மழலை இன்பம்


குழந்தையை விரும்பாத உயிர்களே இல்லை.குழந்தைகளோடு இருக்கையில் நாமும் ஒரு குழந்தையாக மாறிவிடுவோம்.குழந்தை செல்வத்தின் அருமையை உணர்ந்து வள்ளுவப் பெருந்தகை பெருமவற்று யாம் அறிவது இல்லை அதாவது பெறத் தகுந்த செல்வங்களில் மக்கள் செல்வத்தை விட வேறு செல்வத்தை யாம் மதிப்பதில்லை என்று கூறுகின்றார்.

புறநானூற்றுப் பாடல் ஒன்று ,எத்துணைப் பெரிய செல்வந்தராக இருந்தாலும்,ஏன் நாட்டுக்கே மன்னனா இருந்தாலும் குழந்தை இன்பம் கிடைக்க வில்லை என்றால் அவர்கள் வாழ்ந்தும் பயனில்லை என்று கூறுகின்றது.குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளுமே நமக்கு எல்லையில்லா ஆனந்ததைக் கொடுக்க கூடியது.

படைப்பு பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம் வாழும் நாளே.

முதுமொழி காஞ்சி என்ற நூலும் மக்கள் பேறே தலையா செல்வம் எனப் பாடுகின்றது.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
மக்கட் பேற்றிற் பெறும் பேறில்லை

குழந்தை இன்பமே நமது துயரங்களை எல்லாம் போக்க கூடியது என்பதைக் கம்பர் ,

மன்னர் ஆனவர் அல்லர்மேல் வானவர்க்கு அரசாம்
பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர்
பின்னு மாதவந் தொடங்கிநோன் பிழைத்தவர் அல்லர்
சொன்ம றாமகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்

கம்பராமயணத்தில் அழகா பதிவுசெய்துள்ளார்.
சிறப்பான வாழ்க்கைக்கு குழந்தை சிறந்த செலவம் என்கிறார் பாரதியார்.
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ



குழந்தையின்பத்தை,மழலை மொழியை நுகராதவர்கள் தான் குழலும் யாழும் இனிமை என்று கூறவர்.குழந்தையின் மழலைமொழி ஆயிரம் கதைகளைச் சொல்லும்,புரியவில்லை என்றாலும் அதில் ஒரு இன்பம் மண்டி கிடக்கும்.
இதனை குறள்மொழி,
குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்


என்றும் புறநானூற்றுப் பாடல்,

யாழோடு கொள்ளா பொழுதொடு புணரா
பொருளறி வாரா வாயினும் தந்தையருக்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை

கலித்தொகையும்
ஐய,கமரு நோக்கின்
அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது

பாரதியாரும்,
சொல்லு மழலையிலே
துன்பங்கள் தீர்த்திடி வாய்;
முல்லை சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்

என்றும் மழலைமொழியின் சுவைக்கு வேறு ஏதும் ஈடில்லையெனக் கூறுகின்றது.

குழந்தைகள் தங்களது கையினால் பிசைந்து மேனியெங்கும் இறைத்துக்கொண்டு உண்ணும் அழகே தனி.அவர்கள் கையினால் பிசைந்த உணவு அழிழ்துக்கு ஒப்பானது என்பர் வள்ளுவர்
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்

பெருமாள் திருமொழியில் கண்ணன் உண்ண்ட மிச்சல் கிடைக்கவில்லையே எனப் பெரியாழ்வார் வருந்தி பாடுவார்.

வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன்


இது என்கவிதை
மாசி மலர்ந்த மல்லிகை மலரே
ராசி பெற்ற என்தம் மகளே
ஊசி முல்லைப் பல்லை காட்டி
பேசி மயக்கும் இன்ப தேனே
மழலை உந்தன் சொல்லின் முன்பு
குழலும் இனிதோ யாழும் இனிதோ

கருத்துகள்

சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
மதிப்புமிகு முனைவர் அவர்களே,

வணக்கம். முதன்முறையாகத் தங்களுக்கு மறுமொழி எழுதுகிறேன்.

தங்களின் பதிவுகள் பல என் மனதை மிகவும் கவர்ந்தன. 'மழலை இன்பம்' அடடா சொல்லொனா இன்பம்.

தங்களின் அருமைப் படைப்புகளைத் தொடர்க!

இனி தொடர்ந்து வருவேன்.நன்றி!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன் - மலேசியா.
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் தோழர் சுப.ந.அவர்களே,
வணக்கம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.அடிக்கடி வந்து செல்லுங்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சந்ரு.......
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//பேசி மயக்கும் இன்ப தேனே
மழலை உந்தன் சொல்லின் முன்பு
குழலும் இனிதோ யாழும் இனிதோ//

மிக அருமை...

சற்றுமுன்தான் குழந்தகளை உலகத்தை பற்றி நினைத்து பார்த்தேன்.. உங்கள் இடுகையும் அதே உலகம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. உங்களின் கவிதையும் அருமை அம்மா
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//மிக அருமை...

சற்றுமுன்தான் குழந்தகளை உலகத்தை பற்றி நினைத்து பார்த்தேன்.. உங்கள் இடுகையும் அதே உலகம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. உங்களின் கவிதையும் அருமை அம்மா//



மிக்க நன்றி சேகரன்..........
mohamedali jinnah இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு சான் வயிருக்கு அது இல்லாமல் மற்ற நாடு சென்றே குடும்பம் வாழ்வு இல்லாமல் இன்பம் இழ்க்கப்படுகிறது
அதன் இன்பம் இன்னும் அதிகம் தாத்தாவுக்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்