முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதியைப் பற்றிய நினைவலை.....


முண்டாசு கவிஞனாய், விடுதலையில் மூர்கனாய் ,முறுக்கிய மீசையுடன் ,தமிழின் காதலனாய்,தமிழகத்தின் தவப்புதல்வனாய் தோன்றியவன் பாரதி.
சுவை புதிது,பொருள் புதிது வளம்புதிது,
சொற்புதிது,சோதிமிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை
பாரதியுனுடைய கவிதை.

உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்
புது செறி காட்டியவன் பாரதி

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்தால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்,
தமிழகம்,தமிழுக்குத் தரும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.

தமிழுக்குப் புத்தொளி பாய்ச்சப் பிறந்தவன் பாரதி எனப் பாடுவர் பாவேந்தர்.

'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணும்'
என்றான் பாரதி,
இன்று அந்த தமிழின் நிலை ,தமிழ் பேசினால் தீட்டு என்று பேசமறுப்போர் பெருபான்மையினராகி விட்டனரே....
தமிழ் நாட்டில் தமிழ் முழங்காமல் தமிங்கிலம் அல்லாவா முழங்கி கொண்டு இருக்கின்றது.
பிற மொழிகளை யாரும் எப்பொழுதும் வெறுக்கவில்லை,பல மொழிகளை அறிந்துகொள்ள வேண்டும்.அது தவறில்லை.நாம் தாய்மொழியை மறவாமல் இருக்க வேண்டும்.

பிற மொழியைத் தவறு இல்லாமல் பேசவேண்டும் என்பதில் எத்தனைக் கவனாமாக

இருக்கின்றோம்.ஏன் தம் தாய் மொழியைத் தவறில்லாமல் பேச வேண்டும் என்பதில் கவனம் கொள்ளவதில்லை.அது தான் வேதனை.

தமிழ மக்களுக்கு இயற்கைக் கடவுள்
நிலமும் வச்சான்,
பலமும் வச்சான்
நிகரில்லா செல்லவமும் வச்சான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
அதுதான்
புத்தியில்லை! புத்தியில்லை!
(இதில் நாம் மொழியும் வச்சான் நல்ல தமிழ் மொழியும் வச்சான் சேர்த்துக் கொள்ளலாம்)

என்று பாரதி பாடினான்.இன்றும் அந்நிலையே தொடர்கின்றதே....
பாரதியின் நினைவு நாளில் தமிழராகிய நாம் ஒரு சபதம் ஏற்போம்
தமிழை உயர்த்திட
தமிழனாய் மிளிர்ந்திட
நித்தம் உழைப்போம்...
நிமிர்ந்து நடப்போம்....

கருத்துகள்

முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ மக்களுக்கு இயற்கைக் கடவுள்
நிலமும் வச்சான்,
பலமும் வச்சான்
நிகரில்லா செல்லவமும் வச்சான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
அதுதான்
புத்தியில்லை! புத்தியில்லை/

உண்மைதான்!
முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை! தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் குணா.....
உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) இவ்வாறு கூறியுள்ளார்…
பாரதியின் நினைவு நாளில் தமிழராகிய நாம் ஒரு சபதம் ஏற்போம்
தமிழை உயர்த்திட
தமிழனாய் மிளிர்ந்திட
நித்தம் உழைப்போம்...
நிமிர்ந்து நடப்போம்....
ராம்ஜி.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை பதிவு முனைவர். நன்றிகள் பல.

ஆனால் இன்றும் இளைஞர்கள் இடையே தமிழ் ஆர்வம் உள்ளது, அன்றக்கு இணையத்திற்கும் வலை பதிவிற்கும் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளோம்.

பல பதிவர்கள் அலுவலகங்களில் பெரிய பொறுப்புகளில் இருந்து, ஆங்கிலத்தில் உரையாடினாலும் வலைப் பதிவில் அழஅகான தமிழில் எழுதி வருகின்றனர்.
.
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு நினைவுப் பதிவு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

அம்பல் அலர்

அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.

அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியா…