சேலத்தில் லினக்ஸ் கருத்தரங்கம்....

விசுவல் மீடியா நிறுவனம், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் நிறுவனம், மற்றும் சங்கமம்லைவ்.காம் ஆகியவை இணைந்து நடத்தின ஒருநாள் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று சேலத்தில் நடைப்பெற்றது.இதில் 100 மேற்பட்ட பயனாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நண்பர் செல்வமுரளி அவர்கள் இது தொடர்பான மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள்.அவரிடம் இக்கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்குமா என்று வினவினேன்.கண்டிப்பாக பயனுள்ளதா இருக்கும் என்றார்.சரி சென்று வரலாம் என்று நேற்று சொன்றோம் பயனுள்ளதாக இருந்தது.
உபந்து-தமிழ் ஒருங்கிணைப்பாளர் ராமதாசு அவர்கள் உபந்து பற்றிய அறிமுகம் கொடுத்தார்,அதனைத்தொடர்ந்து கணினியில் உபந்துவை எவ்வாறு பதிவிறக்கி கொள்ளுவதென ஈரோடு மாணவர் கனகராசு விளக்கமளித்தார்.அவர் அளித்த விளக்கத்தின் அடிப்பதையில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அது தொடர்பான வினா கேட்கப்பட்டது.அதற்கு விடையிறுத்த மாணவருக்கு ஒரு பரிசினையும் வயங்கி சிறப்பித்தார்கள்.
மதியத்திற்கு மேல் கணினியில் உபந்து நிறுவிய பிறகு அதில் மெனபொருள்களை எப்படி இணைப்பது,அவற்றை எங்கெல்லாம் பெறலாம் என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பெற்றன.
கே.ஜி.சொல்யூசன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் லினக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையம்வழி பழைய கணினிகளையும் புதிய கணினிகளின் வேகத்தில் இயங்க வைக்கும் தொழில்நுட்பம் குறித்து செய்திப் படத்தின் துணையுடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.இது மிக பயனுள்ளதாக இருந்தது.
செல்வமுரளி அவர்களின் புதிய முயற்சி சிறப்பாக அமைந்திருந்து.அது போன்று ஏற்பாடு செய்துகொடுத்த அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.அவர் பணி மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.
கருத்துகள்
எங்கள் கல்வி வலயத்தி்ல் நாங்கள் லினக்ஸ் சேவர் ஒன்றை நிறுவி அதன் ஊடாக சுமார் 20 கணினிகளை இணைக்க உள்ளோம். அதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைளை கூறுவீர்களா,?