புதிய புத்தகம் பேசுகிறது

புத்தக அறிமுகத்திற்கென ஒரு மாத இதழை நடத்தி,வாசகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுத் திகழும் பதிப்பகம் பாரதிபுத்தகாலயம் ஆகும்.இந் நிறுவன்ம ஆண்டு தோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகின்றது.கொண்டாதுவது மட்டுமில்லாமல்,ஆய்வாளர்களிடையே கட்டுரையினைப் பெற்று,அதனை நூலாக வெளியிடுவது பெரும் சிறப்பு.
கடந்த ஆண்டு தமிழில் உள்ள சிறந்த,முதன்மையான நூல்கள் குறித்தும் ,சில நூல்கள் சமூகத்தளத்தில் மக்களால் எவ்வாறு வாசிப்புக்கு உள்ளக்கப்பெற்றுள்ளது என்பது குறித்தும் கட்டரைகளைத் தொகுத்து சிறப்பு மலராக வெளியிட்டது.அம் மலர் இலக்கியம் சார்ந்த இலக்கியவாதிகளால் பெரும் ஆதரவு பெற்றும்,சமகால சிறந்த வரலாற்று ஆவணமாகவும் திகழ்ந்தது.
இந்த ஆண்டும் உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு,சுவடியிலும் ,செப்பேட்டிலும் ,கல்வெட்டிலும் இருந்த தமிழை அச்சேற்றிய பிறகு எத்தனையோ,நுல்கள் அச்சேறியுள்ளன.தமிழ் நூல்களை ,பல்வேறு நிறுவனங்களும்,தனி மனிதர்களும் அச்சேற்றி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.அதனை வெளிகொணரும் நோக்கில் பாரதி புத்தகாலயம் ஆய்வாளர்களிடையே கட்டுரைகளைப் பெற்று நூலாக்கியுள்ளனர்.
இம்மலருள் தனிமனித பதிப்புகள் குறித்து 11 கட்டுரைகளும்,பொதுவாக 27 கட்டுரைகளும்,நிறுவனம் சார்ந்த பதிப்புகள் குறித்து 6 கட்டுரைகளும் ஆக 44 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் பதிப்புத்துறை குறித்த சிறந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றது.
நூல் வேண்டமென விழைவோர்
பாரதி புத்தகாலயம்
421,அண்ணாசாலை
சென்னை - 600018
என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி
044-2433.2424,2433,2924.
மின்னஞ்சல்
thamizhbook@gmail.com
வலை தளம்
www.tamilzhbooks.com
கருத்துகள்
நீங்கள் எழுதிய இணையம், கணினி தொடர்பான புத்தகத்தைப் பார்வையிட விரும்புகிறேன். அனுப்பிவைத்தால் அதனை விருபா இணையத்திலும் www.viruba.com இணைத்துவிடுகிறேன்.
உங்கள் மின்-அஞ்சல், தொலைபேசி எண் கிடைக்காதமையால் இவ்வழியே தொடர்பு கொள்கிறேன். பொதுவில் அனுமதிக்கத் தேவையில்லை.
- து.குமரேசன்