பட்டத்தினால் என்ன பயன்?

உடல் சுக்காக உள்ளம் சுடரா இடமறிந்து காலமறிந்து உழைத்துக்கொண்டிருந்தால் மண்புழுவுக்குக் கூட மகுடாபிஷேகம் சூட்டலாம் என்பான் ஒரு கவிஞன்.

ஒருமுறை ஆசாரிய வினோபாபா தாம் பெற்றிருந்து உயர் கல்விக்கான பட்டச் சான்றிதழ்களைத் தீயில் இட்டு கொளுத்தினாராம்.அப்பொழுது அவருடைய தாயர்,அரும்பாடுப்பட்டு படித்துப் பெற்றபட்டங்களை இப்படி தீயிலிட்டுக் கொளுத்துகிறாயேப்பா உனக்கு புத்தி எதுவும் கெட்டுப் போய்விட்டதா?என்று கடிந்து கொண்டாராம்.

அதைக்கேட்ட வினோபாபா சிரித்துக்கொண்டு அம்மா நாம் எதிர் காலத்தில் வாழப்போவது சுதந்திர பாரதத்தில்,சுதந்திர சர்க்காரில் வெள்ளையர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்களுக்கு மதிப்பு இருக்காது.தவிர வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை.கடுமையான உழைப்புத்தான் வாழ்க்கையை உயர்த்தும்.அதனால் வெள்ளைக்காரர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்கள் சாம்பலாகிப் போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றாராம்.
என்றுமே உழைத்தால் தான் வாழமுடியும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆனால் இன்றளவும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று வெளிநாட்டு பல்கலைகளில் பணத்தைக் கொண்டு போய் கொட்டி படித்துவந்தால்தானே மதிக்கிறோம். ஓருவேளை இது சுதந்திர பாரதம் இல்லையோ?
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//bxbybz October 25, 2009 6:58 PM

ஆனால் இன்றளவும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று வெளிநாட்டு பல்கலைகளில் பணத்தைக் கொண்டு போய் கொட்டி படித்துவந்தால்தானே மதிக்கிறோம். ஓருவேளை இது சுதந்திர பாரதம் இல்லையோ?//

ரிபீட்ட்ட்ட்
விஜய் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

விஜய்
Prapa இவ்வாறு கூறியுள்ளார்…
//உழைத்தால் தான் வாழமுடியும்.//

நிச்சயமாக இதற்கு மாற்று கருத்து கிடையாது....
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு...


நேரம் இடம் கொடுக்காமையால் சில காலம் உங்கள் பதிவுப்பக்கம் வரமுடியவில்லை
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
உண்மைதான் அக்கரைப் பச்சையில் இக்கரையை மறந்து விடுகிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்