அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை - தலைவர் புதிதாகப் பதவியேற்பு









அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழியல்துறை மரபில்  ஒருபெண், துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பது, இதுவே முதல்முறையாகும்.   31.01.2013  அன்று முதல் 24 -வது துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அவர்கள் 1979 இல் பேராசிரியர் க. வெள்ளைவாரணம் அவர்கள் துறைத் தலைவராக இருந்தபொழுது விரிவுரையாளராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில்  பணியேற்றார்கள். தொய்வின்றி 34 நான்கு வருடங்கள் தமிழுக்குத் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
 இவர்களுடைய முனைவர் பட்ட ஆய்வு தமிழ் இலக்கியங்களில் முருகக் கடவுள் என்பதாகும். இவ்வாய்வின் சிறப்பைப் பாராட்டி தமிழ்வாகை பரிசில் என்னும் விருதை சேலம் தமிழ்ச்சங்கம் வழங்கிச்சிறப்பித்தது.

2002- இல் மலேசியாவில் நடந்த பன்னாட்டு முருகன் கடவுள் தொடபான மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.
காசியில் நடைபெற்ற பத்தி இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்கள்.

இவர்களின் சிறந்த நெறிகாட்டுதலின் கீழ்  10 மாணவர்கள் முனைவர்ப் பட்டமும்,  35  மாணவர்கள் இளம் முனைவர் பட் டமும் பெற்றுள்ளார்கள்.  இந்திய மொழிப்புல இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வுலகுக்கு வழங்கியுள்ளார்கள். சமயச் சிந்தனை , தமிழ் இலக்கியங்களில் முருகக் கடவுள் என்னும் தலைப்புகளில் இரு புத்தகங்ளை வெளியிட்டுள்ளார்கள். பல்வேறு தேசிய கருத்தரங்குகளுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயலாற்றியுள்ளார்கள். செம்மொழி உயராய்வு மத்திய நிறுவன உதவியுடன் கருத்தரங்கத்தினைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறந்த புலமையாளர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்து , தமிழ்த்துறை ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படும்படியான சிறந்த முறையில் நடத்தியுள்ளார்கள்.

இசையறிவு உடையவர்கள். வகுப்பறையில் மாணவர்களுக்குப் பத்தி இலக்கியப் பாடல்ளை இசையோடு நடத்தும்  திறமையுடையவர்கள்.

இளங்கலை, முதுகலை இரண்டையும் சென்னை ராணி மேரி கல்லூரியில் பயின்றுள்ளார்கள். அக்காலத்தில் இவர்கள் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் துணைவியாரிடத்து மாணவியாக இருந்து கல்வி கற்றவர்கள். பல தமிழ்ச் சான்றோர்களுடன் அறிவார்ந்த விவாதங்களில் பங்கேற்பவர்கள்.

தாய் தந்தையர் ந. பக்கிரிசாமி - ருக்கமணி . பிறந்த ஊர் - தஞ்சை மாவட்டம் திருமருகல் . அப்பா சுங்கவரி இலாக்காவில் உயர்பதவி - கணவர் திரு ந. கணபதி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இரு மகன்கள் . உயர் பதவி வகிக்கின்றனர்.





இயல்பாகவே அதிந்து கூட பேசாத மென்மையான மனது படைத்தவர்கள். எங்கள் துறையில் உள்ள அனைவரையும் பால் நின்ந்தூட்டும் தாயாய் அரவணைத்துச் செல்லும் அன்பு நெஞ்சினர். தமிழ்த்துறையில் அறிவு சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் , மாணவர்களின் எதிர் கால தேவையை அறிந்து அவர்களை நல்லொழுக்கமுடைய மாணவர்களாக உருவாக்க வேண்டும் என்ற  உறுதியானஎண்ணம் உடையவர்கள்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அவரின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அவரின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...
முனைவர் இரத்தின.புகழேந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதல் பெண்தலைவர் அம்மா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.இந்த செய்தி வியப்பாக இருக்கிறது சகோதரி.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் அம்மா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்