சிலப்பதிகாரம்


நமது தொன்மையான இலக்கியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.ஐம்பெருங்காப்பியங்களுள் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப்பெறுவன சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும்.மணிமேகலை ஒரு சமயகாப்பியமாத் திகழ,சிலப்பதிகாரம் வாழ்வியலையும்,நமது பண்பாட்டையும் உணர்த்தும் காப்பியமாகத் திகழ்கின்றது.சேர,சோழ,பாண்டி மன்னர்களைப் பற்றியும் ,அங்குள்ள மக்களின் வாழ்க்கைநிலையினைப் பற்றியும் எடுத்தி இயம்பும் காப்பியமாக படைத்துக்காட்டியுள்ளார் இளங்கோவடிகள்.
அதுபோலவே தமது காலத்தில் நிலவிய சமய வேறுபாடுகளைக் களைந்து ,சமயங்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றுள்ளார்.மக்களுக்கிடையே இருந்த இனவேறுபாட்டையும் சமன்செய்ய முயன்றுள்ளார்.மன்னர்களைப் பற்றியே பாடிக்கொண்டும் காப்பியம் இயற்றியும் இன்புற்றுகொண்டு இருந்தவர்கள் மத்தியில் ,குடிமக்களையும் பாடி காப்பியம் படைக்கலாம் எனப் படைத்துக் காட்டி புதுதடத்தைப் பதித்தவர் இளங்கோவடிகள்.


சிலம்பு கதைக்கு மூலக்காரணமாக அமைந்ததால் இக்காப்பியத்திற்குக் சிலப்பதிகாரம் எனப் பெயர் வரக் காரணமாயிற்று.யாருடைய சிலம்பு காரணமாக இருந்தது,அதாவது கோப்பெருந்தேவியின் சிலம்பா,கண்ணகியின் சிலம்பா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்துவேறுபாடு உண்டு.


தமிழறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தமது எந்த சிலம்பு என்னும் நூலில் கோப்பெருந்தேவியின் சிலம்பே கதைக்கு முக்கிய திருப்பமாக அமைந்ததால் சிலப்பதிகாரம் என்று பெயர் வந்து என்று கூறுவர்.ஆனால் சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள்
கண்ணகி சிலம்புதான் கதையின் திருப்பத்திற்குக் காரணம்,அதனால் சிலப்பதிகாரம் எனக் கண்ணகியின் வரலாற்றுக்குப் பெயர் வரக் காரணம் அவளுடைய காற்சிலம்பே என்று கூறுவார்.

இப்படி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்,இக்கதையின் திருப்புமுனையாக சிலம்புகளே காரணமாக அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது எனலாம்.
------------தொடரும்

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
nice thanks for sharing
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குப்பன்.......
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//சிலம்பு கதைக்கு மூலக்காரணமாக அமைந்ததால் இக்காப்பயத்திற்குக் சிலப்பதிகாதம் எனப் பெயர் வரக் காரணமாயிற்று.யாருடைய சிலம்பு காரணமாக இருந்தது,அதாவது கோப்பெருந்தேவியின் சிலம்பா,கண்ணகியின் சிலம்பா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்துவேறுபாடு உண்டு.
//

அப்படியா? நான் கண்ணகியின் சிலம்பின் காரணம் என்றே நினைக்கின்றேன்...

பகிவுக்கு மிக்க நன்றிங்க
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேகரன்........
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
நான் இது வரை கண்ணகியின் சிலம்பே சிலப்பதிகாரம் என்ற பெயருக்குக் காரணம் என்று நினைத்திருந்தேன். அறிஞர் பெருமக்கள் மாற்று கருத்தும் கொண்டிருந்தனர் என்பது புதிய செய்தி எனக்கு. நன்றி முனைவரே.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Dear Friend,
I am Dr.A.Boologa Rambai, Professor, Department of Tamil, Dravidian University, kuppam. The reason for naming the epic Silappathikaram is due to the anklet of koperundevi only. If she is not loseing her anklet there is no chance of that PoRkollan's fraud. Because of the queen's lose of anklet he got the chance to tell kovalan as a thief. So the lose of the queen's anklet is the reason for naming the epic as Silappathikaram.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்