முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருக்குறள் வகுப்புதஞ்சாவூர் உலகத் திருக்குறள் சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ,தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. பல்வேறு தமிழறிஞர்கள் இவ் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.
பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிமணியம் அவர்கள் மக்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடம் நடத்துகின்றார்கள்.இவர் பல்வேறு திருக்குறள் உரைகளை ஒப்பிட்டு , சிறந்த உரை,அக்குறளுக்குப் பொருத்தமாக அமைந்த உரைகளைக் கூறி, குறளுக்குப் பொருத்தமான நடைமுறை வாழ்வியல் செய்திகளையும் கூறுகின்றார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வகுப்பு கடந்த ஞாயிறு 12.4.2009 அன்று 100 அதிகாரத்தைத் தொட்டது.அதனால் இதனை ஒரு சிறு விழாவாக அமைத்திருந்தார்கள்.அவ்விழாவில் பண்புடைமை அதிகாரத்திலிருந்து ஐந்து குறட்பாக்களைப் பேராசிரியர் கு.வெ.பா.நடத்தினார்கள்.ந.மு.வேங்கடசாமி தாளாளர் பேராசிரியர் பி.விருதாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.கருத்துகள்

ஜகதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க உம் தமிழ்த் தொண்டு.தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு..

நன்னாள் வாழ்த்துக்கள் அம்மா.

கடைசி புகைப்படத்தில் இருப்பது நீங்களா?
malarvizhi இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம், உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.திருக்குறள் வகுப்பு முடிந்து தற்போது அங்கே புறநானூறு வகுப்பு நடைபெறுகிறது.அதில் என் தந்தை 'குறள் நெறி செல்வர்' திரு அர .தங்கராசன் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

அம்பல் அலர்

அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.

அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியா…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…