கள்வன் மகன்



சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேலைநாட்டினரின் வருகையால் நமது நாட்டில் வளர்ச்சியுற்றதாக கருத்து உள்ளது.உரைநடை வடிவில் உள்ள இலக்கிய சிறுகதைகள் வேண்டுமென்றால் வந்து என்று கூறலாம் ஆனால் சிறுகதை படிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடிய செய்யுள்களை நம்முடைய சங்க இலக்கியங்களில் காணலாம்.

சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை.இந்நூலில் குறிஞ்சிக்கலிப் பகுதில் கபிலரால் பாடப்பட்ட ஒரு பாடலைப் படிக்கும் போது நமக்கு ஒரு சிறுகதையினைப் படித்த உணர்வும் ஒரு நாடகத்தைப் பார்த்தவுணர்வும் தோன்றும்.

இப்பாடலில் தலைவி தோழியிடம் ,தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக,கபிலர் 16 அடிகளில் அமைந்து பாடியுள்ளார்.

தலைவி தோழியிடம் ,அழகிய ஒளி பொருந்திய வளையகள் அணிந்த என் அன்புக்கினிய தோழியே நான் கூறுவதை சற்றுக் கேட்பாயா?

நாம் சிறு வயதில் வீதியில் விளையாடி திரியும் போது,நல்ல தேர்ந்த கட்டக் கலைஞர்களைப் போல மணவீடுகட்டி விளையாடுவோம்.அப்பொழுது நாம் கட்டிய மணல் வீட்டினைக் காலால் இடறி கலைத்து மிதித்து விட்டு,தலையில் நாம் வைத்திருக்கும் பூக்களையும் பிய்த்து எறிந்துவிட்டு,பூங்காவனத்தில் பந்து வைத்து விளைடும்போது அதனையும் பறித்துக் கொண்டு செல்வானே,அவன் நேற்று எங்கள் வீட்டிற்கு வந்தான் உனக்கு தெரியுமா?

அப்பொழுது நானும் அன்னையும் மட்டுமே வீட்டில் இருந்தோம்.வந்தவன் என்ன செய்தான் தெரியுமா? நல்ல பிள்ளையாக நடித்துக்கொண்டு,தண்ணீர் தாகத்தால் நா வரண்டு விட்டது தண்ணீர் தாருங்கள் என்று கூறினான்.அம்மாவும் அதனை நம்பி அழகிய சொம்பில் தண்ணீர் வார்த்துக் கொடுத்து,அவனிடம் கொண்டு கொடுத்து வா என்றாள்.

நானும் கொடுக்கச் சென்றேன். தண்ணீரைக் கொடுத்தால் அதனை வாங்காமல் என் முன் கையை முரட்டுத் தனமாய் பற்றி விட்டானடி.நான் அப்படியே பதறி போய் கத்திவிட்டேன்.
என் கத்தலைக் கேட்டு அம்மா ஒடி வந்து என்ன நிகழ்ந்து ஏன் இப்படி கத்தினாய் என்று கேட்டார்.என்னால் உண்மையைச் சொல்ல முடியவில்லை.அவனைக் காட்டிக் கொடுக்கவும் மனம் வரவில்லை என்ன செய்வதென எண்ணி,பொய்சொல்ல துணிந்து, தண்ணீர் குடிக்கும் போது புரையேறிவிட்டதால் கத்தினேன் என்று பொய் கூறி அவனைக் காப்பாற்றினேன்.

உடனே அம்மா இதற்குப் போய் இப்படி கத்தலாமா என்று கூறிவிட்டு,பதற்றப்படாமல் குடிப்பா என்று அவன் முதுகை நீவிவிட்டாள்.

அவனோ என் உயிரைக் கொல்லவதுபோல் தன் கடைக்கண்ணால் பார்த்துச் சிரிக்கின்றான்.சரியான களவன் மகன் அவன்.என்னுயிரைக் கவர்ந்து சென்றான். என்று தோழியிடம் தலைவி ஒருநாள் நடந்த நிகழ்ச்சியினை ஒவியமாகச் சித்தரிக்கின்றாள்.

இதனை படிக்கும் போது ஒரு சிறுகதையினைப் படிப்பது போன்றே தோன்றுகிறது.இதோ அந்த செய்யுள், படித்துப் பாருங்களேன்.இன்பமாக இருக்கும்.

சுடர்தொடீஇ! கேளாய்-தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற்சிதையா,அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி,மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா,இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு,அன்னை
அடர்பொன் சிரகத்தால் வாக்கி,சுடர்இழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள்;என யானும்
தன்னை அறியாது சென்றேன்,மற்று என்னை
வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு,
அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்,
உண்ணுநீர் விக்கினான் ! என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,நகைக்கூட்டம்
செய்தான்,அக்கள்வன் மகன்.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இடுகை நன்றாகவுள்ளது முனைவரே...

ஓவியம் மிகவும் அருமையாகவுள்ளது..

தங்கள் இடுகையை இன்று தான் பார்த்தேன்..

ஓவியம் மிகவும் பொருத்தமாகவுள்ளது...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டி பட்டாம்பூச்சி விருதளித்துள்ளேன்....

மேலும் விவரங்களுக்கு
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_16.html


வாழ்த்துக்கள்....
குடந்தை அன்புமணி இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் வலைத்தளத்திற்கு இன்றுதான் வருகிறேன். அருமையாக தமிழ் விளக்கங்கள் தரும் தங்கள் வலைத்தளத்தை பின்தொடர விருப்பம். விட்ஜெட் இணையுங்கள்.
குடந்தை அன்புமணி இவ்வாறு கூறியுள்ளார்…
பாலோவர் விட்ஜெட் அமைக்க வழிமுறைகள் தரும் வலைத்தள முகவரி...
http://shanthru.blogspot.com/2009/07/followers_17.html
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
குணா அவர்கள் இடுகையை தொடர்ந்து சங்கத்தமிழை இனி உங்கள் வாயிலாகவும் அறிய வாய்பமைந்திருக்கிறது... நன்றி கல்பனா அவர்களே..இன்று எழுத்தோசைக்கு வரவும்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவை மிஞ்சும் அளவு படம் படமே பதிவை சொல்வது போல் அழகாயிருக்குங்க....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்கள் ஃப்ளோயர்ஸ் ஆக எங்கு add ஆவது எனத்தெரியவில்லை..அதனால் தான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிக்க இயலவில்லை கல்பனா....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா.பட்டாம்பூச்சி விருது அளித்தமைக்கு நன்றிகள் பல.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க அன்புமணி உங்கள் வருகை மகிழ்வூட்டுகிறது.உங்கள் கருத்துக்கு நன்றி.பின்தொடர்பவர்களை இணைக்கின்றேன்.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இளமை விகடனில் இவ்விடுகை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.........
http://youthful.vikatan.com/youth/index.asp
மகிழ்நன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கொஞ்சும் காதல் பதிவு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகிழ்நன்.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக விளக்கியுள்ளது பாராட்டுகுறியது
Shan Nalliah / GANDHIYIST இவ்வாறு கூறியுள்ளார்…
GREAT! PLEASE CONTINUE YOUR SERVICES!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்