செடல் - பொண்ணுக்கு பொறணின்னா பொறக்காத புள்ள கூட வாய் திறக்கும்.

நாட்டார் வழக்காற்று தொன்மங்களும் அது சார்ந்து உருவாக்கப்படும் நம்பிக்கைளும், சமூக மதிப்புகளும், அவற்றை மேல் வர்கத்தினர், கீழ் வர்கத்தின் மீது  திணிப்பதும்,திணிப்பினை உள்வாங்கி கொண்டு அதற்கு ஏற்றார் போல வாழ பழகிகொள்ளும் நிலை என விரிகிறது இமயத்தின் செடல்.


இமயத்தின் கோவேறு கழுதைகள், ஆறுமுகம் வழி பயணித்து செடலுக்குள் வரும்பொழுது, கோவேறு கழுதை ஆரோக்கியத்தினும் செடல்  சில அதிர்வுகளை ஏற்படுத்துகிறாள்.அறியா வயதில் பொட்டுக்கட்டி விடப்பட்ட அவளின் சிறுவயது வாழ்க்கை பிறரின் ஏளனத்திற்கும்,  கிண்டலுக்கும் உள்ளாகினாலும், தன் மனவலியைத் தான் சாமிபுள்ள, ஊரைக் காக்க தோன்றியவள் என் சமூகம் கட்டமைத்திருக்கும் கருத்தியலுக்குள் தன்னைத் தேடி கண்டடைய முயன்று கொண்டிருக்கிறாள்.


கருத்துகள்

ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
இமையத்தின் எழுத்துக்கள் தனித்துவமானவை. எனக்கு மிகவும் பிடித்தவை. இன்னும் அவரின் எழுத்துக்களை அறிமுகப்படுத்துங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்