சோள கூழும் - கடலை தொவையலும்

துரித உணவுமுறை சூழலும் அதனால் உண்டாகும் நோய்மைகளும் இன்று பழைய உணவு முறைகளை நினைக்கத் தூண்டுகிறது. ஒரத்தநாடு பக்கத்தில் ஒக்கநாடு கீழையூர் எங்கள் ஊர், எங்கள் ஊரில் அப்பொழுதுநெல், சோளம், கேழ்வரகு,கடலை, பயறு வகைகள் போன்றவை அதிகம் பயிறிடுவார்கள்.நாங்கள் சிறுவயதாக இருக்கும் பொழுது பெருபாண்மை நெல் சோறு தான் என்றாலும்,  எங்க அப்பாயி(அப்பாவுடைய அம்மா) மாதத்துக்கு ஒரு முறை சோளகூழு செய்து தரும். அதற்கு தொட்டுகொள்ள நிலகடலையை வறுத்து துவையல் அரைத்துக் கொடுக்கும். அது இன்று சாப்பிடவேண்டும்  போல் தோன்றுகிறது.  என்னதான் சோளத்தில் பல வகையான உணவுகள் இன்று கிடைத்தாலும் அந்த சுவை இன்று கொண்டுவரமுடியவில்லை.

சோளத்தை முதல் நாளே உறவைத்து மாலையில் உரலில் இட்டு இடித்து மாவாகவும் பாதி குருணையாவும் எடுத்துக்கொண்டு, அடுப்பில் பானையில் வெந்நீரை வைத்து அதில் குருணையாக வைத்திருக்கும் சோள அரிசியைப் போட்டுவிட்டு சிறிது நேரமு கழித்து, இடித்த மாவை கரைத்து அதில் ஊற்றி,உப்பிட்டு நான்றாக வெந்தவுடன் இறக்கி வைத்து பெரிய குணாடானைத் தலைக்குப்புற போட்டு கவித்து வைத்துவிடுவார். அடுத்த நாள் காலையில் அதன்மேல் ஏடுபோல் படிந்திருக்கும் அதனை மேலாக எடுத்துவிட்டு , சோளகூழை எடுக்கும் போது கட்டி கட்டியாக கேக் போல இருக்கும் அதனுடன் கடலைத் துவையலைச் சேர்த்து சாப்பிட்டால் அப்பபபா அதன் சுவைசொல்லிமாளாது. சிலர் இதனுடன் கேழ்வரகு மாவையும் சேர்த்து காய்ச்சி வைப்பார்கள், மோர்விட்டு கரைத்தும் சாப்பிடுவார்கள். ஆனால் எனக்கு எங்க அப்பாவுக்கும் தொவையலோடு சேர்த்து பிசைந்து சாப்பிடத்தானா பிடிக்கும். இன்று சோள தோசை, சோள ரொட்டி என பலவகை உணவுகள் வந்தாலும் அன்று சாப்பிட்ட இந்த சோள கூழை நினைத்து மனம் ஏங்கி கிடக்கிறது.(வீட்டில் எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் ரொம்ப புடிக்கும், அதனால் அப்பாயி செய்து தரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்