சித்தி ---- அணிமா,மகிமா,லகிமா,கரிமா,பிரார்த்தி,பிரகாமியம்,ஈசத்துவம்,வசித்துவம்

மெய்ப்பாடு ---- நகை,அழுகை.இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகை

போகம் ----- பெண்,ஆடை,அணிகலன்,உண்டி,தாம்பூலம்,பரிமளம்,பாட்டு,பூவமளி

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மேலும் ஒரு நல்ல பகிர்வு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி.........
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் முனைவர் அவர்களே,

எட்டு தொகைச்சொற்களைப்
புட்டுப் புட்டுக் காட்டி
தொட்டு தொட்டு மனதை
கட்டுப் போட்டு வைக்கின்றீர்.. - நல்ல
மெட்டுச்சுவை தருகின்றீர்..!

சிறுகுறிப்பு:
மெய்ப்பாடு எட்டு வகை. அதைப் பற்றிய நான் எழுதிய இடுகை:-

http://thirutamil.blogspot.com/2008/02/blog-post_26.html

காண்க!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுப.ந . அவர்களே.....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்