ஊர்ப்பெயர்கள் (சங்க கால)


அகம்பல்   
புலவரின் பெயர் அகம்பல் மாலாதனார்.  இவற் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் இல்லை நற்றிணை 81ம் பாடல் இயற்றியுள்ளார். 

அகம்பல் என்னும் பெயருடைய ஊர் இன்று இல்லை.  எனவே, ஊரின் பெயர் மாறியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.  மதுரை மாவட்டத்தில், பெரிய குளம்.  தாலுகாவில் உள்ள அகமலை எனும் ஊரே பண்டைய அகம்பல் ஆகலாம் என்று பின்னத்தூரார் கருதுகிறார்.  நூன் பகிரவில்லை (உரையாசிரியர்).

அகம்பல் எனும் ஊர் மருவி அம்பல் என்றாகியிருக்கலாம்.  அப்படியாயின் அம்பல் என்னும் ஊர் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது.  அதனால், அதுவே மாலாதனார் ஊர் எனத் துணியலாம்.  இது சோழ நாட்டு ஊராகும்.
-

அஞ்சில் நற்-90, 233, குறு-294  
இவ்வூரில் இரு புலவர் தோன்றியுள்ளனர் ஒருவர் அஞ்சில் அஞ்சியார், நற்-90, மற்றொருவர் அஞ்சில் ஆந்தையார் குறு 294, நற் 233 இவர்கள் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் இல.

அஞ்சில் என்பது மருவி அஞ்சி ஆகலாம் அவ்வாராயின் புதுக்கோட்டையை அடுத்த பழவஞ்சி என்னும் ஊர் காணப்படுகிறது.  அதனை அடுத்து சிற்றண்ணல் வாயில் முதலாய தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊர் அழிவுகளும், புகைகுழிகளும், தமிழ்க் கல்வெட்டுக்களும் ஒப்ப வைத்து எண்ணத்தக்கன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்