முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடிவுற்று ஏமாக்க......


விடிவுற்று ஏமாக்க என்ற சொல்லிற்குப் பொருள் துன்பம் நீங்கி இன்புறுக என்பதாகும்.பொதுவாக நாம் வழக்கில் என் வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் தீர்ந்து இன்பம் வருமோ தெரியவில்லையே என்று கூறுவது வழமை,அதேபோல எனக்கு எப்பொழுது விடியுமோ,விடிவுகாலம் வருமோ தெரியவில்லையே என்று புலம்புவதையும் கேட்டிருப்போம்.ஆகையால் விடிவு என்பது இருள் நீங்குவதைக் குறிக்கும்.இங்கு குறிப்பாக விடிவு என்ற சொல் துன்பம் நீங்குதலைக் குறிக்கும்.

சங்க நூல்களில் ஒன்றான பரிபாடலில்,மதுரை மக்கள் வையை ஆற்றுக்குப் புனலாடச்செல்லுகின்றனர்,அப்பொழுது அவர்கள் வையை ஆற்றினை நோக்கி,இன்று நீராடி இன்பம் அடைந்து போல என்றும் உன்னை விட்டுப் பிரியாமல் நீராடி துன்பம் நீங்கி இன்புறுவோம் என்று பாடுகின்றனர்.

பேஎம்நீர் வையை,
நின்பயம் பாடி விடிவுற்று ஏமாக்க ;
நின்படிந்து நீங்காம் இன்றுபுணர்ந் தெனவே.(பரிபாடல் 7)

இன்று இச் சொல்லாட்சியை நாம் பயன்படுத்துவதில்லை.எத்தனையோ சொற்கள் நம்மைவிட்டுச் சென்று கொண்டு இருக்கின்றன.

கருத்துகள்

ராம்ஜி.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
nice, thanks for sharing
சி.கருணாகரசு இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரை சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. பயனுள்ள பதிவு. அருமை.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி ராம்ஜி.....
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வர்கைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கருணாகரன் அவர்களே........
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நாலு வரில நச்சுனு இருக்கு
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்........
சுப.நற்குணன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் முனைவர் அவர்களே.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வரலாறே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது உங்கள் இடுகை.

ஒரு சொல் காணாமல் போகும்போது அதனுடன் சேர்ந்த வரலாறும் வாழ்வுமே தொலைந்துபோகிறது.

நாம் மெல்ல மெல்ல மிகப்பெரும் இழப்புகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
முனைவர் சே.கல்பனா இவ்வாறு கூறியுள்ளார்…
//நாம் மெல்ல மெல்ல மிகப்பெரும் இழப்புகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்//வாருங்கள் சுப.ந அவர்களே .......ஆம் நம் தமிழிலக்கியத்தில் உள்ள பல சொற்களை இழந்து கொண்டு இருக்கின்றோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…

அம்பல் அலர்

அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.

அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியா…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…