தலைவர் கடமை

அன்பும் இருளும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி (புறம்,5) - நரிவெரூஉத் தலையார்\

வழிபடு வோரை வல்அறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி,
வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே (புறம்,10) 
                                                                   ஊன்பொதி பசுங்குடையார்

நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் தோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே ( புறம்,18) குடபுலவியனார்

கொடியோர்த் தெறுதலும் செவ்விழோர்க்கு அளத்தலும்
ஒடியாமுறையின் மடிவுஇலை ஆகி (புறம், 29)
                                                                       உறையூர் முதுகண்ணன் சாத்தன்

நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை ஆயின்நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே ( புறம், 35) வெள்ளைக்குடி நாகனார்

இன்சொல் என்பதத்தை  ஆகுமதி ( புறம் ,40) ஆவூர் மூலங்கிழார்

ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடைமை ஆகி இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை ( புறம், 55) மதுரை மருதனிள நாகனார்

ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணால்
நாடுதலை அளிக்கும் ஒள்முகம் போல,
கோடுகீடு மதியம் முகிழ்நிலா விளங்கும் ( புறம்,67) பிசிராந்தையார்

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
...................................................................................
பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே ( புறம், 157) குறமகள் இளவெயினி

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் காலபெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்வென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ( புறம், 184) பிசிராந்தையார்

கால்பார் கோத்து ஞாலத்து இயங்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்
பகைகூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத தருமே ( புறம், 185) 
                                                                    தெண்டைமான் இளந்திரையன்

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தை மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே ( புறம்,186) மோசிகீரனார்

பெரிது ஆராச் சிறுசினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண்உணர்வினால் பெருங்கொடையர்
கலுழ் நனையான் தண்தேறலர்
களிகுய்யான் கொழுந்துவையர்
தாழ் உவந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இந்நிலம்  ஆண்டோர் ( புறம், 360)
                                                             சங்க வருணர் என்னும் நாகரியர்

பல்வேறு வகைய நனந்தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்
ஆறு முட்டுறாஅது அறம்புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்
பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே (பதிற்றுப்பத்து, 59)
                                                        காக்கை பாடினியார் நச்செள்ளையார்

முறைவேண் டுநர்க்கும், குறைவேண் டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடைத்தெரிந்து உணரும் இருள்தீர் காட்சி ( பெரும்பாண், 443-445)
                                                            கடியலூர் உருத்திரங்கண்ணனார்

காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி,
பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி,
கோயிலொடு குடிநிறீஇ (பட்டினப்பாலை, 284- 287)
                                                    கடியலூர் உருத்திரங்கண்ணனார்

தன்னுயிர் போலத் தழீஇ உலகத்து
மன்னுயிர் காக்குமிம் மன்னனும் என்கொலோ
இன்னுயிர் அன்னானைக் காட்டி எனைத்தொன்றும்
என்னுயிர் காவா தது; ( கலித்தொகை,143) நல்லந்துவனார்



கருத்துகள்

கல்விக்கோயில் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்....
தலைவர் என்பவரின் கடமைக்கு இவ்வளவு விளக்கங்களா.......
maarimyndhan இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களின் "வேலராம்மூர்த்தி சிறுகதைகள் பற்றிய விமர்சனம் படித்தேன்."மிகச்சிறந்த கதைகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்