காதல் இயல்பு.........

நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்குஇரு முந்நீர் காலின் சொல்லார்;
நாட்டின் நாட்டின்,ஊரின், ஊரின்,
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோநம் காத லோரே (குறந்தொகை,130)

தலைவி தலைவனைக் காணாமல் புலம்பித் தவிக்கின்றாள், அப்பொழுது தோழி அவளிடம் நம் தலைவர் சித்திப்பெற்றவர் போல நிலத்தைத் தோண்டி உள்ளே போகார்; விண்ணகத்தே ஏறிச்செல்லார்; பெரிய கடல்மேல் காலால் நடந்து போகமாட்டார்.நாடுகள் தோறும் ஆராயந்தால், அகப்படாமல் தப்பிச்செல்வாரும் உளரோ? எங்கிருந்தாலும் தலைவனைத் தேடிப்பிடித்துத் தருகின்றேன் கலங்காதே என தேறுதல் மொழிகூறி ஆற்றுகின்றாள்.


வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்,
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர்;
ஐய அற்றால் அன்பின் பாலே!(குறுந்தொகை ,196)


தலைவியிடம் பழக தொடங்கிய காலத்தில் என் தோழியாகிய தலைவி வேங்பங்காய்யைத் தந்தாலும், இனிய வெல்லகட்டி என்று பாராட்டி சுவைத்து மகிழ்ந்தீர். ஆனால் இப்பொழுது பாரிவள்ளலின் பறம்பு மலையிடத்துள்ள தைமாத்தில் குளிர்ந்த சுனை நீரைத் தந்தாலும், வெப்பமுடையது உப்புச் சுவையுடையது என்று இகழ்ந்து கூறுகின்றீர். எனத் தோழி தலைவனிடம் உன் அன்பில் இப்படி மாறுதல் ஏற்பட்டுவிட்டதே என்று தலைவனிடம் சுட்டிக் காண்பிகின்றாள்.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இலக்கியச்சுவை இனிக்கிறது...
தொடர்க..
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வலை வடிவமைப்பு அருமைாகவுள்ளது..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்