ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

 

பெரும்பாலும் அறியப்படாத இனமாக இருப்பவர்கள் பார்சிகள். சொராஸ்டிரம் என்னும் மதத்திலிருந்துதான் பின்னர் பார்சி மதமாக இனமாக உருவாகியது என்பர்.  19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பார்சிகளின் எண்ணிக்கை 85,397 பம்பாயில் மட்டும் 48,507   (https://www.dinamani.com/arasiyal-payilvom/) தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்றபட்ட குடும்பங்கள் வசிக்கின்றார்கள். பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு குடியேவறியவர்கள். சுதந்திர போராடத்தில் ஈடுபட்ட தாதாபாய் நௌரௌஜி, இந்திய அணு சக்தியில் புகழ்பெற்ற ஹோமி ஜஹாங்கீர், ரத்தன் டாடா, கோத்ரெஜ் வாடிய போன்றோர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர்கள் தங்களுக்கென்று சில வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி விருதினை ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் நூல் பெற்றுள்ளது. இதனை மொழி பெயர்த்தவர் பத்திரிக்கையாளர் மாலன். இதன் மூலநூலான Chronicle of a Corpse Bearer க்கு 2015 ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எழுதியவர் சைரஸ் மிஸ்திரி.

இந்த நூலைப் படிக்கத் தொடங்கும் முன்வரை பார்சிகளைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. ஓநாய்க் குலச்சின்னம் படித்த பொழுது மங்கோலிய சமவெளிப் பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் உடல்களைப் புதைக்கவோ எரிக்கவோ செய்யாமல் வான் புதையல் எனப் புல்வெளிகளின் மேட்டுப் பகுதியில் வைத்துவிடுவார்கள். பிணம் ஓநாய்களுக்கு உணவாகும் என்பதை அறிந்தேன். பார்சிகளும் பிணங்களைப் புதைக்கவோ எரிக்கவோ இல்லாமல் அமைதி கோபுரம் என்ற பகுதிக்கு 


எடுத்துச்சென்று பிணங்களைப் போட்டுவிடுகிறார்கள். பிணந்தின்னி கழுகுகள் அவற்றை உண்கின்றன. இது அவர்களின் வழமையாக இருக்கிறது. தீ,நீ, நிலம் அகியவற்றை அவர்கள் தெய்வமாக கருதுவதான் காரணம். பிணங்களை அமைதி கோபுரங்களின்  மீது ஏற்றிச்  செல்ல அந்த சமூகத்தில் இருந்தவர்க்கள் தான் பிணந்தூக்கிகள். அவர்கள் பற்றிய கதையைக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. பிணந்தூக்கிகள் ஒழுங்காக அவர்களின் வேலையைச் செய்யாவிட்டால் அடுத்தப் பிறவியில் கொடூரமான பிறவியாகப் பிறப்பார்கள் என அதிகாரத்தில் இருந்தோரும் மதத் தலைவருகளும் அவர்களை அச்சுறுத்தி மிகக் குறைந்த கூலியினைக் கொடுத்து அதிக நேரம் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் அடிப்படை உணர்வுகளைக் கூட மதிக்காமல் மிதிக்கிறார்கள். பிணந்தூக்களைத் தொட்டால் தீட்டு, பார்த்தாலே தீட்டு. ஆனால் இறந்த பிறகு இவர்கள் தொட்டுத் தூக்கி சுத்தம் செய்து குளிக்க வைத்து அனைத்தும் செய்ய வேண்டும். இவர்கள் பிணத்தை எடுக்காமல் விட்டால் என்னவாகும். அமைதி கோபுரத்தில் வைப்பதில் உறுதியாக இருக்கிறார்களே கொரோனா காலத்தில் என்ன செய்தார்கள் என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். நீதி மன்றத்தில் கொரோனா தொற்று ஏற்றபட்டவர்கள் இறந்தால் அவர்களை எடுத்துச் சொல்வோருக்குப் பாதுகாப்பு கவசங்களும், பிணத்தை கழுகுகள் கொத்தாமல் கம்பி வலைகளும் சூரிய குவிப்பின் மூலமாக எரித்து அழித்து விடுவதாக அனுமதி வாங்கியுள்ளார்கள். இவர்களிடம் இருந்த மற்றுமொரு நம்பிக்கை இறந்த பிறகு பிணத்தைச் சுற்றி நாயை விடுவார்களாம். நாய் மூன்று முறை சுற்றி வரவேண்டும். காரணம் உயிர் இருந்தால் நாய்க்குத் தெரிந்துவிடுமாம்.

பார்சிகள் வணங்கக் கூடிய கோவில் அக்னிக் கோவில். அக்கினி கோவிலின் மத குருமாராக இருக்க கூடியவரின் மகன் ஃபெரோஸ் எல்சிதனா. இரண்டாவது மகன்.  நீண்ட காலம் கழித்து இவன் பிறக்கின்றான். வீட்டில் செல்லம் அதிகம். தன்னைப் பின்பற்றி மந்திரங்களை ஓதக் கூடியவனாக வருவான் எனத் தந்தை எண்ணுகிறார். நடப்பது தலைகீழாக இருக்கிறது. படிப்பு சரியாக வரவில்லை. ஒருமுறை அண்ணன் பட்டம் தரவில்லை என வீட்டில் இருந்த  கிளியைக் கயிறு கட்டி பறக்கவிடாலாம் என நினைத்துக் கொன்று விடுகிறான்.  அதிலிருந்து வீட்டில் உள்ளவர்கள் தன்னை அறிவில்லாதவனாக நினைக்கிறார்கள் என நினைக்கின்றான். பத்தாம் வகுப்பு தேர்வில் வெறிபெறவில்லை. அவன் நண்பன் ரோகிடன் கனுகாவுடன் பொழுது போக்குகின்றான். நண்பன் செல்வக்குடியில் பிறந்தவன். மேற்படிக்கு இங்கிலாந்து செல்கிறான். தனித்து விடப்பட் ஃபெரஸ் ஒழுக்கவிதிகளையே பார்த்து வளர்ந்த அவன் வேறு உலகத்தைப் பார்க்கத் தொடங்குகிறான். படிப்பதாகச் சொல்லிவிட்டு பல இடங்களில் சுற்றித் திரிகிறான். எல்லா பழக்கங்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டான். எதெல்லாம் தீட்டு என்று சொல்லப்பட்டதோ அத்தனையும் மீறுகிறான். இறப்பு சடங்கிற்கு  அம்மா ஷில்லாவுடன் சென்ற போது டெமூரு மகள் செப்பியைப் பார்க்கிறான். காதலில் விழுகிறான். வீட்டின் எதிர்ப்பை மீறியும்  டெமூரு பிணந்தூக்கியாக மாற வேண்டும் என்ற நிபந்தையையும் ஏற்று தன்னை விட வயது அதிகமான செப்பியைத் திருமணம் செய்கிறான். சிறிது காலம் அவன் மனைவி வாழ்ந்து பெண் குழந்தை ஒன்றை ஈன்ற சில ஆண்டுகளில் இறந்துவிடுகிறாள். ஒரு பிணந்தூக்கியாக அவன் சந்திக்கும் அவமானங்கள், பிணந்தூக்கும் வேலையைத் தவிர வேறு வேலைக்குச் செல்லமுடியாத சூழலை சமூகம் பயன்படுத்திக் கொண்டு அவனின் உணர்வுகளை மிதிப்பது. சொந்த வீட்டிலேயே அவன் அந்நியமாக்கப்பட்டது. தன் மகளை வளர்ப்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டியுள்ளது. தொழிற்சங்கள் உள்ளே கொண்டு வருவது அதனை அதிகாரம் முளையிலேயே கிள்ள முனைவது என அவர்களின் துயரங்களைப் பேசுகிறது. இந்நாவலில் வரக்கூடிய பெண்கள் முற்போக்குச் சிந்தையுடைவர்களாக அமைத்துள்ளார். சாவு குறித்த விவாதங்கள் நிறைய வருகின்றன. தமிழ் எழுத்தாளர் சம்பத் இடைவெளி புனைகதையில் இறப்பு குறித்த தேடலாகவும் தத்துவார்த்த விசாரணையாகவும் இருப்பது போல  இருக்கின்றது.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்