இணைமொழிகள்

நேற்று அகரத்தில் தொடங்கும் சில இணை மொழிகளைப் பார்த்தோம் இன்று ஆகாரத்தில் தொடங்கும் சில இணைமொழிகள்.உங்கள் பக்கத்தில் வழங்கப்பெறும் இதனைப் போன்ற இணைமொழிகள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே.


ஆக்கமும் கேடும் அனைவருக்கும் உண்டு.
ஆக்கியரித்துப் போடுகிறவள் அம்மா.
ஆட்டமும் பாட்டுமா இருக்கிறது அங்கு.
ஆடல் பாடல் கண்டு மகிழுங்கள்.
காலை ஆட்டி அலைத்து வருகிறாள்.

தூணை ஆட்டி அசைத்துப் பார்த்தேன்.
ஆடிப்பாடிச் செல்லுங்கள்.
ஆடியசைந்து நடக்கின்றான்.
ஆடையணி யலங்காரம் வேண்டும்.
ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறு.

ஆண்டான்அடிமை வேறுபாடில்லை.
ஆதாளி பாதாளியாய் இருக்கிறது.
ஆதியந்தம் இல்லாதவன்.
ஆய்ந்தோய்ந்து பார்த்து நட்பு கொள்ள வேண்டும்.
நேற்றிரவு கண்ணனுக்கு ஆயிற்று போயிற்று என்று கிடந்தது.

அவன் ஆயிற்றா போயிற்றா என்று அரட்டினான்.
ஆலே பூலே என்று அலப்பிக்கொண்டு இருக்கிறான்.
ஊர் முழுதும் ஆழும்பாழுமாய்க் கிடக்கிறது.
ஆளும் தேளும் அற்ற இடம்.
அவனை ஆற்றி தேற்றி வை.
ஆற அமர காரியம் செய்ய வேண்டும்.
ஆனைக்கும் பூனைக்கும் உள்ள தூரம்.


நாளை தொடரும்...............

கருத்துகள்

सुREஷ் कुMAர் இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் குணாவுடன் இலக்கிய போர்புரிய இன்னொரு முனைவர் கெடச்சுட்டாங்களா..

ரைட்டு..
सुREஷ் कुMAர் இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் குணாவுடன் இலக்கிய போர்புரிய இன்னொரு முனைவர் கெடச்சுட்டாங்களா..

ரைட்டு..
ப்ரியமுடன் வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
madem உண்மையிலே இவ்வளவு இணை ச்சொற்களா?

ஓட்டமும் நடையும்
sakthi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆக்கமும் கேடும் அனைவருக்கும் உண்டு.
ஆக்கியரித்துப் போடுகிறவள் அம்மா.
ஆட்டமும் பாட்டுமா இருக்கிறது அங்கு.
ஆடல் பாடல் கண்டு மகிழுங்கள்.
காலை ஆட்டி அலைத்து வருகிறாள்.


அருமை மா
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழின் சிறப்புகள் தெரிந்து இருந்தாலும். உங்கள் மூலமாக பல விடயங்களை அறிய முடிகின்றது நன்றிகள்....
தமிழ் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுரேஷ் குமார்.ஏன் பெயரை இப்படி வைத்துள்ளீர்கள்.மொழி ஒற்றுமையோ?.......
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க வசந்த் உங்கள் வருகைக்கு நன்றி.இன்னும் நிறைய உள்ளது தொகுப்போம் தெரிந்த்தைக் கூறுங்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க சக்தி உங்கள் வருகைக்கம் கருத்துக்கும் நன்றிகள் பல.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சந்ரு.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாருக திகழ் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.உங்களுக்குத் தெரிந்த இணைமொழிகளை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துகொள்ளுங்கள்
வால்பையன் இவ்வாறு கூறியுள்ளார்…
வலைச்சரம் பார்த்து வந்தேன்!
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
"உழவன்" "Uzhavan" இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தையும் யாம் ரசித்தோம்
Suresh Kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அவன் ஆயிற்றா போயிற்றா என்று அரட்டினான்.
ஆலே பூலே என்று அலப்பிக்கொண்டு இருக்கிறான்./////////////

இதெல்லாம் தமிழ் தானா மேடம் புரியவேஇல்லை
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க வால்பையன் உங்கள் வருகைக்கு நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க உழவன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுரேஷ் அனைத்தும் தமிழ்தான் ஐயம் வேண்டாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்