தஞ்சை மணம்

அண்மையில் சி.எம். முத்துவின் கறிச்சோறு, அப்பா என்றொரு மனிதர், ஐந்து பெண்களும் அக்ரஹாரத்து வீடும் என்னும் மூன்று நாவல்கள் கிடைத்தன. மற்றவை கிடைக்கவில்லை. தஞ்சை பகுதியைச் சார்ந்த படைப்பாளர். மூன்று நாவல்களுமே தஞ்சைப் பகுதியில் வாழும் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய கதை.
கறிச்சோறு கள்ளர் சமூகத்தின் அசலான வாழ்க்கை அதனுள் செயல்படக்கூடிய உள்முரண்களை, நுண் அரசியலை சொல்லுகின்றது. தஞ்சை பகுதியைக் கதைகளனாகக் கொண்ட வட்டார நாவல்களில் குறிப்பிட்டத்தக்கது.

விவசாயி அவனைச் சுற்றி நிகழ்க்கூடியச் சிக்கல்கள், விவசாயத்தினால் ஏற்படும் இழப்பு, அதனை சரி செய்ய வாங்கும் கடன், அதனைஅடைக்க முடியாமல் படும் பாடு என விரிந்து செல்கிறது அப்பா என்றொரு மனிதர்.

தஞ்சை கிராமப்பகுதிகளில் இருந்த  ஆக்ரஹாரங்கள் தங்களது அடையாளங்களை மெல்ல மெல்ல இழங்கத் தொடங்கிய காலக்கட்டம், அக்ரஹாரத்திற்கும் அக்கிராமத்தில் வசிக்கும் பிற சாதியினருக்கும் இடையேயான உறவுகளைப் பேசுகிறது ஐந்து பெண்களும் அக்ரஹாரத்து வீடும் என்னும் நாவல்.


















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்