முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வஞ்சினம்

பழந்தமிழரின் காதலையும் வீரத்தையும் பறைசாற்றுவன சங்க இலக்கியங்கள். சங்க மக்கள் வீரம் செறிந்தவர்களாக, பழிகண்டு நாணுபவர்களாக,பழியைப் போக்கிக் கொள்ள வஞ்சினம் கூறி அதனை நிறைவேற்றியுள்ளார்கள். காதலிலும் அதுபோன்றே நிகழ்ந்துள்ளது. (உண்மைதான் படித்துப் பாருங்களேன். இப்பொழுதும் தான் இருக்கின்றோமே)

பூதபாண்டியன் என்னும் மன்னன் பாண்டியருக்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் பூதபாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டான். அவன் மனைவி பெயர் பெருங்கோப் பெண்டு.இருவரும் புலமையில் வல்லவர்கள். ஒத்த கருத்துடைய இருவரும் அன்பெனும் பிடிக்குள் சிக்கி இனிய இல்லற வாழ்க்கையை மேற்கொண்டனர். ஒருமுறை சேர ,சோழ மன்னர்களுக்கும் இவனுக்கும் பகைமை உண்டாயிற்று. இரு வேந்தர்களும் ,பாண்டியனுடன் போரிட வந்தனர்.அதனை அறிந்து மிக்க சினமுற்ற பாண்டியன் அவ்விரு மன்னர்களையும் துன்புற்று வருந்தும் படி தாக்கி, தேரோடு புறங்காண ஓட வைப்பேன் .அப்படி செய்யேன் ஆயின் பெரிய மையுண்ட அழகான கண்களை உடைய என் துணைவியைப் பிரிவேனாக என்றும்,

ஆரமர் அலறத் தாக்கி தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின்,சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக.(புறநானூறு,71)


அறநெறி மாறாத அன்புடையோர்க்குரிய அவையில் தகுதியில்லாத ஒருவனை அமர்த்தி முறை கெட்டுக் கொடுங்கோல் செய்தேன் ஆகுக!
என்றும்,

அறநிலை திரியா அனபின் அவையத்துத்
திறன்இல் ஒருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக!(புறம்,71)


வையை வளம் அமைந்த ஊர்களில் தப்பாத வருவாய் உடைய மையல் என்னும் ஊரின் தலைவன் மாவன் என்பானும்,வலிய மதில் பெயருடைய எயில் என்னும் ஊரின் உள்ள ஆந்தை என்பானும், அந்துவன் சாத்தன், ஆதன்அழிசி, பெருஞ்சினமுடைய இயக்கன் என்பாரும் உட்பட்ட மற்றவரும் ஆகிய கண்ணைப் போன்ற நண்பர்களுடன் கலந்திருந்து பேசி மகிழ்ந்திருக்கும் அந்நாளையும் நான் இழந்தேன்` ஆவேன் என்றும் ,


வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பில்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மனெயில் ஆந்தையும்,உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பின் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கியான் ஒன்றோ ?சிறப்பும் வளமையும் கடமையும் நிறைந்த பாண்டிய குடியில் அரசாளும் நிலைப் பிறர்க்குரிய வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாகுக.

மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரீஇப்பிறர்
வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே
.

என்றும் வஞ்சினம் கூறுகின்றான்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை இளையவன் என எள்ளி,அவனோடு போர்புரிந்து வெற்றியடையலாம் என எண்ணம் கொண்டு பகைவர்கள் போருக்கு அழைத்தனர். பகைவர்கள் இகழ்ந்துரைத்தைக் கேட்க பொறாத நெடுஞ்செழியன் சினத்தீ கிளர்த்தெழ , படையைத் திரட்டிக் கொண்டு போருக்குப் புறப்படுகின்றான் .அப்பொழுது என்னை இகழ்ந்தவர்களை வெல்லவில்லை என்றால் கல்வி கேள்விகளில் சிறந்த புலமைப் பெற்று திகழும் மாங்குடி மருதன் தலைவராக இருக்கக் கூடிய அவையில் உள்ள புலவர்கள் என்னுடைய புகழையும் நாட்டினுடைய சிறப்பினையும் பாடாது நீங்குவாராக என வஞ்சினம் கூறிப் போருக்கும் புறப்படுகின்றான்.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகென் நிலவரை (புறம்,72)


தலைவி ஒருவள் தலைவன் தன்னையே சுற்றி வருமாறு செய்வேன் எது போல என்றால் எப்படி சூரியன் திரும்பும் பக்கம் எல்லாம் நெருஞ்சிப்பூ சுழல்கின்றதோ அதுபோல என்கிறாள்.அவ்வாறு நான் செய்யவில்லை என்றால்வெற்றிப் பொருந்திய வேலினையும், மழைபோல மிகுந்த அம்பினையும், மேகத்தைப் போன்ற தோற்கிடுக்கினையும் உடைய சோழர்களது ,வல்வீரர்கள் திரண்டுள்ள அரணியையுடைய வல்லத்தின் புறத்தே உள்ள காவற் காட்டினிடத்தே வந்தடைந்த ஆரியர்களின் படையினைப் போல,என்னுடைய நேரிய சந்தினைக் கொண்ட முன்கையில் செறிந்துள்ள இவ்வளையல்கள் சிதைந்து ஒழிந்து போவன ஆகுக என வஞ்சினம் கூறுகின்றாள்.

சுதரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென்வேல்
மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமினை
ஆரியர் படையின் உடைக என்
நேரிறை முன்கை வீங்கிய வளையே (அகம்,336)

கருத்துகள்

கள்ளபிரான் இவ்வாறு கூறியுள்ளார்…
புறம் 71ஐப் பாடியவன் பூதப்பாண்டியனேதானா? பூதப்பாண்டியன் ஒரு புறநானூற்றூப்புலவந்தானா?

பாண்டிய நெடுஞ்செழியன் அப்படிப்பட்ட புலவன் எனப் படித்திருக்கிறேன். பூதப்பாண்டியனைப்பற்றி தெரியவில்லை.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
விளக்கங்கள் புரியும்படியாக இருந்தது...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
பாண்டியன் அறிவுடைநம்பி,பாண்டியன் ஆரியப்படை கடந்த செழியன்,பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பாண்டிய மன்னர்களும் புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னர்களும் புலவர்களாக விளங்கியதை அறுமையாக விளக்கிக் கூறினீர்கள். நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…