எனக்குத் தெரியாது

ஒருமுறை தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழாசிரியர் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.பள்ளி நிர்வாகியினர் அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.அவர்மு சென்றார்.அப்பொழுது அங்கு அவரிடம் ஒரு வினா எழுப்பப்பட்டது.

'குற்றியலுகரத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுவும்'என்பதே அவ்வினா.

மறைமலை அடிகள் 'எனக்குத் தெரியாது 'என்று அமைதியாக கூறினார்.
வினா கேட்டவர் மீண்டும் அவருடம் 'எங்களது வினாவிற்கு என்ன விடை ' என்று வினவினர்.

மறுமுறையும் அடிகளார் அவர்கள் 'எனக்கு தெரியாது 'என இரண்டு சொற்களுக்கும் இடைவெளிவிட்டு அழுத்திக் கூறினார்.

வினாகேட்டவர்களின் மத்தியில் இருந்த மற்றொரு தமிழ் புலவர் அடிகளார் கூறும் பதிலினைப் புரிந்து கொண்டு புன்னகைபுரிந்து கொண்டு .அங்கிருந்த மற்றவர்களுக்கு அவர் கூறிய பதிலை விளக்கினார்.

'எனக்கு' 'தெரியாது' என்னும் இரண்டு சொற்களுமே குற்றுகரச் சொற்கள்தான் என்றார்.அதற்குப் பிறகு அடிகளாரைக் வினா விடுக்கவும் அஞ்சி பேட்டியை முடித்துக்கொண்டனர்.

கருத்துகள்

seeprabagaran இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்.

முதல்முறையாக உங்கள் இணையதளத்தைப் பார்த்தேன். சிறப்பாக உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்...

சீ.பிரபாகரன்
புதுச்சேரி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீ.பிரபாகரன் அவர்களே...
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
neengal mele avar nerganalinbodhu kooriyadhaga solgreergal. Aanal keelay pettiyai mudithuk kondanar engreergal. ore kullappamaga ulladhu.
blogpaandi இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல். மேலும் இது போல் பல நல்ல தகல்வல்களை பதிவிடவும் முனைவர் அவர்களே.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களின் தகவல்களைப் படித்துப்பார்த்து பாராட்டிக் கூறவேண்டும் என்று ஆசையுடன் மடிகணினியை திறந்தால் என்னைக் கொஞ்சம் முயற்சிபண்ண வைத்து இப்போது வழிக்கு வந்த்து,மறைமலையடிகளாரின் பதில் கூறிய திறம் கண்டு அசந்த அறிஞர்கள் பற்றிய செய்தி தங்கள் தகவல்களால் தெரியப்பெற்றேன்.தேனீப்போன்று தகவல்களைத் திரட்டி தமிழ் நெஞ்சங்க்ளை மகிழ்விக்கும் தங்களின் முயற்சி தொடரட்டும்,
நிகழ்காலத்தில்... இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழறிஞர் மறைமலை அடிகளார் கூறிய பதில் திணற வைக்கும் பதிலே,

இது போன்ற இடுகைகளை இன்னும் எதிர் பார்க்கிறேன் :)

வாழ்த்துகள் சகோதரி
Visu Pakkam இவ்வாறு கூறியுள்ளார்…
சுவையான tidbitக்கு நன்றி (tidbitக்கு தமிழ் என்ன? துணுக்கு?)
அன்புடன்
கி. விசுவநாதன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நிகழ்காலம்...இன்னும் வரும்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ளாக் அவர்களே..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி விசுவநாதன் அவர்களே....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
பெயர்காட்டாமல் மறைந்திருந்து வாழ்த்தும் அன்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
வேலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா. வலையுலக ஜல்லி இல்லாத சிறப்பான வலைப்பூ உங்களது. இந்த நடையைத் தவறவிடாதீர்கள். நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துக்கு நன்றி வேலன் அவர்களே........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்